மதிப்பிற்குரிய ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஸ்ரீ சந்தோஷ் குமார் கங்வார், பிப்ரவரி 5 அன்று ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார். அவர் பரமஹம்ஸ யோகானந்தர் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய அறைக்குச் சென்று தனது மரியாதையைச் செலுத்தியதோடு, ஸ்மிருதி மந்திரில் தியானம் செய்து ஆழந்த அக-அமைதியை அனுபவித்தார்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் (YSS) மூத்த சன்னியாசியான சுவாமி ஈஸ்வரானந்த கிரி, YSS-இன் ஆன்மீகம் மற்றும் மனிதநேயச் செயல்பாடுகள், புனிதமான குரு-சீடர் பரம்பரை மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் போதனைகள் குறித்து ஆளுநருக்கு சுருக்கமாக கூறினார். சமூகத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்காக YSS ஆற்றி வரும் பங்களிப்பை ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.
மதிப்பிற்குரிய ஆளுநருக்கு ஒரு யோகியின் சுயசரிதம், பகவத் கீதா: காட் டாக்ஸ் வித் அர்ஜூனா, ஆன்ம அனுபூதிக்கான பயணம் ஆகிய புத்தகங்களும், YSS வெளியிட்ட நாட்காட்டியும் பரிசாக வழங்கப்பட்டன.
ஆசிரமத்திற்கு வருகை தர வேண்டும் என்பது தனது நீண்ட கால விருப்பம் என்று ஆளுநர் பகிர்ந்து கொண்டார். அவர் சுவாமி ஈஸ்வரானந்தாவை ராஜ் பவனுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன், மீண்டும் ஒருமுறை ஆசிரமத்திற்கு வந்து அதன் அமைதியான சூழலில் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஒரு யோகியின் சுயசரிதம் மற்றும் பகவத் கீதா: காட் டாக்ஸ் வித் அர்ஜூனா ஆகிய நூல்களை சுவாமி ஈஸ்வரானந்தா, ஸ்ரீ கங்வாருக்கு பரிசளிக்கிறார்.…




















