ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரம் – ஜனவரி 31, 2021

26 ஜனவரி, 2021

ஆன்லைன் தியான கேந்திராவிற்கு வரவேற்கிறோம்

“கூட்டுத் தியானம் என்பது புதிய ஆன்மீக சாதகர்களையும் அத்துடன் மூத்த சாதகர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை. சேர்ந்து தியானம் செய்வது குழுக் காந்தசக்தியின் கட்புலனாகாத பரிமாற்ற அதிர்வால் குழுவின் ஒவ்வோர் உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் விகிதத்தையும் பெருக்குகிறது.”

ஜனவரி 31, 2021, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆரம்ப 3 மணி நேர தியானத்துடன் கூடிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆன்லைன் தியான கேந்திரத்தின் உத்வேகமூட்டும் திறப்புவிழாவை மகிழ்ந்தனுபவிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். இந்த தியானத்தின் முதல் ஒரு மணி நேரம் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப்) -ன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி அவர்களால் நடத்தப்பட்டது. எஞ்சிய பகுதி ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசியால் வழிநடத்தப்பட்டது.

The ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரம் சுவாமி சிதானந்தரால் அக்டோபர் 2019ல் தொடங்கப்பட்டஎஸ் ஆர் எஃப் ஆன்லைன் மெடிடேஷன் சென்டர், -ன் ஒத்த பகுதியாக இருக்கும். (“தியான கேந்திரம்” என்பது “மெடிடேஷன் சென்டர்” என்ற ஆங்கிலச் சொல்லின் இந்தி வடிவம்.) அதன் பின்னர் கூட்டுத் தியானங்களின் பலன்களையும் அருளாசிகளையும் அனுபவிக்க ஒரு நிதானமாக வளர்ந்துவரும் எண்ணிக்கையிலான எஸ் ஆர் எஃப் மற்றும் ஒய் எஸ் எஸ் சாதகர்கள் ஆன்லைனில் இணந்து வருகின்றனர்.

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரம் ஆன்லைன் கூட்டுத் தியானங்களையும், ஒய் எஸ் எஸ் பக்தர்களுக்கு உதவும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஏகாந்தவாச மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் வழங்குவதன் மூலம் இந்த அருளாசிகள் கிடைப்பதை மேலும் நீட்டிக்கச் செய்கிறது. இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் ஒரு முழுமையான நிகழ்ச்சி நிரல் கால அட்டவணையைப் பார்க்கவும் எமது ஆன்லைன் தியான கேந்திரப் பக்கத்திற்கு வருகை தரும் படி அழைக்கிறோம்.

நிகழ்ச்சி நிரல் கால அட்டவணை மற்றும் ஏனைய பங்களிப்புகள்

கால அட்டவணைப் பக்கத்திற்கு வருகை தருவதின் மூலம் ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரத்தால் வழங்கப்படும் ஒய் எஸ் எஸ் சன்னியாசி -யால் வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சிகளிலும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

எதிர்காலத்தில், பின்வரும் பல்வேறு தியான வடிவ நிகழ்ச்சிகளைச் சேர்த்து எமது ஆன்லைன் பங்களிப்புகளை விரிவாக்கலாம் என நம்புகிறோம்: குறிய, நெடிய, கீர்த்தனைகளுடன், இன்னபிற. முடிந்த அளவு விரைவாக, அவற்றை பல இந்திய மொழிகளில் வழங்கத் துவங்கவும் செய்வோம். வரும் மாதங்களில் நாங்கள் மறைநூல் மற்றும் ஒய் எஸ் எஸ் பாட ஆய்வுக் குழுக்களை ஆரம்பிக்கவும் திட்டமிடுகிறோம்.

நீங்கள் ஆனந்தமான திறப்புவிழா நிகழ்ச்சியை மகிழ்ந்தனுபவிக்கிறீர்கள் என்றும், இப்போதிருந்து உங்களால் கூட்டுத் தியானங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் வழக்கமாகக் கலந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறோம்.

நிகழ்ச்சியின் ஊடக விளம்பரம்

இதைப் பகிர