ஆண்டுதோறும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, இந்தியாவின் அன்பிற்குரிய அவதாரமான பகவான் கிருஷ்ணனின் அவதார தினமாகிய ஜன்மாஷ்டமியை கொண்டாடுகிறது. அவன் தம் போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன. இந்த மகிழ்ச்சியான வருடாந்திர கொண்டாட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16, சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த சிறப்பு நாளில், YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்தில் இருந்து இரவு 7:30 மணி முதல் 10:30 மணி (Indian Standard Time) வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சிறப்பு ஜன்மாஷ்டமி மூன்று மணி நேர தியானம் வழிநடத்தினார். தியானத்தின் போது, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகளின் கீர்த்தனைக் குழு, ஸ்வாமி சிதானந்தாஜியுடன் நேரடி ஒளிபரப்பு மூலம் இணைந்து, பக்திபூர்வ கீதங்கள் இசைத்தார்கள்.
இந்த சிறப்பு தியானம் ஆங்கிலத்தில் நடைபெற்றது, மேலும் ஒரே நேரத்தில் மொழிபெயர்ப்பு இந்தி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் கிடைக்கப் பெற்றன. கூடுதலாக, இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் பிற சர்வதேச மொழிகளுக்கான துணை தலைப்புகள் கூடிய விரைவில் வீடியோவில் சேர்க்கப்படும்.
இந்த வீடியோ தொடர்ந்து பார்க்கக் கிடைக்கும்.

















