சன்னியாசிகள் சுற்றுப் பயணம், சிம்லா

மூன்று நாள் நிகழ்ச்சி

)

வெள்ளி, மே 12, 2023 — ஞாயிறு, மே 14, 2023

(கிரியா தீட்சை

Sunday, May 14, 2023)

கூடுதல் தகவல்

நிகழ்வு இடம்:

யோகதா சத்சங்க ஆனந்த ஷிகர் சாதனாலயா – சிம்லா
பனோதி பஹல் ரோட், வில்.பந்தி,
சிம்லா – 171005, இமாச்சலப் பிரதேசம்

தொடர்பு விபரங்கள்:

தொலைபேசி:

0177-2650310, 9418638808
9459051087

மின்னஞ்சல்:

முகவரி:

யோகதா சத்சங்க தியான கேந்திரா — சிம்லா
தி ரிட்ஜ், சிம்லா – 171001, இமாச்சலப் பிரதேசம்

நிகழ்வு பற்றி

இந்த பிரபஞ்சத்தின் பாதுகாவலர் உங்கள் இதயக் கதவுகளைத் தட்டுகிறார், மௌனத்தின் வாயில்கள் வழியாக நுழைந்து உங்களுக்குள் மகிழ்ச்சியின் தோட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

— ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒவ்வோர் ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள், பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம-அனுபூதி போதனைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு வருகை புரிகின்றனர். இந்த சன்னியாசிகள் வருகை நிகழ்வு, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை அறிய விரும்பும் புதியவர்களுக்கும், YSS பாடத்திட்ட மாணவர்களுக்குத் தியான உத்திகள் குறித்த ஆழமான வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் ஒரு பேறுபெற்ற வாய்ப்பை வழங்குகிறது.

ஒவ்வொரு ஆன்மீக நிகழ்வும் ஒருவரின் ஆன்மீகப் பயிற்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதைப் போலவே, இந்நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்பது உங்கள் ஆன்மீக ஆர்வத்தை தூண்டும்; அத்துடன், தீவிர ஆன்மீகத் தேடல் கொண்ட மற்றவர்களுடன் இணைந்து தியானிப்பதன் மூலம் அவர்களின் தோழமையில் கிடைக்கும் மகிழ்ச்சியையும் ஆசிகளையும் அனுபவிக்க இது உதவும்.

இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாடுகளிலிருந்து உங்கள் கவனத்தை விலக்கி, அதை அக அமைதி’யின் மீது ஒருமுகப்படுத்தி, அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பம் எனும் அமுதத்தைப் பருக உங்களை அழைக்கிறோம். இதில் பங்கேற்கும் போது, குருதேவரின் போதனைகளை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது குறித்த YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலையும் நீங்கள் பெறலாம்.

நிகழ்ச்சி அட்டவணை இடத்திற்கு இடம் மாறுபடலாம் என்றாலும், ஒரு மாதிரிச் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அட்டவணை - நாள் 1

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை

துவக்க சத்சங்கம்

காலை, 10:30 மணி முதல் மதியம், 12:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மதியம் 02:30 மணி முதல் 03:30 மணி வரை

ஹாங்-ஸா உத்தி மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மாலை 04:30 மணி முதல் 06:15 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை

ஆன்மீக சொற்பொழிவு

இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை

குருதேவர் பற்றிய வீடியோ காட்சி

அட்டவணை - இரண்டாம் நாள்

காலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:45 மணி முதல் 10:45 மணி வரை

ஆன்மீக சொற்பொழிவு

காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை

ஓம் உத்தி மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மதியம் 02:30 மணி முதல் 04:00 மணி வரை

கேள்வி-பதில் அமர்வு

மாலை 04:30 மணி முதல் 06:15 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை

ஆன்மீக சொற்பொழிவு

அட்டவணை - நாள் III

காலை 08:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

கிரியா யோக தீட்சை
(தகுதியுள்ள YSS பக்தர்களுக்கு மட்டும்)

மதியம் 02:30 மணி முதல் 03:30 மணி வரை

நிறைவு சத்சங்கம் மற்றும் பிரசாதம்

மாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை

கிரியா யோகம் மறுஆய்வு மற்றும் சரிபார்ப்பு
(YSS கிரியாபன்கள் மட்டும்)

கிரியா யோக தீட்சை பெறுதல்:

YSS சன்னியாசிகள் கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியை நடத்தி, தகுதிவாய்ந்த பக்தர்களுக்கு தீட்சை வழங்குவார்கள். தகுதி மற்றும் பங்கேற்பு பற்றிய விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

கிரியா யோகம் பெறுவதற்கான தகுதிகள்:

  • கிரியா யோக தீட்சை பெறுவதற்கான தகுதி YSS பாடங்களுடன் இணைக்கப்பட்ட கேள்வித்தாளுக்கு திருப்திகரமான பதில்களை சமர்ப்பிப்பதைப் பொறுத்தது.
  • வினாத்தாளில் நீங்கள் கவனித்தறிந்தது போல், கிரியா யோகம் பெற தகுதியுடையவராக இருக்க, பக்தர் முதல் மூன்று அடிப்படை யோகதா உத்திகளை பல மாதங்களாக தவறாமல் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
  • YSS குரு பரம்பரை மற்றும் யோகதா சத்சங்க பாதையில் பக்தி மற்றும் விசுவாசத்தின் கையொப்பமிடப்பட்ட கிரியா யோக உறுதிமொழியையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கவனத்திற்கு: நீங்கள் கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பி, ஆனால் அறிக்கைக்கான பதில்களை இன்னும் அனுப்பவில்லை என்றால், சன்னியாசிகள் அந்நகருக்கு வந்தவுடன் சரிபார்ப்பதற்காக, நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் கேந்திரா/மண்டலியில் அவற்றைச் சமர்ப்பிக்கலாம்.


கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்றல்:

கிரியா யோக தீட்சை பெற விழையும் அனைவரும், அதாவது, கிரியா யோகப் பாடங்களைப் பெற்றிருந்தும் இதுவரை தீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள்; மற்றும் ஏற்கெனவே முறைப்படி தீட்சை பெற்றிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிரியாபன்கள், குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட கேந்திராவில் பதிவு செய்துகொள்ள வேண்டும்; நிகழ்ச்சிக்கு வரும்போது அதற்கான அனுமதி அட்டையைத் தவறாமல் எடுத்து வர வேண்டும்.

கிரியா யோக தீட்சைக்குப் பதிவு செய்யும் போதும் மற்றும் மறு ஆய்வில் கலந்துகொள்ளும்போதும், தயவுசெய்து உங்களின் கிரியாபான் அடையாள அட்டையைக் காண்பியுங்கள்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர