புதிய வருடம் எனும் தோட்டத்தில் நீங்கள் செடிகளை நடுவதற்குப் பொறுப்பாளியானவர் என கற்பனைச் செய்யுங்கள். இந்த மண்ணில் நல்ல பழக்கவழக்கங்கள் எனும் விதையினை விதையுங்கள். கவலைகளையும் கடந்தகால தவறான செயல்கள் எனும் களையினையும் களைந்தெறியுங்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தா
பரமஹம்ஸ யோகானந்தர், புத்தாண்டு தொடக்கத்தில் கூட்டு தியானம் செய்வதைத் தொடங்கினார். புத்தாண்டு பிறக்கும் வேளையில் பக்தர்கள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடவும், தீய பழக்கங்களைக் கைவிட்டு நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள உறுதியான சங்கல்பம் மேற்கொள்ளவும் அவர் ஊக்குவித்தார்.
புதன்கிழமை, டிசம்பர் 31, இரவு 11:30 மணி முதல் வியாழக்கிழமை, ஜனவரி 1, அதிகாலை 12:15 மணி வரை (IST) நடைபெறும் ஒரு சிறப்பு ஆன்லைன் புத்தாண்டுக்கு முந்தைய நாள் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம். இந்த தியானம் YSS சன்னியாசி ஒருவரால் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.
கவனிக்கவும்: மேலே பகிரப்பட்டுள்ள நேரத்தில் இந்தத் தியானத்தில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக, இதன் பதிவு ஜனவரி 6, செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணி (IST) வரை யூடியூபில் பார்ப்பதற்குக் கிடைக்கும்.
புத்தாண்டை தியானத்துடன் வரவேற்கும் இந்த தனித்துவமான வழக்கம், நம் YSS ஆசிரமங்களிலும், சில கேந்திராக்களிலும் மற்றும் மண்டலிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள ஒரு YSS மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இதையும் வாசித்துப் பார்க்கலாம்:
இந்தப் புத்தாண்டு தருணத்தில், பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநேய பணிகளுக்கு பங்களிப்பு ஆற்ற உங்களை வரவேற்கிறோம். நன்கொடை அளிக்க கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

















