ஆன்லைன் பிரார்த்தனை அமர்வுகள்

புதன்கிழமைகளில், இரவு 9:00 மணிக்கு

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

பெரும்பாலான மனிதர்கள் நிகழ்வுகளின் போக்கை இயற்கையானதாகவும் தடுக்கப்பட முடியாததாகவும் கருதுகின்றனர். பிரார்த்தனையின் மூலமாக எத்தகைய அடிப்படை மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதை அவர்கள் அரிதாகவே அறிந்திருக்கிறார்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா புதன்கிழமைகளில் இரவு 9:00 (IST) மணிக்கு 20 நிமிட வாராந்திர ஆன்லைன் பிரார்த்தனை அமர்வுகளை நடத்தவிருக்கிறது. முதல் அமர்வு YSS சன்னியாசி ஒருவரால் மே 27 ஆம் தேதி நடத்தப்படும், அடுத்தடுத்த அமர்வுகள் (ஜூன் 3 முதல்) YSS பக்தர்களால் வழிநடத்தப்படும்.

பிரார்த்தனை அமர்வு ஆரம்பப் பிரார்த்தனையுடன் தொடங்கும், அதனைத் தொடர்ந்து ஒரு அகத் தூண்டும் வாசிப்பு, அல்லது பரமஹம்ஸ யோகானந்தரின் சங்கல்பப் பயிற்சி, மற்றும் ஒரு குறுகிய கால தியானம் நடைபெறும். அதன்பிறகு நாம் YSS/SRF உலகளாவிய பிரார்த்தனைக் குழுவுடன் இணைந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மற்றவர்களுக்காகவும், உலக அமைதிக்காகவும் குணமளிக்கும் பிரார்த்தனைகளைக் கோரியவர்களுக்காகவும் பிரார்த்திப்போம். இந்த அமர்வு யோகானந்தர் கற்பித்த குணப்படுத்தும் உத்திப் பயிற்சி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் முடிவடையும்.

இந்த அமர்வுகளில் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

கவனத்திற்கு: இந்த ஆன்லைன் பிரார்த்தனை அமர்வுகள் ஜூம் வழியாக மட்டுமே கிடைக்கப் பெறும்.

YSS/SRF உலகளாவிய பிரார்த்தனைக் குழு

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வெளியிட்ட கீழே உள்ள YSS/SRF உலகளாவிய பிரார்த்தனைக் குழு கையேட்டைப் படிக்க ஊக்குவிக்கிறோம்.

அனைத்து YSS ஆசிரமங்களிலும் உள்ள நம் சன்னியாசிகள், தேவை உள்ளோர் அனைவருக்காகவும் தொடர்ந்து ஆழ்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு உறுதி கூறுகிறோம். உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ நாங்கள் பிரார்த்திக்க நீங்கள் விரும்பினால், இங்கே கிளிக் செய்யுங்கள்:

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர