“சமநிலை வாழ்வு குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் கோட்பாடுகள்”

(YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் உரை)

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15, 2026

காலை 8:30 மணி

– காலை 9:30 மணி

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை, YSS சாதனா சங்கம் நிறைவு நாளன்று, YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, “சமநிலை வாழ்வு குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும் இந்த உரையில் கலந்து கொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம்.

இன்றைய வேகமான மற்றும் சவால் நிறைந்த உலகில், பலர் அக அமைதியுடனும் ஆன்மீக நிறைவுடனும் புறத்தே உள்ள பொறுப்புகளை நிறைவேற்ற விரும்புகின்றனர். இந்த உரையில், ஸ்வாமி சிதானந்தாஜி, பரமஹம்ஸ யோகானந்தரின் சமநிலை வாழ்வு குறித்த செயல்முறை கோட்பாடுகளை — உலகியல் வாழ்வின் ஊடே இறைவனில் நிலைத்திருப்பது எவ்வாறு என்பதைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார். தினசரி தியானம், சரியான செயல் மற்றும் சீரான மனநிலை எவ்வாறு ஒருவர் வாழ்க்கையின் கடமைகளை அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீகப் பக்குவத்துடன் செயல்பட உதவுகிறது என்பதை, உடல், மனம் மற்றும் ஆன்மாவின் இணக்கமான வளர்ச்சிக்கான யோகக் கோட்பாடுகளிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். இறைத் தொடர்பின் அமைதியை எவ்வாறு பணி, உறவுகள் மற்றும் சேவையில் கொண்டுவருவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த உரை, நேரலை ஒளிபரப்பு நிறைவடைந்த பிறகும் தொடர்ந்து காணக் கிடைக்கும்.

இந்த நிகழ்வு ஆங்கிலத்தில் நடத்தப்படும். அதே வேளையில் மொழிபெயர்ப்பு (ஜூம் வழியாக நேரடி நிகழ்வின் போது மட்டும்) இந்தியில் கிடைக்கும்.

இந்தியில் உடனடி மொழிபெயர்ப்பை அணுக:

  • (நேரடி நிகழ்வின் போது) Zoom வழியாக இணையுங்கள். நிகழ்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • உங்கள் Zoom விண்டோவின் கீழ் டூல்பார் இல் உள்ள “மொழிபெயர்ப்பு” பட்டனை அழுத்தவும். (அந்த விருப்பத்தேர்வு உங்களுக்குக் காணப்படவில்லை எனில், “More” பட்டனை அழுத்தி, தோன்றும் பட்டியலிலிருந்து “மொழிபெயர்ப்பு”-ஐத் தேர்ந்தெடுக்கவும்.)
  • பட்டியலில் இருந்து “இந்தி” யைத் தேர்வு செய்யவும்.
  • நிகழ்ச்சி தொடங்கியவுடன், நீங்கள் இந்தியில் உடனடி மொழிபெயர்ப்பைக் கேட்பீர்கள்.

கவனத்திற்கு:

  • உங்களுக்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், YSS உதவி மையத்தைத்(0651) 6655 555 என்ற எண்ணிற்கு அழைத்தோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ தொடர்பு கொள்ளுங்கள்.
  • இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்விற்கு, YSS உதவி மையம் தொழில்நுட்ப உதவிக்காக காலை 8 மணி (IST) முதல் கிடைக்கும்.

நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:

பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் போதனைகள் மற்றும் தியான உத்திகளை அடிப்படையாகக் கொண்டு, ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களால் வழங்கப்பட்ட மேலும் சில அகத்தூண்டுதல் அளிக்கும் உரைகள் இங்கு உள்ளன. இவற்றைக் காண உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர