ஒய்எஸ்எஸ் சன்னியாசி வழிநடத்தும் தியானம்

(செவ்வாய்க்கிழமைகளில்)

மாலை 6:10 மணி

– இரவு 7:30 மணி

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் பெல்லோஷிப் மையங்களின் நோக்கம் இறைவனுடன் தொடர்புகொள்வதாகும். இறைவனின் பெயரால் பக்தர்கள் கூடும் போது அது அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

— பரமஹம்ஸ யோகானந்தர்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரா, ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி அவர்களால் ஜனவரி 31, 2021 அன்று தொடங்கப்பட்டது. அது முதல், ஒய் எஸ் எஸ் பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பலருடன் குழுவாக இணைந்து கூட்டு தியானத்தின் அருளாசிகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.

செவ்வாய்கிழமை மாலைகளில் ஒய் எஸ் எஸ் சன்னியாசி வழிநடத்தும் ஆன்லைன் தியானத்தில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். இந்த நிகழ்வு , ஒரு பதிவுசெய்யப்பட்ட காணொளியுடன் சக்தியூட்டும் உடற்பயிற்சி செய்வதோடு தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசி வழிநடத்தும் தியானம்.

தியான அமர்வு தொடக்கப் பிரார்த்தனை, வாசிப்பு மற்றும் கீதமிசைத்தலுடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து வழிகாட்டப்பட்ட தியான நேரங்கள் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடைகிறது.

அட்டவணை (ஏப்ரல் 1, 2022 முதல்)

ஒவ்வொரு மாதமும் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது (இருந்தால்) செவ்வாய்

ஆங்கிலம்

மாலை 6:10 முதல் – இரவு 7:30 வரை

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்

இந்தி

மாலை 6:10 முதல் – இரவு 7:30 வரை

இந்த தியானங்களில் கலந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூம் லிங்க் அல்லது யூடியூப் இணைப்பை கிளிக் செய்யவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp