YSS

யோகம், தியானம் என்றால் என்ன?

யோகம், தியானம் என்றால் என்ன?

நம்மில் பெரும்பாலோர் நிறைவுக்காக நமக்கு வெளியே பார்க்க பழகிவிட்டோம். நமக்கு தேவையானதை வெளிப்புற வெற்றிகள் நமக்குத் தர முடியும் என்று நம்பும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். “இன்னும் ஏதாவது” ஒன்று நம்முள்ளிருக்கும் ஆழமான ஏக்கத்தை வெளிப்புறத்தில் உள்ள எதுவும் முழுமையாக நிறைவேற்ற முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நம் அனுபவங்கள் நமக்குக் உணர்த்துகின்றன.

யோகம் என்பது ஆற்றல் மற்றும் உணர்வு நிலையின் இயல்பான வெளிப்புற ஓட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு எளிய செயல்முறையாகும். இதனால் மனம் நேரடி உணர்திறனின் சக்தி வாய்ந்த மையமாக மாறும். மேலும் தவறு செய்யக்கூடிய புலன்களை சார்ந்திராமல் உண்மையாக மெய்ப்பொருளை உணரும் ஆற்றலுடன் விளங்கும்.

யோகத்தின் படிப்படியான வழிமுறைகளை பயிற்சி செய்வதன் மூலமும், உணர்ச்சி அடிப்படையிலோ அல்லது கண்மூடித்தனமாகவோ எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதன் மூலமும், அனைத்திற்கும் உயிர் அளிக்கக்கூடிய மற்றும் நமது ஆன்மாவின் சாரமான எல்லையற்ற அறிவு, சக்தி மற்றும் ஆனந்தத்துடன் நம் ஒருமையை நாம் அறிந்துகொள்கிறோம்.

வழிகாட்டுதலுடன் தியானங்கள்:

படி 1: அறிமுகம்

உங்கள் பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து சிறிது இடைவெளி விடுங்கள் மற்றும் உங்களுக்கு நீங்களே அமைதி என்னும் பரிசை அளியுங்கள். அமைதி, அன்பு மற்றும் ஒளி என்னும் சோலையில் மூழ்கிவிடுங்கள்.

படி 2: ஒரு தியானத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் தயாராக இருக்கும்போது, கீழ்கண்டதிலிருந்து ஒரு தியானத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு தியானமும்  சுமார் 15 நிமிடங்கள் நீளமானது..

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா பற்றி

கடந்த 100 ஆண்டுகளாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS), அதன் நிறுவனரும், மேற்கில் யோகத்தின் தந்தை என பரவலாகப் போற்றப்படுகின்றவருமான  ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின், ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளை மேற்கொள்வதற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தரால் வகுக்கப்பட்ட  இலக்குகள் மற்றும் இலட்சியங்களில்  விளக்கியுள்ளபடி, இந்த ஆன்மீக நிறுவனம் நமது உலகளாவிய குடும்பத்தின் பல்வேறு மக்கள் மற்றும் மதங்களிடையே அதிக புரிதல் மற்றும் நல்லெண்ண உணர்வை வளர்க்க முயல்கிறது, மேலும் அனைத்துக் கலாச்சாரங்களையும் நாடுகளையும் சேர்ந்தவர்கள் மனிதத்துவத்தின் அழகு, உயர் பண்பு மற்றும் தெய்வீகத்தை தங்கள் வாழ்க்கையில் முழுமையாக உணர்ந்தறியவும், வெளிப்படுத்தவும் உதவுகிறது.

பரமஹம்ஸ யோகானந்தர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புனித ஆன்மீக அறிவியலான உலகளாவிய  கிரியா யோக , போதனைகளை பரப்புவதற்கு, 1917 ஆம் ஆண்டில் யோகதா சத்சங்க சொஸைடியை நிறுவினார். இந்த மதச்சார்பற்ற போதனைகள் பன்முக வெற்றியையும் நல்வாழ்வையும் அடைவதற்கு, அத்துடன் பரம்பொருளுடன் (இறைவன்) ஆன ஆன்மாவின் ஐக்கியம் என்ற வாழ்வின் உச்சகட்ட குறிக்கோளை அடைவதற்குமான  தியான வழிமுறைகள்  அடங்கிய ஒரு முழுமையான தத்துவத்தையும் வாழ்க்கை முறையையும் உள்ளடக்கியது.

வீட்டுக் கல்விக்கான ஒய் எஸ் எஸ் பாடங்கள்

பரமஹம்ஸ யோகானந்தரின் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளில் அவரது பாடங்கள் தனித்துவமானவை, ஏனென்றால் அதில்  கிரியா யோகம் உட்பட தியானம், ஒருமுகப்பாடு மற்றும் சக்தியூட்டுதல் போன்ற அவர் கற்பித்த யோக உத்திகளில் அவரது படிப்படியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த எளிய ஆனால் மிகவும் பயனுள்ள யோக உத்திகள், உடலுக்கு வீரியமளிக்கவும், மனத்தின் எல்லையற்ற சக்தியை எழுப்பவும், உங்கள் வாழ்க்கையில் தெய்வீகத்தைப் பற்றிய என்றும்-ஆழ்ந்து செல்லும் ஒரு விழிப்புணர்வை அனுபவிக்கவும் — ஆன்மீக உணர்வுநிலை மற்றும் இறைவனுடனான ஐக்கியம் என்ற உயர்ந்த நிலைகளில் முடியவும் — நம்மை இயலச் செய்தவாறு, உயிர்சக்தி மற்றும் உணர்வுநிலையுடன் நேரடியாகச் செயல்படுகின்றன.

யோகமுறை என்பது ஒரு சில குறிப்பிட்ட நம்பிக்கைகளைச் சார்ந்திராமல் பயிற்சி மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அனைத்து மதங்களைப் பின்பற்றுபவர்களும் — அத்துடன் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களும் கூட — பாடங்களின்அடிப்படைத் தொடர் மற்றும் அதில் கற்பிக்கப்பட்ட  உத்திகள் அடங்கிய ஆன்மீக போதனைகள் மூலம் பயனடையலாம். தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, இந்த வழிமுறைகள் ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் புரிதலின் ஆழமான நிலைகளுக்கு தவறாமல் வழிநடத்திச் செல்லும்.

பரமஹம்ஸ யோகானந்தரின் அறிமுகப் பாடத்தைப் படியுங்கள்

Highest Achievements - Intro to YSS/SRF Lessons

ஆன்ம-அனுபூதியின் வாயிலாக மிக உயர்ந்த சாதனைகள்

பரமஹம்ஸ யோகானந்தரின் “ஆன்ம-அனுபூதியின் வாயிலாக மிக உயர்ந்த சாதனைகள்” என்ற தலைப்பு கொண்ட பாடத்தொடர் பற்றிய அறிமுகப் புத்தகத்தில், பாடங்களில் உள்ள போதனைகள் குறித்து உத்வேகமூட்டும் மற்றும் ஆழமான பொதுவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் படியாக, இந்த அறிமுகப் பாடத்தைப் படித்து, அதிலுள்ள சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ளுமாறு நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். கிரியா யோக தீட்சைக்காக ஒருவரைத் தயார்செய்யும் தியான உத்திகளைக் கற்பிக்கும் பதினெட்டு பாடங்கள் கொண்ட கல்விப்பயிற்சியில் சேர்வதன் மூலம் ஆன்ம-அனுபூதிக்கான பயணத்தில் நீங்கள் மேலும் செல்ல விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க இது உதவும்.

“பாடங்களுக்காக விண்ணப்பம் செய்யுங்கள்” என்ற தாவலின் (tab) கீழ் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இப்போதே பதிவு செய்யலாம்.

தியானம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்:

முப்பது வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் நடத்திய வகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட கிரியா யோக தியான விஞ்ஞானத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பது பற்றிய அவரது தனிப்பட்ட அறிவுறுத்தல்கள்,  யோகதா சத்சங்கப் பாடங்களில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, இப்பாடங்கள் மற்றும் சமநிலையான உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வை – வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் யோகமுறை அளிக்கும் ஆரோக்கியம், குணப்படுத்துதல், வெற்றி மற்றும் நல்லிணக்கம் – அடைவதற்கான அவரது நடைமுறை வழிகாட்டுதலையும் உத்திகளையும் அளிக்கின்றன. இந்த “வாழ்வது-எப்படி” தத்துவங்கள் எந்த ஒரு உண்மையான வெற்றிகரமான தியானப் பயிற்சிக்கும் ஒரு அத்தியாவசிய அங்கமாகும்.

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஒய் எஸ் எஸ் பற்றி

பரமஹம்ஸ யோகானந்தர் பிறந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் நம் காலத்தின் தலைசிறந்த ஆன்மீக முக்கிய நபர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்; மேலும் அவரது வாழ்க்கை மற்றும் பணியின் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் அவர் அறிமுகப்படுத்திய பல மத மற்றும் தத்துவ கருத்துக்களும் வழிமுறைகளும் இப்போது கல்வி, உளவியல், வணிகம், மருத்துவம் மற்றும்
பிற துறைசார்ந்த பெருமுயற்சிகளில் வெளிப்படுவதை – மனித வாழ்வின் ஓர் அதிகமாக ஒருங்கிணைந்த, மனிதாபிமான மற்றும் ஆன்மீக தொலைநோக்குப் பார்வைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்பதைக் – காணலாம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் புரிந்து கொள்ளப்பட்டு பல்வேறு துறைகளில், அத்துடன் பல்வேறு தத்துவ மற்றும் பரதத்துவ வல்லுநர்களாலும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற நிகழ்ப்பாடு, அவர் கற்பித்தவற்றின் சிறந்த நடைமுறைக்கேற்ற பயன்பாட்டை குறித்துக்காட்டுவது மட்டுமல்லாமல், அவர் விட்டுச் சென்ற ஆன்மீக மரபு காலப்போக்கில் நீர்த்துப்போகவோ, துண்டு துண்டாகப்படவோ அல்லது சிதைக்கப்படவோ கூடாது என்பதை உறுதி செய்வதற்கான
சில வழிமுறைகளின் தேவையையும் தெளிவாக உணர்த்துகிறது.

நமது ஆன்மாக்களில் தெய்வீகத்தை அனுபவிப்பது, தெய்வீக ஆனந்தத்தை நமது ஆனந்தமாக உரிமை கோருவது – இதைத்தான் பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகள் நம் ஒவ்வொருவருக்கும் வழங்குகின்றன.

கிரியா யோக புனித விஞ்ஞானம் தியானத்தின் மேம்பட்ட உத்திகளைக் கொண்டுள்ளது;
அவற்றை ஈடுபாட்டுடன் பயிற்சி செய்வது இறை அனுபூதியையும் மற்றும் அனைத்து வடிவ பந்தங்களிலும் இருந்து ஆன்ம விடுதலையையும் அளிக்கிறது. இது ராஜயோக அல்லது தெய்வீக ஐக்கியம் எனும் மிக உயர்ந்த யோக உத்தியாகும். (படியுங்கள்:  “யோகம் என்றால் என்ன, மெய்யாகவே?”)

கிரியா யோகப் பாதையின் தியான உத்திகள்

“இறைவன் தனது வரங்களை வழங்குவதற்காக விருப்பமுள்ள இதயங்களைத் தேடுகிறான்…. அது மிகவும் அழகான விஷயம் மற்றும் அதைத்தான் நான் நம்புகிறேன். இறைவன் தனது பரிசுகளின் பொழிவுக்காக விருப்பமுள்ள இதயங்களைத் தேடுகிறார். அவர் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார், ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் முயற்சியைச் செய்ய நாம் தயாராக இல்லை.”

பரமஹம்ஸ யோகானந்தர் தனது யோகியின் சுயசரிதத்தில் கிரியா யோகம் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார். பரமஹம்ஸ யோகானந்தரால் போதிக்கப்பட்ட மூன்று ஆயத்த உத்திகளின் ஆரம்பகாலக் கல்வி மற்றும் பயிற்சிக்குப் பிறகு, இந்தக் குறிப்பிட்ட உத்தி யோகதா சத்சங்க பாடங்களின்  மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வழிமுறையாகச் செயல்படும் இந்தத் தியான உத்திகள் சாதகருக்கு உயர்ந்த நன்மைகளையும் இந்தப் பண்டைய யோக விஞ்ஞானத்தின் தெய்வீக இலக்கையும் அடைய உதவுகிறது.

1. சக்தியூட்டும் பயிற்சிகள்

இது தியானத்திற்கு உடலைத் தயார்செய்ய 1916ல் பரமஹம்ஸ யோகானந்தரால் உருவாக்கப்பட்ட உள-உடலியல் பயிற்சிகளின் ஒரு தொகுப்பு. இதன் வழக்கமான பயிற்சி மனத்தளர்வையும் உடற்தளர்வையும் மேம்படுத்துகிறது மற்றும் ஆற்றல்மிக்க இச்சா சக்தியை உருவாக்குகிறது. சுவாசம், உயிர்ச்சக்தி மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தைப் பயன்படுத்தியவாறு, இந்த உத்தி ஒருவர் உடலுக்குள் ஏராளமான ஆற்றலை உணர்வுப்பூர்வமாக ஈர்த்து, அதன் பலனாக அனைத்து உடற் பாகங்களையும் முறைப்படியாக அடுத்தடுத்து சுத்திகரித்து பலப்படுத்த உதவுகிறது. பயிற்சி செய்வதற்கு 15 நிமிடங்கள் ஆகும். இந்தச் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்குவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும். தியானத்திற்கு முன் அவற்றைப் பயிற்சி செய்வது, ஒரு அமைதியான, உள்முகமான விழிப்புணர்வு நிலையை அடைவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

2. ஹாங்-ஸா எனும் ஒருமுகப்பாட்டு உத்தி

ஹாங்-ஸா எனும் ஒருமுகப்பாட்டு உத்தி ஒருவருடைய உள்ளார்ந்த ஒருமுகப்பாட்டுச் சக்தியை வளர்க்க உதவுகிறது. இந்த உத்தியைப் பயிற்சி செய்வதன் வாயிலாக, ஒருவர் சிந்தனையையும் சக்தியையும் வெளிப்புறக் கவனச் சிதறல்களிலிருந்து பின்வாங்கக் கற்றுக் கொள்கிறார்; அதன் மூலம் அவர்கள் அடைய வேண்டிய எந்த ஒரு லட்சியத்தின் மீதும் அல்லது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையிலும் கவனத்தை செலுத்தலாம். அல்லது ஒருவர் அந்த ஒருமுகப்பட்ட கவனத்தை தன்னுள் தெய்வீக உணர்வுநிலையை உணர்ந்தறிவதை நோக்கிச் செலுத்தலாம்.

3. ஓம் உத்தி

ஓம் எனும் தியான உத்தி ஒருவரின் சொந்த உண்மையான பெரும்-சுயத்தின் தெய்வீக குணங்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கு ஒருமுகப்பாட்டுச் சக்தியை மிக உயர்ந்த வழியில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காண்பிக்கிறது. இந்தப் பண்டைய யோகமுறை எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக மகா இருப்பை, எல்லாப் படைப்புகளுக்கும் அடிப்படையான மற்றும் அவற்றை பேணிப் பாதுகாக்கின்ற வார்த்தை அல்லது பரிசுத்த ஆவி எனும் ஓம் ஆக எவ்வாறு துய்த்துணர்வது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த உத்தி விழிப்புணர்வை உடல் மற்றும் மனதின் வரம்புகளுக்கு அப்பால் ஒருவரது எல்லையற்ற ஆற்றலின் ஆனந்தமய அனுபூதிக்கு விரிவுபடுத்துகிறது.

4. கிரியா யோக உத்தி

கிரியா என்பது பிராணாயாமத்தின் (உயிர்-சக்தியை கட்டுப்படுத்தல்) ஒரு மேம்பட்ட ராஜயோக உத்தியாகும். கிரியா முதுகுத்தண்டு மற்றும் மூளையில் உயிர்ச்சக்தியின் (பிராணனின்) நுட்பமான மின்னோட்டங்களுக்குச் செறிவூட்டிப் புத்துயிர் அளிக்கிறது. இந்தியாவின் பண்டைய ஞானிகள் (ரிஷிகள்) மூளை மற்றும் முதுகுத்தண்டை வாழ்க்கை மரமாக உணர்ந்தனர். உயிர் மற்றும் உணர்வு நிலையின் நுட்பமான மூளை-முதுகுத்தண்டு மையங்களிலிருந்து (சக்கரங்கள்) அனைத்து நரம்புகளையும், உடலின் ஒவ்வொரு உறுப்பையும் திசுவையும் உயிர்ப்பிக்கும் சக்திகள் பாய்கின்றன. சிறப்புமிக்க கிரியா யோக உத்தி மூலம் முதுகுத்தண்டில் உயிர்ச்சக்தி மின்னோட்டத்தை மேலும் கீழும் தொடர்ந்து சுழற்றுவதன் மூலம், ஒருவரின் ஆன்மீக பரிணாம வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் பெரிதும் துரிதப்படுத்த முடியும் என்பதை யோகிகள் கண்டறிந்தனர்.

கிரியா யோகத்தின் முறையான பயிற்சி, இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் இயல்பான செயல்பாடுகளின் வேகத்தை இயற்கையாகவே குறைத்து, உடலிலும் மனத்திலும் ஆழ்ந்த அகச்சலனமற்ற நிலையை உருவாக்குகிறது மற்றும் எண்ணங்கள், உணர்ச்சி வேகங்கள் மற்றும் புலனுணர்வுகளின் வழக்கமான கொந்தளிப்பிலிருந்து கவனத்தை விடுவிக்கிறது. அந்த அகச்சலனமற்ற நிலையின் தெளிவில், ஒருவர் ஓர் ஆழ்ந்து செல்லும் அக அமைதியையும் ஒருவருடைய ஆன்மாவுடனும் இறைவனுடனும் ஆன ஒத்திசைவையும் அனுபவிக்கும் நிலைக்கு வருகிறார்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp