
பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய நீடித்து நிலைக்கும் ஆன்மீக இலக்கியத்தின் ஒரு விரிவான மேலோட்டம்.
2021-22 ஆம் ஆண்டு, உலகின் மிகவும் போற்றப்படும் ஆன்மீக இலக்கியங்களின் ஒன்றான பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுய சரிதம் என்ற நூலின் 75-வது ஆண்டு நிறைவடைந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கிறது.
பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்த நூல் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நூல் எண்ணற்ற வாசகர்களை இந்தியாவின் பழம்பெரும் யோக அறிவியலுக்கும் உலக நாகரிகத்திற்கு இந்தியாவின் தனிச்சிறப்புவாய்ந்த மற்றும் அழியாத கொடையாக விளங்கும் இறை-அனுபூதியை அடைவதற்கான அறிவியல்பூர்வ வழிமுறைகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
1946-ல், முதன் முதலாக அச்சிற்கு வந்த நாள்தொட்டே, தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப் பெற்ற இந்த சுயசரிதம் தொடர்ச்சியாக சிறப்பாக விற்பனையாகும் ஆன்மீக நூல்களின் வரிசையில் இருந்து வருகிறது மற்றும் பல்வேறு மார்க்கங்களின் ஆன்மீக ஆர்வலர்களால் வாசிக்கப்பட்டிருக்கிறது. 1999-ல், “நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில்” ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான மற்றும் பெருகும் ஆர்வத்தின் காரணமாக, இந்த நூல் 15 முக்கிய இந்தியத் துணைக்கண்ட மொழிகளிலும் உலகம் முழுவதிலும் 50க்கும் மேலான மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காகித அட்டை கொண்ட நூல், ஒலிநூல் மற்றும் மின்னூல் வடிவங்களில் கிடைக்கிறது.
மின்நூலைப் பதிவிறக்கம் செய்யுங்கள்
இந்த மின்நூல் தொழில்சார்ந்த தரநிலை கொண்ட இபியுபி வடிவில் உள்ளது மற்றும் ஒரு தகுந்த மின்நூல் வாசிப்புச் செயலின் வாயிலாக பெரும்பாலான சாதனங்களில் இதை வாசிக்க முடியும்.
ஆங்கில ஆடியோபுக் வாங்கவும்
“காந்தி” திரைப்படத்திற்காக அகாதமி விருது வென்ற சர் பென் கிங்ஸ்லி குரலில்
நூலின் முன்னோட்டம்
மிகவும் உத்வேகமூட்டும் பகுதி
ஒரு மாணவர் பரமஹம்ஸரிடம் கேட்டார்: “ஐயா, யோகியின் சுய சரிதத்தில் எந்தப் பகுதி சராசரி மனிதருக்கு மிகவும் உத்வேகமூட்டுவதாக நீங்கள் கருதுகிறீர்கள்? குருதேவர் சிறிது நேரம் யோசித்துப் பின் கூறினார்:
“என் குருதேவரான ஸ்ரீ யுக்தேஸ்வரின் இந்த வார்த்தைகள்: ‘கடந்தகாலத்தை மறந்துவிடு. மனிதன் தெய்வீகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றால் அல்லாது மனித நடத்தையை
நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.’”
ஒரு தனிச்சிறப்புமிக்க ஆசிரியர், ஒரு தனிச்சிறப்புமிக்க நூல், மற்றும் ஒரு தனிச்சிறப்புமிக்க செய்தி
“(யோகானந்தரின்) போற்றப்படும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் அவர் யோகப் பயிற்சியின் உயர்த் தளங்களில் அடையப்பெறும் ஒரு திகைப்பூட்டும் விவரங்களையும் யோக மற்றும் வேதாந்த நிலைப்பாடுகளிலிருந்து மனித இயல்பின் மீதான பல ஆர்வத்தைத் தூண்டும் கண்ணோட்டங்களையும் வழங்குகிறார்.”
“உணர்வுநிலைக்கும் பருப்பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிய ஓர் அறிவியல்பூர்வப் புரிதலின் படிப்படியான வெளிப்பாடு நம் காலத்தின் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த போக்குகளில் ஒன்றாகும்….நமது அன்றாட உடல்நலமும் நல்வாழ்வும் எந்த அளவிற்கு நமது மன நிலையைச் சார்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள், அத்துடன் நோயாளிகளும், இப்போது பார்க்கத் துவங்கியுள்ளனர்….உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் இடையுறவை வெளிப்படுத்தியவாறு, இந்த ஆய்வுகள் நாள்பட்ட வலிக்கான சிகிச்சையில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் பல வருடங்களுக்கு முன் போதிக்கப்பட்ட “எப்படி-வாழ்வது” தத்துவங்களின் மகத்தான மதிப்பை வெளிப்படுத்தும் வலி பற்றிய ஒரு பார்வைக்கு வழிவகுத்துள்ளது.
நான் இந்தப் புத்தகத்தை நேசிக்கிறேன். தங்களது எண்ணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் விடப்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் உள்ள ஞானத்தை புரிந்து நடைமுறைப்படுத்தினால் உங்களுடைய முழுக் கண்ணோட்டமும் வாழ்க்கையையும் மாறிவிடும். தெய்வீகத்தில் நம்பிக்கை வைத்து நற்செயல்களைச் செய்தவாறு முன்னேறிச் செல்லுங்கள் 😇#ஒரே அன்பு #நன்றி பாராட்டுங்கள்#ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்
[பரமஹம்ஸ யோகானந்தரது] ஒரு யோகியின் சுயசரிதம் பல வருடங்களாக பிரபலமான மிகச் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள அவரது ஸெல்ஃப்-ரியலைசேஷன் மையங்கள், உண்மையாக இறைவனைத் தேடும் ஆன்மாக்களுக்கு மிகப் பிரியமான ஏகாந்தவாச இல்லங்களாக விளங்குகின்றன. . . . நான் 1950-ல் பெருமாநகர லாஸ் ஏஞ்சலீஸில் [ஸெல்ஃப்-ரியலைசேஷன் தலைமையகத்தில்] அவரைச் சந்தித்தபோது அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூறுகிறேன். . . அவரைச் சூழ்ந்திருக்கும் அமைதி இவ்வுலகைச் சார்ந்ததல்ல, அத்துடன் அவரது சாந்தம் நமது தினசரி தேடலில் நாம் எதிர்நோக்கும் வகைக்கு அப்பாற்பட்டது. அவர் பிரபலமாயிருப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படை. . . .
அவரது வெற்றி வசீகரத்தை விட மேலானது. அவர் ஓர் இரகசியத்தை வைத்திருந்தார், கிரியா யோக (உலளாவிய செயற்பாட்டு யோகம்) இரகசியம்…”
“தற்காலத்திய இந்து மகான்களின் அசாதாரணமான வாழ்க்கைகளையும் சக்திகளையும் நேரில் கண்ட ஒரு சாட்சியாக, இந்தப் புத்தகம் சரியான காலத்திற்கான மற்றும் காலத்தால் அழியாத முக்கியத்துவம்வாய்ந்த ஒன்று…அவருடைய அபூர்வமான வாழ்க்கை வரலாறு நிச்சயமாக மேற்கில் இதுவரை வெளிடப்பட்ட நூல்களில் இந்திய ஆன்மீக வளத்தை….மிகவும் அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுபவைகளில் ஒன்று.”
“மிகவும் கவரும் வகையில் எளிமையாக மற்றும் தன்னை-வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளில் ஒன்று…பயில்வதற்கான ஓர் அசலான களஞ்சியம். இந்தப் பக்கங்களில் ஒருவர் சந்திக்கும் புகழ்பெற்ற ஆளுமைகள்…வளமான ஆன்மீக ஞானத்தால் கொடையளிக்கப்பட்ட நண்பர்களாக நினைவிற்கு வருகின்றனர், மற்றும் இவர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவர் இறை-உன்மத்தம் கொண்ட ஆசிரியர் தானே ஆவார்.”
“(யோகானந்தரின்) போற்றப்படும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் அவர் யோகப் பயிற்சியின் உயர்த் தளங்களில் அடையப்பெறும் ஒரு திகைப்பூட்டும் விவரங்களையும் யோக மற்றும் வேதாந்த நிலைப்பாடுகளிலிருந்து மனித இயல்பின் மீதான பல ஆர்வத்தைத் தூண்டும் கண்ணோட்டங்களையும் வழங்குகிறார்.”
“உணர்வுநிலைக்கும் பருப்பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிய ஓர் அறிவியல்பூர்வப் புரிதலின் படிப்படியான வெளிப்பாடு நம் காலத்தின் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த போக்குகளில் ஒன்றாகும்….நமது அன்றாட உடல்நலமும் நல்வாழ்வும் எந்த அளவிற்கு நமது மன நிலையைச் சார்ந்திருக்கிறது என்று மருத்துவர்கள், அத்துடன் நோயாளிகளும், இப்போது பார்க்கத் துவங்கியுள்ளனர்….உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் இடையுறவை வெளிப்படுத்தியவாறு, இந்த ஆய்வுகள் நாள்பட்ட வலிக்கான சிகிச்சையில் ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் பல வருடங்களுக்கு முன் போதிக்கப்பட்ட “எப்படி-வாழ்வது” தத்துவங்களின் மகத்தான மதிப்பை வெளிப்படுத்தும் வலி பற்றிய ஒரு பார்வைக்கு வழிவகுத்துள்ளது.
நெருங்கிய சீடர்களின் கதைகள்
ஒரு யோகியின் சுய சரிதம் நூலின் எழுத்துப் பணியானது, அதை முடிக்க பரமஹம்ஸ யோகானந்தரின் பல வருடங்களை எடுத்துக்கொண்ட ஒரு திட்டப்பணி ஆகும். 1931-ல் நான் மவுண்ட் வாஷிங்டனுக்கு வந்த போது, அவர் அதன்மீதான பணியை ஏற்கனவே துவங்கியிருந்தார். ஒருமுறை நான் அவருடைய வாசிப்பு அறையில் அவருக்காக சில செயலாளருக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருந்த போது அவர் எழுதிய முதல் சில அத்தியாயங்களில் ஒன்றைக் காணும் பேறு பெற்றேன்—அது “புலிச் சாமியார்” பற்றியது. அது நூலின் ஒரு பகுதியாகப் போகிறது என்ற காரணத்தால் அதைச் சேமித்து வைக்கும்படி குருதேவர் கேட்டுக் கொண்டார்.

பல “ஆஹா”க்களுக்கும் “ஓஹோ”க்களுக்கும் நடுவில் நாங்கள் இறுதியில் நீண்ட காலமாக எதிர்பார்த்த இந்தியாவின் பெரிய மகான்களுடனும் முனிவர்களுடனும் அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாற்று விவரங்களை—அவற்றால் அவருடன் இருந்த விலைமதிப்பற்ற நேரங்களின் போது அவர் அடிக்கடி எங்களை வசீகரித்திருந்தார்—காணும் எங்கள் ஆனந்தத்தை எங்களால் மிக அரிதாகவே வெளிப்படுத்த முடிந்தது. அவர் ஒரு சில பக்கங்களைத் திறந்தார்; மகாவதார் பாபாஜி பற்றிய விளக்கத்தை இறுதியில் காண்பித்தார். ஏறத்தாழ மூச்சு நின்ற நிலையில் நாங்கள் மரியாதை செய்தோம் மற்றும் எமது பரம்-பரமகுருவின் உருவப்படத்தின் கணநேரத் தோற்றத்தை முதலில் காண்பவர்களில் ஒருவராக நாங்கள் உணர்ந்த அருளாசியில் மூழ்கினோம்.

அந்த நூலின் பெரும்பாலான பகுதிகளை குருதேவர் ஆசிரமத்தில் தன் வாசிப்பு அறையில் எழுதினார். அவர் இரவு முழுவதும் எழுதக்கூறிய நேரங்களையும் நாள் முழுவதுமோ அல்லது அதற்கு மேலேயோ அது தொடர்ந்த காலங்களையும் நான் நினைவுகூருகிறேன். சில நேரங்களில் அவருடைய வார்த்தைகளைச் சுருக்கெழுத்தில் எழுதியும் பிற நேரங்களில் தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தியும் பணிசெய்த தயா மாதாவைப் போன்றும் ஆனந்த மாதாவைப் போன்றும் நான் செயலாளருக்குரிய கடமைகளில் ஈடுபடவில்லை. அவர்கள் இடையூறின்றிப் பணிசெய்ய முடியும் வண்ணம் அவர்களுக்கான உணவுகளைச் சமைப்பதே பெரும்பாலும் என் கடமையாக இருந்தது!

50 க்கும் மேலான உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
ஒரு யோகியின் சுயசரிதத்தின் உருவாக்கம்

இந்நூல் நீண்ட காலத்திற்கு முன்பே எழுதப்படுவதைப் பற்றி தீர்க்க தரிசனமாகக் கூறப்பட்டிருந்தது. நவீன காலத்தில் யோகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான, பத்தொன்பதாவது நூற்றாண்டின் வணக்கத்திற்குரிய மகான் லாஹிரி மகாசயர் முன்கூட்டியே அறிவித்தார்: “நான் மறைந்து ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மேற்கில் எழப்போகும் யோகத்தின் ஆழ்ந்த ஆர்வத்தின் காரணமாக, என் வாழ்க்கையின் விவரம் எழுதப்படும். யோகம் பற்றிய செய்தி இவ்வுலகைச் சூழும். அது மனித சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்கு உதவி புரியும்: ஒரே பரமபிதாவைப் பற்றிய மனித இனத்தின் நேரடியாக அறியும் சக்தியின் அடிப்படையிலான ஒற்றுமை.”
பல வருடங்களுக்குப் பின்னர் லாஹிரி மகாசயரின் உயர்ந்த சீடரான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர், ஸ்ரீ யோகனந்தருக்கு இந்தத் தீர்க்க தரிசனத்தை எடுத்துரைத்தார்.
ஓர் அளவிடற்கரிய வாக்குறுதி
இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில், பரமஹம்ஸ யோகானந்தர் எழுதுகிறார்:
“இறைவன் அன்புமயமானவன்; படைப்பிற்கான அவனுடைய திட்டம், அன்பில் மட்டுமே வேரூன்றி இருக்க முடியும். அறிவாளிகளின் பகுத்தறிவு வாதங்களுக்கு மாறாக இந்த எளிய உண்மை மனித இதயத்திற்கு ஆறுதல் அளிக்கவில்லையா? மெய்ப்பொருளின் ஆழத்தைத் துளைத்தறிந்த முனிவர்கள் அனைவரும் கூறுவது: உலக முழுவதிற்கும் ஒரு தெய்வீகத் திட்டம் இருக்கிறது. அது மிக அழகானது, ஆனந்த மயமானது.”
இந்திய முனிவர்களின் அறிவெல்லை-கடந்த சத்தியத்தில் ஓர் ஆழ்ந்த நம்பிக்கைக்கு வாயிலைத் திறக்கும் உங்களுடைய சொந்த ஆன்மாக்களை நீங்கள் காண்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அந்த நம்பிக்கை சோதனைகளின் ஊடாகவும் உண்மையான மகிழ்ச்சியின் மற்றும் நிறைவேற்றத்தின் முயற்சியிலும் உங்களைப் பேணிக்காக்கிறது.