ஜன்மோத்ஸவ் வேண்டுகோள் — 2025

4 ஜனவரி, 2025

“குருவின் போதனைகளைக் கேட்பது என்பது, சீடனை உன்னத இலக்கிற்கு அழைத்துச் செல்லும் ஒரு கலை. விஞ்ஞான யோகம், சாங்க்ய தர்க்கம் பற்றி எதுவும் பக்தர் அறியாவிட்டாலும், கர்ம யோகியாகத் திகழத் தகுதிபெற தன்னுடைய செயல்களிலிருந்து தன்னைப் போதுமான அளவு விலக்கிக் கொள்ள முடியாவிட்டாலும், முழு நம்பிக்கையுடன் தனது குருவின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர் முக்தி அடைவார்.”

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் அவிர்பவ் திவஸ் (அவதார தினம்) புனித நாளில் உங்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். நாம் அனைவரும் பக்தியுடனும், விசுவாசத்துடனும் கூடியிருந்து, நமது அன்புக்குரிய குருதேவரின் வாழ்க்கை மற்றும் பணியைக் கொண்டாடும் தருணம் இது. அவருடைய தெய்வீக இருப்பு தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை ஆசிர்வதித்து மாற்றியமைக்கிறது. கிரியா யோகம் என்ற புனிதமான விஞ்ஞானத்தைப் பற்றிய அவரது வெளிப்படுத்தும் போதனைகள் மூலம், குருதேவர் இறைவனை அடையும் காலத்தால் அழியாத மார்க்கத்திற்கு ஒளியூட்டி, எண்ணற்ற சாதகர்களை பரம்பொருளில் உள்ள தங்கள் சாசுவத பெரு வீட்டிற்கு திரும்பிச் செல்ல ஊக்குவித்துள்ளார்.

குருதேவரின் பணிகளுக்கு உதவ ஒரு வாய்ப்பு

உங்களின் தாராளமான ஆதரவிற்கு நன்றி, உண்மையான ஆன்மீகப் பாதைக்காக ஏங்கும் ஆயிரக்கணக்கானோரை எங்களால் அடைய முடிந்தது. பரமஹம்ஸரின் போதனைகளின் ஒளி, எல்லைகள் மற்றும் மொழிகளை தாண்டி எண்ணற்ற ஜீவன்களை ஒளிரச் செய்து, எப்போதும் பிரகாசிக்கிறது. இந்த வளர்ச்சியுடன், அவரது ஞானத்தால் ஆறுதல் அடைந்த அனைவருக்கும் நம் சேவையை விரிவுபடுத்தும் புனித பொறுப்பு வருகிறது. குருதேவரின் பணிக்கு ஆதரவளித்து, இந்த புனித பணியில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம். புத்தாண்டில் நுழையும் அதே சமயம், வளர்ந்து வரும் நமது ஆன்மீக குடும்பத்திற்கு சேவை செய்வதில் நமது சாதனைகள் மற்றும் பார்வைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்:

  • பரமஹம்ஸரின் கிரியா யோக போதனைகள் மற்றும் ஞான வெளியீடுகளை பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்தல்
  • YSS சன்னியாசிகள் வழி நடத்தும் நேரில் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள் மூலம் பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியாக உதவி வழங்குதல்
  • YSS ஆசிரமங்களை பராமரித்தல்


இந்த பணிகளை நிறைவேற்ற ₹15 கோடி செலவாகும் என்று மதிப்பிடுகிறோம். இந்த புனிதமான முயற்சிக்கு தாராளமாக உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது

உங்களின் தாராளமான பங்களிப்புகள் மூலம், குருதேவரின் போதனைகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் எண்ணற்ற ஆன்மாக்களைச் சென்றடைந்துள்ளன. இந்த தெய்வீக பாரம்பரியத்தை வரும் தலைமுறைகளுக்காக பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும் நாம் கைகோர்ப்போம். பிரார்த்தனைகள், சேவை அல்லது நிதி பங்களிப்புகள் மூலம் குருதேவரின் பேரொளியையும் பேரன்பையும் உலகம் முழுவதற்கும் பரப்புவதற்கு உங்கள் உதவி மிக முக்கியமானது.

குருதேவரின் ஆசிரமங்களில் பணியாற்றும் சேவகர்களுடன் இணைந்து சன்னியாச சமூகமாகிய நாங்கள், உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் தாராளமான பங்களிப்புகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் இந்த புனித சந்தர்ப்பத்தில் நீங்கள் அமைதியும் ஆனந்தமும் அடையப் பெறுவீர்களாக.

குருதேவரின் அன்பில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

முழு வேண்டுகோளையும் கீழே படியுங்கள்:

கிரியா யோக போதனைகள் மற்றும் ஞான வெளியீடுகளை பல்வேறு இந்திய மொழிகளிலும் கிடைக்கச் செய்தல்

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற நாடுவோர்களுக்கு உத்வேகம் அளித்து உயர்த்தி, ஆன்ம அனுபூதிப் பாதையை வழங்குகின்றன. குருதேவரின் உன்னதமான போதனைகளிலிருந்து இன்னும் பலர் பயன்பெறும் வகையில், இந்தப் புனித போதனைகளை அதிக மொழிகளில் கிடைக்கச் செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். குருதேவரின் செய்தி, முடிந்தவரை அதிகமான சத்தியம் நாடுபவர்களுக்கு, அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில், உள்வாங்கக்கூடிய வகையில், சென்றடைவதை உறுதிசெய்வதே எங்களின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

குருதேவரின் ஞான போதனைகள் சென்றடைதலை விரிவுபடுத்துதல்

YSS பாடங்களின் புதிய பதிப்புகள்

குருதேவரின் விருப்பத்திற்கு ஏற்ப, 2019 இல் YSS பாடங்களின் புதிய மற்றும் விரிவான பதிப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இந்த பதிப்பை நாம் ஏற்கனவே இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிட்டுள்ளோம். மேலும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மொழிபெயர்ப்புகளை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று, தங்கள் மொழியில் இந்த போதனைகளை வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

“YSS பாடங்கள் ஒரு தெய்வீக வரைபடமாக என்னை என் ஆன்மாவிற்கு வழிநடத்துவதாக உணர்கிறேன், ஒவ்வொரு பக்கமும் குருதேவரின் ஞானம் மற்றும் அன்புடன் உயிர்ப்புடன் உள்ளது. இந்த புனித போதனைகளை எங்கள் மொழியில் மொழிபெயர்த்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”
– கே.எம். திருவள்ளூர், தமிழ் நாடு

துணை சாதனங்கள் மற்றும் பாடங்கள் செயலி

குருதேவரின் போதனைகளை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்கும் உயரிய துணை சாதனங்களையும் பாட மாணவர்கள் பெறுகிறார்கள். பல்வேறு இந்திய மொழிகளில் சண்னியாசிகளால் வழிநடத்தப்பட்ட தியானங்கள் மற்றும் வீடியோ வகுப்புகள் உள்ளிட்ட இந்த ஆன்மீக வளங்கள், பக்தர்கள் தியான உத்திகளை நன்கு புரிந்துகொள்ளவும் ஆழமாகப் பயிற்சி செய்யவும் உதவுகின்றன.

“ஆசிரமங்கள் தொலைவில் இருப்பதால், சன்னியாசிகளிடமிருந்து விரிவான தனிப்பட்ட வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு பயணம் செய்வது சவாலாக உள்ளது. என் தாய்மொழியில் ஒருமுகப்பாட்டு உத்தி குறித்த வீடியோ வகுப்பைப் பார்ப்பது உண்மையான அருளாசி ஆகும். இது எனக்கு தெளிவை அளித்து, உத்தியை இன்னும் திறம்பட புரிந்து கொள்ளவும் பயிற்சி செய்யவும் உதவியது.”
– டி.பி, காக்கிநாடா, ஆந்திரா

YSS பாடங்கள் செயலியை இலவசமாக வழங்குகிறோம், இது பக்தர்கள் பாடங்களை டிஜிட்டல் முறையில் எளிதாகக் கற்க உதவுகிறது. முக்கிய அம்சங்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் செயல்பாட்டுடன் மேம்படுத்தப்பட்ட இரீடர்; தலைப்பு அடிப்படையில் துணை பாடங்களை பிரௌசிங் செய்தல்; YSS செய்திகள் மற்றும் வலைப்பதிவுகளுக்கான அணுகல்; மற்றும் வழிநடத்தப்பட்ட மற்றும் ஆன்லைன் தியானங்களில் பங்கேற்கும் வசதி ஆகியவை அடங்கும்.

புத்தகங்களின் மொழிபெயர்ப்பு

பாடங்களுக்கு கூடுதலாக, குருதேவரின் ஆன்மீக உன்னதமான, ஒரு யோகியின் சுயசரிதம் மற்றும் அவரது இதர நூல்களை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றை அச்சிடப்பட்ட, ஆடியோ மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் கிடைக்கச் செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டில், ஒரு – ஒரு யோகியின் சுயசரிதம் குஜராத்தியில் – ஆடியோ புத்தகத்தை வெளியிட்டோம் – மேலும் பல்வேறு மொழிகளில் 16 புதிய புத்தகங்களை அச்சிட்டோம்.

இந்த புனித போதனைகளை பரப்புவதற்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் பின்வருவன அடங்கும்:

  1. YSS பாட சந்தாக்களுக்கு மானியம் வழங்குதல், இதனால் அனைவரும் இந்த போதனைகளைப் பெற முடியும்.
  2. மேலும் பல மொழிகளில் குருதேவரின் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது.
  3. இன்றைய டிஜிட்டல் உலகில் உண்மை நாடுவோரின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு சிறப்பாக சேவை செய்ய தொழில்நுட்பத்தை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
குஜராத் வதோதராவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், "ஒரு யோகியின் சுயசரிதம்" குஜராத்தி ஆடியோ புத்தக பதிப்பு வெளியீடு

உங்களின் தாராளமான ஆதரவிற்கு நன்றி, நம் பாடங்கள் மற்றும் புத்தகங்களின் விலைகள் அனைத்திற்கும் கணிசமான மானியங்கள் வழங்குவதன் மூலம் ஒப்பிடக்கூடிய சந்தை விலையை விட மிகக் குறைவாக நிர்ணயிக்க முடிந்தது. குருதேவரின் மாற்றம் தரும் போதனைகளை நாடுவோர் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நீங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்பிக்கையில், வரும் ஆண்டில், போதனை வெளியீடுகள் அனைத்தையும் குறைந்த விலையில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஆங்கிலத்தில் "த யோகா ஆஃப் பகவத் கீதா" வெளியீடு
தெலுங்கில் "ஒளி உள்ள இடத்தினில்" மின்புத்தகம் வெளியீடு
பக்தர்களுக்கு ஆன்மிகரீதியாக உதவி அளித்தல்

பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முயற்சிகள் மூலம் இந்திய துணைக் கண்டம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு உதவுவதில் YSS உறுதியாக உள்ளது: 

சன்னியாசிகள் விஜயம், சங்கங்கள் மற்றும் கிரியா தீட்சை

YSS நொய்டா ஆசிரமத்தில் சாதனா சங்கம்
லூதியானாவில் ஒரு சன்னியாசிகள் வருகை நிகழ்ச்சியின் போது மகிழ்ச்சிகரமான முகங்கள்

2024 ஆம் ஆண்டில், YSS சன்னியாசிகள் இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பயணம் செய்து, சொற்பொழிவாற்றி, கிரியா யோக தீட்சைகள் நடத்தி, ஆயிரக்கணக்கான இதயங்களைத் தொட்ட ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தினர். கூடுதலாக, ராஞ்சி, நொய்டா, தக்ஷினேஸ்வர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள எங்கள் ஆசிரமங்களிலும், இகத்புரி சத்யானாலயாவிலும் 20 சாதனா சங்கங்களை நடத்தி, 3,500 பக்தர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீக புதுப்பித்தலுக்காக குருதேவரின் போதனைகளில் நான்கு நாள் ஆழ்ந்து மூழ்க வழி வகுக்கப்பட்டது. நம் சன்னியாசிகள் நொய்டா ஆசிரமத்தில் 10 ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் வழிநடத்தினர், மேலும் பூரி மற்றும் திஹிகா ரிட்ரீட் மையங்களிலும் ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் நடத்தினர்.

ஆன்லைன் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிகள்

ஆன்லைன் உத்வேகம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஸ்வாமி சுத்தானந்தா உரையாற்றுகிறார்

நேரில் நிகழ்ச்சிகள் நடத்துவது எங்கள் முயற்சியின் மையமாக இருக்கும் அதே வேளையில், தொலைவு, உடல்நலம் அல்லது பிற கட்டுப்பாடுகள் காரணமாக இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதவர்களைச் சென்றடைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம், YSS சன்னியாசிகள் ஆன்லைன் தளங்கள் மூலம் தொடர்ந்து சென்றடைய ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாராந்திர தியானங்களுக்கு கூடுதலாக, குருதேவரின் மாற்றம் தரும் “எப்படி-வாழ-வேண்டும்” கோட்பாடுகள் குறித்த 30 க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்வுகள் மற்றும் உரைகள் 2024 இல் YSS இணையதளம் மற்றும் ஆன்லைன் சேனல்கள் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு நடைமுறை ஆன்மீக வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்கின.

புத்தாண்டில் சிறப்பு நிகழ்வுகள்

  • நமது மதிப்பிற்குரிய தலைவரும், ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி பக்தர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், அவர்களை மேம்படுத்தவும் அடுத்த சில வாரங்களில் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு வருகைதர உள்ளார். பெங்களூரு, சென்னை, அகமதாபாத், நொய்டா மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன, இது பக்தர்களுக்கு அவரது தரிசனத்தைப் பெறவும், அவரது உன்னத ஞானம் மற்றும் நடைமுறை ஆன்மீக வழிகாட்டுதலிலிருந்து பயனடையவும் அருமையான வாய்ப்பை வழங்குகிறது.
  • பிரயாக்ராஜில் நடைபெறும் புனித கும்ப மேளாவில் பக்தர்களை வரவேற்க நாங்கள் தயாராகி வருகிறோம். YSS முகாமில் தங்குவதற்கும், உணவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். YSS சன்னியாசிகள் கூட்டு தியானங்கள் மற்றும் சத்சங்கங்களை நடத்துவார்கள், இது பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும்.

அனைவராலும் செலுத்த முடிவதை உறுதிப்படுத்த YSS அனைத்து நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கான கட்டணங்களை குறைந்தபட்சமாக வைத்திருக்க முயற்சிக்கிறது, மேலும் அவ்வாறு செய்ய, அத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் உள்ள கணிசமான செலவுகளை சமாளிக்க எங்களுக்கு உங்கள் உதவி மிகவும் முக்கியம்.

ஆசிரமங்களைப் பராமரித்தல் மற்றும் பக்தர்கள் உபசரிப்பு

குருதேவர் YSS ஆசிரமங்களை, சாதகர்கள் ஆறுதல் பெறும், ஆழ்ந்த தியானம் செய்யும் மற்றும் சன்னியாசிகளிடமிருந்து ஆன்மீக வழிகாட்டுதல் பெறக் கூடிய தெய்வீக அமைதி மற்றும் ஆன்மீக புத்துணர்ச்சியின் சரணாலயங்களாக அகக்காட்சி கண்டார். இந்த புனித இடங்கள் பக்தர்களின் ஆன்மீக வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் அவற்றை பராமரிப்பதற்கு கணிசமான வள ஆதாரங்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனிப்பு தேவைப்படுகிறது.

“ராஞ்சி ஆசிரமத்திற்குள் நுழைவதை அமைதி மற்றும் அன்பின் வானுலக சாம்ராஜ்யத்திற்குள் அடியெடுத்து வைப்பதைப் போல் உணர்ந்தேன். தியான அமைதி, அழகாக பராமரிக்கப்பட்டு வரும் சூழல், அன்பான உபசரிப்பு ஆகியவை உலகத்திலிருந்து என்னை பிரித்து உடனடியாக தெய்வீகத்துடன் இணைக்கக்கூடிய சூழலை உருவாக்கியது.”
— டி. எம். கோலாப்பூர், மகாராஷ்டிரா

தியான தோட்டங்கள் மற்றும் தியான மந்திர்கள் முதல் ராஞ்சியில் உள்ள லிச்சி வேதி மற்றும் ஸ்மிருதி மந்திர் போன்ற புனிதத் தலங்கள் வரை, ஒவ்வொரு இடமும் ஒரு அமைதியான மற்றும் ஆன்மீக சூழலை உருவாக்க கவனமாக பராமரிக்கப்படுகிறது. இந்த புனிதப்படுத்தப்பட்ட இடங்கள் பக்தர்களை இறைவன் மற்றும் குருவுடனான தொடர்பை ஆழப்படுத்தவும், அக அமைதி மற்றும் இறைத் தொடர்பை வளர்க்கவும் ஊக்குவிக்கின்றன.

YSS ஆசிரமங்கள், பக்தர்களுக்கு வசதியான தங்குமிடங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இதனால் அனைத்து பக்தர்களும், போதுமான வசதி இல்லாதவர்கள் கூட, வருகை தந்து தங்கள் சாதனாவில் கவனம் செலுத்த முடியும். அனைத்து வருகையாளர்களுக்கும் அமைதியான மற்றும் உற்சாகமான அனுபவத்தை உறுதி செய்யும் பொருட்டு நவீன வசதிகள், திறமையான பராமரிப்பு சேவைகள் மற்றும் சுத்தமான, சுகாதாரமான சூழல் ஆகியவை இதில் அடங்கும்.

செயல்பாட்டு செலவுகள்

இந்த ஆசிரமங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் குறிப்பிடத்தக்க செலவுகள்:

  • வருகை தரும் பக்தர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் வசதிகளை வழங்குதல்
  • இந்த வசதிகளை ஏற்படுத்தும் மற்றும் பராமரிக்கும் ஊழியர்களுக்கான சம்பளம்
  • வருகையாளர் வசதிகள், தியான அரங்குகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளைப் புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்


உங்கள் பங்களிப்புகள் இந்த புனித இடங்களை பாதுகாக்கவும், எண்ணற்ற உண்மை நாடுபவர்களுக்கு ஆறுதலையும் ஆன்மீக புதுப்பித்தலையும் தரும் நம் சேவை நடவடிக்கைகளைத் தொடரவும் சாத்தியமாக்குகின்றன. வாழ்க்கையின் அனைத்துத் தரப்பிலிருந்தும் வருபவர்களுக்கு ஆன்மீக ரீதியில் துடிப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை வழங்க வேண்டும் என்ற குருதேவரின் தொலைநோக்கு பார்வையை நாம் அனைவரும் இணைந்து நிறைவேற்ற முடியும்.

இந்தப் புனித ஆசிரமங்களைப் பராமரிப்பதற்கும், குருதேவரின் போதனைகளை இந்திய மொழிகளில் வெளியிடுவதற்கும், நேரில் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கும் ஆண்டுதோறும் ₹15 கோடி செலவாகிறது.

இதைப் பகிர