கிரியா யோகத்தின் 150வது ஆண்டுவிழா

ஆண்டு 2011 கிரியா யோகம் எனும் பண்டைய விஞ்ஞானத்தை நவீன உலகில் மீண்டும் அறிமுகப்படுத்திய நிகழ்வின் 150 வது ஆண்டு நிறைவைப் பதிவு செய்தது. 1861ம் ஆண்டு தான் லாஹிரி மகாசயர் இமயமலையில் மரணமற்ற குரு மகாவதார பாபாஜியைச் சந்தித்து புனித ஆன்ம-விஞ்ஞானத்தில் தீட்சை பெற்றார். பரமஹம்ஸ யோகானந்தர் எழுதியிருப்பது போல: “இந்தச் சுப நிகழ்வு லாஹிரி மகாசயருக்கு மட்டும் ஏற்படவில்லை; அது, மொத்த மனித குலத்திற்கே ஓர் அதிர்ஷ்ட வேளையாகும். தொலைந்து போயிருந்த, அல்லது நெடுங்காலமாக மறைந்து போயிருந்த மிக உயர்ந்த யோகக் கலை மறுபடியும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.”

இந்த ஆண்டு விழாவை சிறப்பிற்பதற்காகவும் ஆன்மாவிற்கு முக்தியளிக்கும் கிரியா உத்தியை உலகெங்கிலும் உள்ள உண்மை நாடுவோருக்கு மேலும் பரப்புவதில் உதவி செய்வதற்காகவும் 2011ல் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன:

  •  யோகதா சத்சங்க சஞ்சிகையின் ஒரு முழு இதழும் கிரியா யோக விஞ்ஞானத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
kriyapage
  • ஆன்ம முக்திக்கான இந்த புனித உத்தியின் வரலாறு மற்றும் நன்மைகளை முன்னிலைப்படுத்தும் ஒரு புதிய பகுதி ஒய் எஸ் எஸ் இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.
  •  ஒய் எஸ் எஸ் மையங்கள் மற்றும் மண்டலிகள் கிரியா யோகம் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தின, இதில் ஒய்.எஸ்.எஸ்/ எஸ்.ஆர்.எஃப் தலைவர் ஸ்ரீ மிருணாளினி மாதாவின் சிறப்பு செய்தி பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
  • 2011ம் ஆண்டு ஷரத் சங்கத்தின் போது, அனைத்து வகுப்புகளிலும் கிரியா விஞ்ஞானத்தின் பல முக்கிய அம்சங்களின் மீது ஒரு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
kriyamagzine
  • யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய்எஸ்எஸ்) தங்கள் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் சிறப்பு நிகழ்வுகளையும் அத்துடன் சிறப்பு விஷயங்களையும் முதன்மைப்படுத்திக் காட்டியது. சிறப்பு நிகழ்வுகளில் ராணிகேத்திலிருந்து இருந்து பாபாஜியின் குகைக்கு— லாஹிரி மகாசயர் தனது குருவான பாபாஜியிடம் கிரியா யோக தீட்சைப் பெற்ற இடம்—லாஹிரி மகாசயரின் 1861 பயணத்தை நடித்துக் காட்டும் பாத யாத்திரைகள் இருந்தன. ஒய்எஸ்எஸ் உறுப்பினர்கள் மற்றும் ஒய்எஸ்எஸ் சன்னியாசிகள் கொண்ட இரு குழுக்கள் வெவ்வேறு சமயங்களில் இமயமலை அடிவாரத்தில் நடந்த பதினோரு மணி நேரக் கடினமான பயணத்தில் பங்கேற்றன. பங்கேற்ற பக்தர் ஒருவர் எழுதினார்:

“காலை 6:00 மணிக்கு எங்கள் பயணம் பிரகாசமாக தொடங்கியது. அது ஓர் அழகான உற்சாகம் தரும் காலை மற்றும் இனிமையான வானிலை எங்கள் முயற்சியை ஊக்குவித்தது. ஒரு கூடுதல் வெகுமதியாக, சுவாமி நிர்வாணானந்தர், பிரம்மச்சாரிகள் சதானந்தர் மற்றும் அச்சுதானந்தர், மற்றும் பிரவேஷார்த்தி திவ்யான்ஷு ஆகியோர் எங்களுக்கு உத்வேகமூட்டி, வழியில் ஞான முத்துக்களை வழங்கினர். நாங்கள் சிறிய  நகரங்களையும் கிராமங்களையும் கடந்தபோது, உள்ளூர்வாசிகள் எங்களை வரவேற்று உற்சாகப்படுத்தினார்கள். ஆறு மணி நேரத்திற்குள் நாங்கள் பிண்டா என்ற சிறிய நகரத்தை அடைந்தோம். இங்கே நாங்கள் எங்கள் எளிய மதிய உணவை சாப்பிட்டோம். கம்பீரமான மலைகள், ஆன்மாவுக்கு இதமளிக்கும் காட்சிகள், முடிவற்ற வானம், எழுச்சிதரும் ஆதவன் மற்றும் மிதக்கும் மேகங்கள் மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தன, மலையேற்றத்தின் சிரமத்தை நாங்கள் உணரவில்லை. இயற்கை அன்னையின் அமைதியை அனுபவித்தவாறும் இறைவனின் மற்றும் குருவின் அன்பை உணர்ந்தவாறும், நாங்கள் அழகான நீரோடைகள் மற்றும் வனப்புள்ள காடுகளைக் கடந்து சென்றோம்.

“பின்டாவிலிருந்து ஐந்து மணிநேர மலையேற்றத்திற்குப் பிறகு நாங்கள் பாபாஜியின் குகையை அடைந்தபோது, நாங்கள் ராணிகேத்தில் இருந்து பதினோரு மணிநேரம் கடினமான நடைப்பயணம் செய்ததாக எங்களால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. நிச்சயமாக பாபாஜியின் அருளாசிகள் இந்த அனுபவத்தின் பின்னால் இருக்க வேண்டும். குகையில் தியானம் செய்யும்போது, பாபாஜியின் அன்பு எங்கள் மீது பொழிவதை உணர்ந்தோம், உலக இயக்கம் எங்கள் உணர்வுநிலையில் நின்றுவிட்டது, மற்றும் நாங்கள் என்றும் புதிய, தூய ஆனந்தத்தால் ஆட்கொள்ளப்பட்டோம். இது ஒரு மேம்படுத்தும் அனுபவமாக இருந்தது, நாங்கள் ஒவ்வொருவரும் மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து திரும்பி வந்தோம்.”

கிரியா ஆண்டுவிழா கூடுதலாக கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கிய பல அச்சுப் பதிப்புகளிலும் ஆன்லைன் வெளியீடுகளிலும் இடம்பெற்றது:

விளம்பரம்

இதைப் பகிர

Facebook
X
WhatsApp