YSS

தக்ஷினேஸ்வரில் 75 ஆண்டுகள்

இது லாஹிரி மகாசயர் மற்றும் பாபாஜியின் விருப்பம் மற்றும் அருளாசிகளின் மூலம் தக்ஷினேஸ்வரின் கங்கைக் கரையில் நமது யோகதா மடம் அமைப்பதற்கான அழகிய இடத்தைப் பெற முடிந்தது. எங்களது மிகப்பெரும் சொத்தமான இதனைச் சென்றடைய கல்கத்தாவிலிருந்து 20 நிமிடங்கள் ஆகும். நான் இதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன்.

— Paramahansa Yogananda, in 1939

இந்தியாவிற்கு 1935-36 இல் வருகை தந்த குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் கொல்கத்தாவிலிருந்து ராஜரிஷி
ஜனகானந்தருக்கு எழுதினார், “வங்காளத்தின் கிரீட நகரமான கல்கத்தாவில், ஒரு நிரந்தர மையத்தை அமைக்க நான் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறேன், என்பதை அறிந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நான் கிட்டத்தட்ட வெற்றியடைந்து விட்டேன் என்றே எண்ணுகிறேன்.” அவர் நாடு முழுவதும் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்ட காலகட்டத்தில் குருதேவர் கொல்கத்தாவைச் சுற்றிலும் பொருத்தமான மனையைத் தேர்ந்தெடுக்க நிறைய இடங்களை நேரில் சென்று பார்க்க நேரம் ஒதுக்கினார். இருப்பினும் அவர் அமெரிக்காவிற்கு விரைவில் திரும்ப நேரிட்டதால் விஷயத்தைத் தீர்மானிக்க இயலவில்லை. 1939 இல் தான்-தற்போதைய கங்கைக் கரையில் பழத்தோட்டங்கள் மற்றும் பூச்செடிகளுடன் கூடிய இடம் இறுதி செய்யப்பட்டு ஒரு ஜமீன்தாரும், கொல்கத்தாவின் புகழ்பெற்ற வியாபாரியும், மிகச்சிறந்த கிரியா யோகியான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா (நமது பரம் பரம் குருவான ஸ்ரீ லாஹிரி மகாசயரின் சீடர்) என்பவரின் சீடருமான ஸ்ரீ நந்தோ லால் கொருரி என்பவரிடமிருந்து அக்.9, 1939இல் வாங்கப்பட்டது.

பின்னர் பரமஹம்ஸர் தனது ஒரு யோகியின் சுய சரிதத்தில், “தக்ஷிணேஸ்வரத்தில் கங்கையை நோக்கியவாறு அமைந்த மிகக் கம்பீரமான ஒரு யோகதா மடம் 1939ல்அர்ப்பணிக்கப்பட்டது. . கொல்கத்தாவிலிருந்து சில மைல்கள் வடக்கேயுள்ள அந்த ஆசிரமம் நகரவாசிகளுக்கு அமைதியின் புகலிடமாக விளங்குகிறது.இந்தியாவின் பல பாகங்களிலுமுள்ள யோகதா சத்சங்க சொஸைடி, அதன் பள்ளிக்கூடங்கள், மையங்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு தக்ஷிணேஸ்வரத்திலுள்ள மடம்தான் இந்தியத் தலைமையலுவலகம்.”

தயா மாதாஜி ஆசிரமவாசிகள் மற்றும் பக்தர்களுடன் தக்ஷினேஸ்வரத்தில் ஒரு இயல்பான சத்சங்கத்தில் பேசுகிறார். அவரது இடது புறத்தில் ஸ்ரீ மிருணாளினி மாதாவைக் காணலாம்.
ஸ்ரீ தயா மாதா 1964 இல் தக்ஷினேஸ்வரத்திலுள்ள ஒய் எஸ் எஸ் ஆசிரமத்தில் கிரியா யோக தீட்சை அருளும் நிகழ்வை நடத்துகிறார்.அவருக்கும் வலதுபுறம் சுவாமி ஷ்யாமானந்தா காணப்படுகிறார்.
மே, 1959 இல் பூரியில் உள்ள கோவர்த்தன் மடத்தின் பூஜ்ய ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் கிருஷ்ண தீர்த்தர் மற்றும் ஸ்ரீ தயா மாதாஜி, சங்கராச்சாரியார் தக்ஷினேஸ்வரத்திலுள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்திற்கு வருகை தந்தபோது மே 1959

ஆனந்த மோய் மா மற்றும் தயா மாதாஜி, 1961

பல ஆண்டுகளாக யோகதா சத்சங்க ஆசிரமம் குருதேவரின் நேரடி சீடர்களான நமது சங்கமாதவாகவும், தலைவராகவும் 55 ஆண்டுகள் பொறுப்பு வகித்த ஸ்ரீ தயா மாதா,
தற்போதைய தலைவரான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா உட்பட பலரின் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்டது. மற்ற நேரடி சீடர்களான ஸ்ரீ ஆனந்த மாதா, ஸ்ரீ சைலசுதா மாதா, ஸ்ரீ உமா மாதா, ஸ்ரீ முக்தி மாதா, சுவாமி ஆனந்த மோய், சுவாமி பக்தானந்தா மற்றும் சுவாமி பிமலானந்தா ஆகிய நேரடி சன்னியாச சீடர்களும் தங்களது வருகையால் அந்த இடத்தை அலங்கரித்தனர். அவர்களது உத்வேகமூட்டும் சத்சங்கங்களும், கிரியா யோக தீட்சையும் நமது அன்புக்குரிய குருதேவரால் வழங்கப்பட்ட யோக சாதனா எனும் ஜோதியை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. இன்றும் தக்ஷினேஸ்வரத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ஆன்மீக அருளாசிகளுடன் மிகவும் உறுதியாக தெய்வீகத் தேடலில் ஈடுபடுகிறார்கள்.

ஸ்ரீ ஆனந்தமோய் மா 1958 இல் யோகதா சத்சங்க ஆசிரமத்தின் மைதானத்திற்கு விஜயம் செய்த போது, யோகதா சத்சங்க ஆசிரமத்தின் செயல்பாடுகள் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

பூரியில் உள்ள கோவர்த்தன் மடத்தின் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜகத்குரு பாரதி கிருஷ்ண தீர்த்தர் (1958 இல் இவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்கப் பயணத்திற்கு எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் ஆல் நிதியுதவி வழங்கப்பட்டது). 1959 இல் யோகதா சத்சங்க ஆசிரமத்திற்கு வருகை புரிந்து ஸ்ரீ தயா மாதாஜியைச் சந்தித்தார். ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் பணிகளை மிகவும் பாராட்டினார்.

தக்ஷினேஸ்வரத்திலுள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் உள்ள தாமரைக் குளம்.

தக்ஷினேஸ்வரத்திலுள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் உள்ள தாமரைக் குளம்.

பரமஹம்ஸ யோகானந்தரின், “ஒரு யோகியின் சுயசரிதத்தைப் படித்தோ அல்லது அந்த அமைதியான இடத்திற்குச் சென்று அதைப் பற்றி தெரிந்து கொள்ளவோ பல ஆன்மீக பிரமுகர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தால் ஈர்க்கப்பட்டு விஜயம் செய்தார்கள். அவர்களின் மனப்பூர்வமான பாராட்டு வார்த்தைகளும், தன்னிச்சையான வாசகங்களும் கீழ்கண்ட சிலவற்றின் மூலம் பிரதிபலிக்கின்றன: “ எங்களின் சிறப்புமிக்க புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்று,” “புனித பிருந்தாவன மைதானம்,, “ பூமியில் ஒரு சொர்க்கம்,” “கங்கையின் ஆன்மீக சரணாலயம்,” தபோவனம் போன்ற சூழல் கொண்ட இடம்,, அதன் வாயில்களுக்கு அப்பால் நினைத்துப் பார்க்க முடியாத பிரகாசமான அமைதியான இடம்,” “இதயத்திலும் ஆன்மாவிலும் ஆன்மீக விளைவுகளை ஏற்படுத்தும் அசாதாரண சூழல் கொண்ட இடம்.”


மார்ச் 7,1977 அன்று தக்ஷினேஸ்வரில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தின் புனிதமான மைதானத்தில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் முன்மாதிரியான வாழ்க்கையையும், மற்றும் மனித குலத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்பினையும் கௌரவிக்கும் விதமாக இந்திய அரசாங்கத்தால், தபால் தலை மற்றும் முதல்-நாள்-அட்டையை வெளியிட்டு சிறப்பு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் முன்னாள் அமெரிக்கத் தூதரான டாக்டர் பினாய் ரஞ்சன் சென் மற்றும் மேற்கு வங்க சரகத்தின் அப்போதைய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீ எஸ். கே. கோஷ் ஆகியோர் விழாவிற்குத் தலைமை வகித்தனர். டாக்டர் சென் தான் கண்ட அசாதரண அனுபவங்களைக் கூறுகையில், பரமஹம்ஸர் தான் மிகவும் நேசிக்கும் இந்தியாவைப் பற்றிய கவிதையைக் கூறி முடித்த உடனேயே யோகானந்தர் மகா சமாதிக்கு சென்றதைக் குறிப்பிட்டுத் தன் உரையை முடித்தார். இந்த நிகழ்வு மார்ச் 7, 1952-இல் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள பில்ட்மோர் உணவக விருந்தின் போது நடைபெற்றது. டாக்டர் சென் மேலும் கூறினார்: “யோகானந்தர் போன்ற மகான்கள் மனித வாழ்க்கைக்கு செழுமையைத் தந்தனர் என்பதை ஒவ்வொருவரும் உணர முடியும்…. அவரைப் போன்ற மனிதர்கள் ஒருபோதும் மறைவதில்லை….”அவரது செய்தியால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் வாழ்வார். அவர் இனி வருங்காலங்களிலும் வாழ்வார்…. பரமஹம்ஸர் உண்மையிலேயே நாம் அடைய வேண்டிய இலக்கிற்கு வழிகாட்டக்கூடிய நட்சத்திரமாகத் திகழ்கின்றார்.”

தக்ஷினேஸ்வரில் யோகதா சத்சங்க ஆசிரமம் நிறுவப்பட்ட பவள விழா ஆண்டின் பொழுது, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் தொட்டமிட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தால் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை கௌரவிக்கும் வண்ணம், தக்ஷினேஸ்வரத்தில் தபால் தலை வெளியிடும் துவக்க விழாவில் மர்ச் 7, 1977 ஆம் ஆண்டு டாக்டர் பினாய் ரஞ்சன் சென், இந்தியாவின் முன்னாள் அமெரிக்கத் தூதர் பேசுகின்றார். (இடமிருந்து வலமாக) சுவாமி சாந்தானந்தாஜி, ஸ்ரீ டி,என், ஜாதியா மற்றும் பனமாலி தாஸ்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp