இளம் சாதகர் முகாம்கள் 2026

(3-நாள் நிகழ்ச்சிகள் பெங்களூரு மற்றும் சண்டிகரில்)

இந்த முகாம்களுக்கான பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது!

நிகழ்வுகள் பற்றி

தியானம் செய்யும்போது, உங்களது முழு மனதையும் இறைவனிடம் லயிக்கச் செய்யுங்கள். ஒரு கடமையைச் செய்யும்போது, அதில் உங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்துங்கள். ஆனால், வேலை முடிந்தவுடனே, உங்களது மனதை இறைவன் மீது வையுங்கள். அவனைப் பற்றி சிந்திக்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் ஒவ்வொரு கணத்திலும் இறை இருப்பைப் பயிற்சி செய்ய நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, வேலையின் மத்தியிலும் கூட தெய்வீகத் தொடர்பை நீங்கள் உணர்வீர்கள்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

2025 செப்டம்பரில் YSS ராஞ்சி ஆசிரமத்தில் நடைபெற்ற முதலாவது இளம் சாதகர் சங்கம் ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதன் காரணமாக நாட்டின் பிற பகுதிகளில் இதே போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 2026 பிப்ரவரியில் பெங்களூரு மற்றும் சண்டிகரில் இளம் சாதகர் முகாம்களை நடத்துவதாக YSS மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இந்த முகாம்களின் கருப்பொருள் “இறைப் இருப்பில் வாழ்வது” என்பதாகும்.

23-35 வயதுடைய YSS பக்தர்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த வார இறுதிச் சந்திப்புகள், வெற்றிகரமான மற்றும் சமநிலை வாழ்விற்கான பரமஹம்ஸரின் தனித்துவமான எப்படி-வாழ-வேண்டும் பயிற்சியை வழங்குகின்றன. YSS சன்னியாசிகள் கூட்டுத் தியானங்கள் மற்றும் கீர்த்தனம் அமர்வுகளை வழிநடத்துவார்கள், தனிப்பட்ட ஆன்மீக ஆலோசனைகளை வழங்குவார்கள், மற்றும் குழு கலந்துரையாடல்களுடன் பயிலரங்குகளை நடத்துவார்கள்; அவற்றில் இறை இருப்பில் வாழ்வதற்கான நடைமுறை பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.

கவனிக்கவும்:

  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே முகாம்களில் கலந்துகொள்ளலாம்.
  • முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.
  • இது இடைவிடாது நிகழ்ச்சிகளைக் கொண்டிருப்பதால், பலவீனமான உடல்நலம் அல்லது சிறப்புத் தேவைகளைக் கொண்ட பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகாமின் முக்கிய அம்சங்கள்

  • கூட்டு தியானங்கள் — வழிநடத்தப்படும் YSS தியான உத்திகள் பயிற்சியுடன்
  • கேட்டல் — சுயஆராய்வுடன் YSS பாடங்களின் குழு வாசிப்பு
  • சத்சங்கம் — வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்த அகத் தூண்டுதலையும், நடைமுறை விவேகத்தையும் வழங்குதல்
  • பயிலரங்குகள் — இறை இருப்பில் வாழ்வதற்கான குழு கலந்துரையாடல்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகள்
  • கீர்த்தனம் இசைத்தல் — இதயம், மனம் மற்றும் ஆன்மாவை உயர்த்தும் பக்திபூர்வ குழுப் பாடல் அமர்வுகள்
  • ஆன்மீகரீதியாக ஆலோசனை — அனுபவம் வாய்ந்த சன்னியாசிகளால் தனிப்பட்ட வழிகாட்டுதல், வேண்டுகோளின் பேரில்
  • குரு-சேவா — முகாமின் பல்வேறு பகுதிகளில்: வழிகாட்டுதல், உணவுப் பகுதி, அலங்காரப் பணிகள், பதிவுக்கான இடம், புக் ரூம் போன்ற இடங்களில்
  • பொழுதுபோக்கு — தினசரி குழு பயிற்சிகள் மற்றும் ஒரு பொழுதுபோக்கு நேரம்
  • தோழமை — நாடு முழுவதிலுமிருந்து வந்த ஒருமித்த எண்ணம் கொண்ட இளம் சாதகர்களுடன்
  • சுற்றுலா — சன்னியாசிகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடத்திற்கு

உங்கள் ஆன்மீக ஆர்வத்தை மீண்டும் தூண்ட விரும்பினாலும், ஆன்மீக வாழ்வின் மீதான உங்கள் அர்ப்பணிப்பைப் புதுப்பித்து, புதிய ஆன்மீக நண்பர்களை உருவாக்க விரும்பினாலும், இந்தக் முகாம்களில் கலந்துகொண்டு ஆன்மீக ரீதியாகப் புத்துணர்ச்சி பெற்றுச் செல்ல உங்களை வரவேற்கிறோம்.

முகாம் நிகழ்ச்சி நிரல்

பெங்களூரு

தேதி: பிப்ரவரி 20-22, 2026 (வெள்ளி-ஞாயிறு)
மொழி: ஆங்கிலம்

முகாம் நடைபெறும் இடம்:
யோகதா சத்சங்க தியான கேந்திரா – பெங்களூரு
பரமஹம்ச யோகானந்தா ரோடு,
3வது A கிராஸ், டோம்லூர் II ஸ்டேஜ்,
உடுப்பி ஃபுட் ஹப் அருகில் – டோம்லூர்,
பெங்களூரு – 560071
கர்நாடகா

சண்டிகர்

தேதி: பிப்ரவரி 27-மார்ச் 1, 2026 (வெள்ளி-ஞாயிறு)
மொழி: ஆங்கிலம் மற்றும் இந்தி

முகாம் நடைபெறும் இடம்:
யோகதா சத்சங்க தியான கேந்திரா – சண்டிகர்
செக்டர் 28-டி,
குஜ்ஜார் பவன் அருகில்,
சண்டிகர் – 160002
சண்டிகர்

சாதகர்கள் வியாழக்கிழமை பிற்பகலுக்குள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்து, அன்றைய மாலை சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் நீண்ட தியானத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அளவில் நிறைவடையும்.

மேலும் தகவல்கள்

நிகழ்ச்சி நிரல்

முகாமின் உத்தேச நிகழ்ச்சி நிரல், நிகழ்வு நடைபெறும் தேதிக்கு அண்மையில் கிடைக்கும்.

பதிவு

பங்கேற்பு:

  • இந்த முகாம்களில் YSS / SRF பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு பக்தர் ஒரு முகாமில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்.
  • பங்கேற்பாளர்கள் வியாழக்கிழமை பிற்பகலுக்குள் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்து, அன்று மாலை சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் நீண்ட தியானத்தில் இணைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாக்கில் நிறைவடையும்.
வயது வரம்பு:
  • இந்த முகாம்கள் 23 முதல் 35 வயதுக்குட்பட்ட சாதகர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகின்றன.
  • நீங்கள் இந்த வரம்பிற்கு சற்றே வெளியே இருந்து, இந்த முகாம்களில் பங்கேற்றுப் பயனடைய விரும்பினால், தயவுசெய்து [email protected] என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில்:

  • கிடைக்கப்பெறும் குறைவான வசதிகள் காரணமாக, பதிவுகள் முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்யப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான பதிவுக் கோரிக்கைகள் அதிகபட்ச வரம்பை அடைந்துவிட்டால், பதிவு முன்னதாகவே நிறைவடையக்கூடும்.
  • கவனிக்கவும்: உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நீங்கள் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத பட்சத்தில், பதிவு கட்டணம் திரும்பச் செலுத்தப்படவோ அல்லது வேறு ஒருவருக்கு மாற்றப்படவோ மாட்டாது.

பணம் அனுப்புதல்:

  • பதிவு கட்டணம் (உணவுச் செலவுகள் உட்பட) = ₹2,500
  • தங்குமிடக் கட்டணம் (தங்கும் வசதியைத் தேர்வு செய்தால்) = ₹2,250


பதிவு கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

பதிவு விவரங்கள்

இந்த முகாம்களுக்கான பதிவு இப்போது தொடங்கியுள்ளது!

பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு:

ஆன்லைனில் விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய, இங்கே கிளிக் செய்யவும்.

உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிவு:

(0651) 6655 555 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ராஞ்சி ஆசிரம உதவி மையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியோ, பின்வரும் விவரங்களை வழங்குங்கள்:

  • உங்கள் முழுப் பெயர்
  • YSS பாடப் பதிவு எண்
  • வயது
  • உங்கள் திட்டமிடப்பட்ட வருகை மற்றும் புறப்படும் தேதிகள்
  • மின்னஞ்சல்
  • மற்றும் தொலைபேசி எண்
  • முகவரி

உங்களது மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பைப் பயன்படுத்தி நீங்கள் தொகையைச் செலுத்தலாம். பதிவு வெற்றிகரமாக முடிந்தவுடன், மின்னஞ்சல், வாட்ஸ்அப் அல்லது குறுஞ்செய்தி மூலம் ஓர் உறுதிப்படுத்தலை நீங்கள் பெறுவீர்கள். உங்களுக்கு அத்தகைய அறிவிப்பு கிடைக்கப்பெறாவிட்டால், YSS ராஞ்சி உதவி மையத்தை (0651) 6655 555 என்ற என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.

SRF பக்தர்களுக்கான பதிவு:


  • SRF பக்தர்கள் முகாமகளில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அந்த இடத்திலேயே உணவு அருந்தலாம் என்றாலும், தங்குமிட ஏற்பாடுகளைச் தாங்களே செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • ஆர்வமுள்ள SRF பக்தர்களை மின்னஞ்சல் மூலம் YSS உதவி மையத்தை தொடர்பு கொண்டு மேலே குறிப்பிட்டுள்ளபடி தங்கள் விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்குமிடம்
  • பெங்களூரு மற்றும் சண்டிகரில் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்குத் தங்குமிட வசதி, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த வசதி வியாழக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை கிடைக்கும்.
  • பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாகப் பகிரப்பட்ட தங்குமிட வசதி வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு, பயணப் பொருட்களைப் பேக் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • தங்குமிடம் அல்லது உணவு குறித்த சிறப்புத் தேவைகள் உள்ள பக்தர்கள் தயவுசெய்து தங்களது சொந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தன்னார்வலர்கள்

வழக்கம் போலவே, பதிவு, தங்குமிடம், ஒலி-ஒளி, உணவு, சுகாதாரம், வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் போன்ற பல்வேறு துறைகளிலும் பணியாற்ற பக்தர்-தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றில் சில பகுதிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தன்னார்வலர்கள் வர வேண்டியிருக்கலாம். நீங்கள் தன்னார்வலராகச் சேவை செய்ய விரும்பினால், பதிவுப் படிவத்தில் அதற்கேற்ப குறிப்பிடவும்.

பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி – 834 001

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை)
மின்னஞ்சல்: [email protected]

முந்தைய இளம் சாதகர்கள் நிகழ்வுகள்

இளைஞர்களுக்கான எங்கள் திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினாலோ அல்லது தன்னார்வலராகப் பணியாற்ற ஆர்வம் இருந்தாலோ, [email protected] என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர