ஒரு யோகியின் சுயசரிதம் ஆடியோ புத்தகம் இலவச பதிவிறக்கம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ஐ நிறுவியவர் மற்றும் அதன் குருவான பரமஹம்ஸ யோகானந்தரால் எழுதப்பட்ட விற்பனையில் சாதனை படைத்த ஒரு யோகியின் சுயசரிதம் என்ற ஆன்மீக நூலின் தமிழ் ஒலிப்புத்தகத்தை உங்களுக்கு இலவசமாக அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்

இந்த தமிழ் ஒலிப்புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய இணைப்பை உங்களுக்கு நாங்கள் அனுப்புவதற்கு தயவு செய்து உங்களது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளுங்கள்

ஒரு யோகியின் சுயசரிதம் – இலவச பதிவிறக்கம்

(ஒரு யோகியின் சுயசரிதம் — தமிழ்)

"*" தேவையான விவரங்களைக் குறிக்கிறது

This field is for validation purposes and should be left unchanged.

அல்லது

உலகம் முழுவதிலும் ஆன்மீகப் பொக்கிஷமாகப் போற்றப்பட்ட, இந்த விற்பனையில் சாதனை படைத்த உன்னதமான இப்புத்தகம், இலட்சக்கணக்கானவர்களின் சொந்த பயணத்தை, புதியதும் ஆழமானதுமான ஒரு நிறைவான வாழ்க்கைமுறையாக மாற்றியமைத்துள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் அசாதாரணமான வாழ்க்கைக் கதையின் அனைத்து ஞானமும், நகைச்சுவையும், உத்வேகமும் கூறப்பட்டுள்ள சொற்களில் உடனடியாக விரித்துக்காட்டப்படுகிறது.

இப்புத்தகத்திற்கு புதியவர்களும், அதே போல் இதை நீண்ட கால பொக்கிஷமான தோழராக கொண்டிருப்பவர்களும், ஒரு தொழில்முறை கதை சொல்பவரின் இந்த உணர்ச்சிமிக்க அழுத்தமான வாசிப்பை வரவேற்பார்கள். அவரது நுட்பமான நாடகமாக்கல் பரமஹம்ஸ யோகானந்தரின் பல்வேறு வண்ணமயமான நிகழ்வுகளின் வசீகரத்தைப் படம்பிடிப்பதுடன், மக்கள், அனுபவங்கள், நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கையின் இறுதி மர்மங்களைப் பற்றிய ஒளிவீசுகின்ற அவரது ஆய்வுகள் ஆகியவற்றை கொண்ட ஆசிரியரின் வளம்பொருந்திய திரைச்சீலையாக, தெளிவான வாழ்க்கைக்கு கொண்டு வருகிறது.

இந்த ஒலிப்புத்தகப் பதிப்பு, சுருக்கப்படாத mp3 இலவசமாக, பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகா போதனைகள்

கிரியா யோகத்தின் புனித விஞ்ஞானம், தியானத்தின் உயரிய நுட்பங்களைக் கொண்டுள்ளது, அதன் பக்திபூர்வமான பயிற்சி கடவுளைப்பற்றிய விழிப்புணர்வுக்கும், அனைத்து வகையான பிணைப்பிலிருந்தும் ஆன்மாவை விடுவிக்கவும் வழிவகுக்கிறது. இது யோகம் என்ற இறைஐக்கியத்தின் அரச அல்லது உயரிய உத்தியாகும்.

தியானங்களை அனுபவியுங்கள்

தியானம் செய்வது எப்படி என்பதற்கான சில அடிப்படை வழிமுறைகளைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக பயன்படுத்தி, தியானம் தரும் அமைதியையும் இறைத்தொடர்பையும் அனுபவிக்கத் தொடங்குங்கள்.

ஒரு யோகியின் சுயசரிதத்தை-க் கேளுங்கள் (தமிழ் ஒலிப்புத்தகம்)

பதிப்புரிமை ©️ 2019 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்யேகமானவை.

இந்த MP3 பதிவிறக்கத்திற்கான பயன்பாட்டு விதிமுறைகள்

இந்த வலைப்பக்கத்தில் காணப்படும் ஒலிப் பதிப்பை உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்குவதை எங்கள் சிறப்புரிமையாகக் கருதுகிறோம். உங்களுடைய தனிப்பட்ட (வணிக நோக்கமற்ற) பயன்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த ஒலிப் பதிப்பை உங்களுடைய டிஜிட்டல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனினும், இந்த ஒலிப் பதிப்பைப் பெறும்போது, தேசிய மற்றும் சர்வதேச பதிப்புரிமை விதிமுறைகளுக்குக் கட்டுப்படவும், வெளியீட்டாளரின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி இந்த ஒலிப்பதிப்பின் உள்ளடக்கத்தை மறுஉருவாக்கம் செய்யவோ மற்றும்/அல்லது பிறருக்குப் பரப்பவோ கூடாது (அதாவது, நகலெடுப்பது, விநியோகிப்பது, மின்னஞ்சல் அனுப்புவது, பதிவிடுவது, ஒளிபரப்புவது போன்றவை அனுமதிக்கப்படாது) என்பதை நினைவில் கொள்ளுங்கள். எமது நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகப் பரம்பரைச் செல்வத்துடன் தொடர்புள்ள எங்கள் வெளியீட்டு முயற்சிகளுக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி.

ஒய் எஸ் எஸ் புத்தகங்களும் மற்றும் வெளியீடுகளும்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது நேரடி சீடர்களின் புத்தகங்கள் மற்றும் பிற வெளியீடுகளைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்: