YSS

ஶ்ரீ ஶ்ரீ சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து செய்தி

10 நவம்பர், 2021

அன்புக்குரியவர்களே!

பரமஹம்ஸ யோகானந்தரின் அன்புமிக்க ஆன்மீகக் குடும்பத்தின் பக்தர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிமையான வணக்கங்கள். நமது குருதேவரின் ஒரு யோகியின் சுயசரிதம் வெளியிடப்பட்ட 75வது ஆண்டு விழாவையொட்டி அந்த அற்புதமான நூலினால் என் வாழ்விலும் மற்றும் உலகில் உள்ள எண்ணற்ற மக்களுக்கும் கிடைத்த வாழ்நாள் ஆசிர்வாதங்களால் எனது மனம் நன்றியால் நிரம்பியிருக்கிறது. உங்களில் பலரைப் போன்றே சுயசரிதம் தான் எனக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகளை அறிமுகம் செய்தது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும் பொழுது, என்னுடைய ஆன்மா சிலிர்த்து “கனவில்லா சாத்தியக் கூறுகள்” குறித்து என் ஆன்மா விழித்துக் கொண்டதையும், இறைவனின் பரிபூரண உணர்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது குருமார்களின் பரம்பரை மூலம் நூலின் பக்கங்கள் நேரடியாக எனது இதயத்திற்குள்ளும் மூளைக்குள்ளும் ஓடிக்கொண்டே இருந்ததை நான் நினைவு கொள்கிறேன்.

முதல்முறை படிப்பதைத் தொடர்ந்து ஏற்படும் எண்ணற்ற வாழ்க்கை மாற்ற விளைவுகளுக்கிடையே, நிச்சயமாக மனதைக் கவரும் மகிழ்ச்சி என்பது உலகெங்கும் இம்மாதிரி மாற்றம் பெற்ற ஆயிரக் கணக்கானோரிடையே ஏற்படும் சத்சங்கம் (தெய்வீக அமைப்பு) நீங்கள் அனைவரும் தான்.! இந்தப் பாதையில் பயணிக்கும் பக்தர்களைச் சந்திக்கும் பாக்கியம் ஏற்படும் போதல்லாம் பலரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும், இடையறாது பொழியும் உத்வேகத்தையும், அறிவுறுத்தலையும் இந்த நூலின் சக்தியால் நமது குருதேவர் ஏற்படுத்தினார் என்று எண்ணும் போது புதிதாக வியப்படைகிறேன். நூலின் அறிமுகத்திற்குப் பின்னர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் காணப்படும் பேச்சுக்களும் எழுத்துக்களும் இறைவன் மூலம் வழங்கப்பட்டுள்ளதையும், விடுதலை நுட்பம் வாய்ந்த அறிவியல் பூர்வமான கிரியா யோக தியானம் எஸ் ஆர் எஃப் / ஒய் எஸ் எஸ் பக்தர்களுக்குப் பாடங்கள் மூலம் வழங்கப்படுவதையும் நாம் காண்கிறோம். இதனைக் காண ஒருவர் கிரியா யோக பாதையில் பயிற்சி செய்யும் உண்மையான பக்தனின் கண்களையும் முகத்தையும் பார்க்க வேண்டும். இந்த தியானத்தைப் பயிற்சி செய்பவர்கள் ஒரு தத்துவ அல்லது உத்வேகத்திற்கு அப்பால் உள்ள போதனைகளை அணுகுவதற்கும் இறைவனை அறிவதற்காகவும் அவர் வழங்கிய நெறிகளை ஒழுக்கத்துடன் பயன்படுத்தி தினமும் பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் முகங்கள், உங்கள் கண்கள் உள் ஒளியிலிருந்து பிரகாசிக்கின்றன. இது தான் கிரியா யோக அறிவியலின் சக்தி. என்ன ஒரு பொக்கிஷம், என்ன ஒரு வாழ்நாள் ஆசிர்வாதம், வலிமையின் ஆதாரம், உயர்வு மற்றும் தெய்வீகத் தொடர்பு இவை அனைத்தும் நம் குருதேவர் நமக்கு வழங்கியவை.

இங்கே பரமஹம்ஸாஜியின் அமெரிக்க ஆசிரமங்களில் விரைவில் தேசிய நன்றி நவிலும் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். நமது குருதேவர் இந்த அனுசரிப்பின் பின்னணியில் உள்ள ஆன்மீக நோக்கம் குறிப்பாக இந்த நேரத்தில் உணர்வுப் பூர்வமாக இறைவன் நம் வாழ்க்கையில் பகிரங்கமாக வழங்கிய அனைத்து நன்மைகளுக்கும் நாம் நன்றி கூறும் பழக்கம் கொண்டிருப்பதைப் பாராட்டினார். நம்மைப் படைத்த எல்லையற்ற பரம்பொருள் பண்பட்ட தொடர்பினைத் தனிபட்ட முறையில் ஏற்படுத்திக் கொள்ளதவர்களுக்கு இன்னும் அறியப்படாமலும் புதிராகவும் விளங்குகின்றார். ஆனால், இறைவனின் இருப்பை உணர்ந்து பயிற்சி செய்பவர்களுக்கு சிறப்பு விடுமுறை நாட்கள் மட்டுமல்ல, தொடர்ச்சியாகப் பக்தியானது நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு விழிப்புணர்வு பெற்று – அந்த அன்பானவர் ஓர் உறுதியான பாதுகாப்பை வழங்குபவராகவும், வழிகாட்டியாகவும் அன்பும் உத்வேகமும் பெற்று வேறு எதுவுமல்லாது நமது ஆன்மாக்களை தவறாமல் நிலை நிறுத்துகின்ற வராகவும் மாறுகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்த மதிப்புக்குரிய சங்கமாதா ஶ்ரீ தயா மாதா நன்றி நவிலும் நாளன்று பரமஹம்ஸ யோகானந்தரின் பக்தர்களிடம் இந்த வார்த்தைகளால் உரையாற்றினார். அவை குறிப்பாக இந்த நேரத்தில் பொருள் பொதிந்ததாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்:

“நம் அனைவரையும் படைத்தவரையும், பாதுகாப்பாவரையும் நினைவுகூர அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், கொந்தளிப்பான மேற்பரப்பிற்கு அடியில் மாறாத நிலையான உறுதிமிக்க உங்கள் தெய்வீகத் தந்தை, தாய், நண்பன் இருப்பதை நீங்கள் புதிதாகக் காண வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன். எங்கும் நிறைந்திருக்கும் சர்வ வல்லமை மிக்க இறைவன் பூமியின் காட்சிகளுக்குப் பின்னாலும், திகைப்பூட்டும் அவரது பல்வேறு படைப்புகளுக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறார். அவர் எப்பொழுதும் உணர்வுநிலை எனும் கதவினைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார். சிரமம் மற்றும் பாதுகாப்பற்ற காலங்களில் நம்மிடையே நம்பிக்கையையும் தைரியத்தையும் வலுவாகத் தூண்டுவது என்பது நம் ஆன்மாவினுள் இருக்கும் அவரது அசைக்க முடியாத இருப்பு அன்றி வேறு என்ன? நம்மிடம் இருப்பதைத் தேவையானவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுபவர் யார்; இல்லையெனில் அவரது கருணையான அன்பு நமக்குள் ஏன் இரகசியமாகப் பேசுகின்றது? நமது இதயம் ஏன் மகத்துவமான சூரிய அஸ்தமனத்தைக் கண்டு உற்சாகமடைகிறது அல்லது அழகிய வண்ணங்களாலும் இலையுதிர் காலத்தின் சிக்கலான விவரங்களாலும் ஈர்க்கப்படுகின்றது. நமது ஆன்மாக்கள் இந்த உலகில் மேம்படுத்தப்பட்ட மற்றும் உத்வேகமான அனைத்தையும் பார்ப்பது இறைவனின் அற்புதம். நாம், ஒவ்வொரு தூய்மையான உணர்வையும், ஒவ்வொரு உன்னத செயலையும், அவற்றின் சான்றுகளிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு நன்மையையும் பின்தொடரும் பொழுது, நாம் அவருடைய மறைவிடத்தைக் காண்கிறோம்.

“இத்தகைய எளிய பயிற்சிகளை நினைவில் கொள்வதன் மூலம் இறைவனின் சீரான ஆசிர்வாதங்களால் உங்கள் உணர்வுநிலைக்கு நங்கூரமிடவும், நிலையான அன்பு மற்றும் பாதுகாப்பு பெறவும் முடியும்.”

அன்புக்குரியவர்களே! ஒரு யோகியின் சுய சரிதம்மூலம் எண்ணிலடங்கா ஆயிரக்கணக்கானோருக்கு இறைவன் உண்மையானவராகத் தெரியட்டும்- இறைவன் அவர்தம் அன்பு மற்றும் மாற்றும் பிரசன்னமும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் ஆசிர்வதிக்கப்பட்ட பக்கங்களை மீண்டும் திருப்பிப் பார்க்கும் போதும், கிரியாயோக அறிவியலை பயிற்சி செய்யும் போதும் அந்த நூல் உலகளாவிய முன்னோடியாகத் திகழ்கிறது – உங்களுக்கு ஒளி தந்து, பேரானந்தம் மற்றும் இறைவனின் அழியாத குழந்தையாக உங்கள் சொந்த தெய்வீகத்தின் உறுதி இப்போதும் மற்றும் எப்போதும் ஏற்படும்.

இறைவன் மற்றும் குருதேவரின் இடைவிடாத ஆசிர்வாதங்கள்.

சுவாமி சிதானந்த கிரி.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp