SRF சர்வதேச தலைமையகத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுதல்

January 3, 2025

“நான் கண்ட கனவுகளை, நனவாக்க உழைத்த அவற்றை இறைவன் நிறைவேற்றினான் – நான் திட்டமிட்டிருந்ததை விட அதிகமாகவே இறைவன் நிறைவேற்றியுள்ளான். மவுண்ட். வாஷிங்டன் மையம் எப்போதுமே இறைவனின் கருவியாக இருக்க முயற்சித்ததால்தான் அந்த திட்டங்கள் நிறைவேறின.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

2025 ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள மவுண்ட் வாஷிங்டனில், ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகத்தை பரமஹம்ஸ யோகானந்தர் நிறுவியதன் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இங்கு அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார், கற்பித்தார், இறைவனுடன் தொடர்பு கொண்டார், மேலும் இந்த ஆசிரம மையத்திலிருந்து அவரது விரிவுரைகள், எழுத்துக்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட உரைகள் வெளியிடப்பட்டு உலகளவில் கிடைக்கச் செய்யப்படுகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தர் SRF சர்வதேச தலைமையகத்தின் முன், 1934. (இந்த படம் ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்திலிருந்து டிஜிட்டல் வழி வண்ணமயமாக்கப்பட்டது.)

லாஸ் ஏஞ்ஜலீஸின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை இந்தியாவில் இருந்து வந்த இளம் ஸ்வாமி ஒருவர் எவ்வாறு பெற்றார்? கதை பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் தொடங்குகிறது. தனது இளமைப் பருவத்தில் காஷ்மீருக்கு விஜயம் செய்த பரமஹம்ஸ யோகானந்தர் பண்டைய சங்கரர் கோவிலைப் பார்த்தபோது ஒரு உயர் உணர்வு அனுபவத்தைப் பெற்றார். மலை உச்சியில் உள்ள கோவில் மவுண்ட் வாஷிங்டன் உச்சியில் உள்ள மாளிகையாக உருமாறியதை அவர் கண்டார், அங்கு அவர் பின்னர் தனது தலைமையகத்தை நிறுவுவார், அன்புடன் மதர் சென்டர் என்று குறிப்பிடுவார். அந்த அற்புதமான காட்சி மிகவும் தெளிவாக இருந்தது அந்த கம்பீரமான கட்டிடத்தின் உட்புற படிக்கட்டு போன்ற விவரங்களைக் கண்டதாக பரமஹம்ஸஜி பின்னர் நினைவு கூர்ந்தார்.

1924 டிசம்பரில், பாஸ்டன் மற்றும் பிற கிழக்கு கடற்கரை நகரங்களில் பல ஆண்டுகள் கற்பித்த பிறகு, பரமஹம்ஸ யோகானந்தர் கண்டம் குறுக்காகவும் முழுவதும் ஆற்றிய விரிவுரை சுற்றுப்பயணத்தின் முடிவில் லாஸ் ஏஞ்ஜலீஸுக்கு வந்தார். அவரது செய்தி உடனடியாக துடிப்பான மேற்கு கடற்கரை நகரத்தில் சாதகமான வரவேற்பைப் பெற்றது, மேலும் ஆயிரக்கணக்கானோர் பில்ஹார்மோனிக் ஆடிட்டோரியத்தில் அவரது விரிவுரைகளைக் கேட்டனர். ஒரு நாள் அவர் தனக்கு உதவி செய்து கொண்டிருந்த சில மாணவர்களிடம் கூறினார்: “லாஸ் ஏஞ்ஜலீஸ், தேவதைகளின் நகரத்தில், ஒரு மையத்தை நிறுவ ஓர் இடத்தைத் தேடுவோம். அற்புதமான ஆன்மீக அதிர்வுகளை நான் இங்கே காண்கிறேன்.”

அவரும் அவரது மாணவர்களில் ஒரு சிறு குழுவும் ஒரு சிறிய நிலச் சொத்தைப் பார்ப்பதற்காக மவுண்ட் வாஷிங்டனின் சில்வன் பகுதிக்குச் சென்றனர், இறுதியில் ஒரு காலத்தில் நாகரீகமான மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலாக இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் கடந்து சென்றனர்.

மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டல், சர்க 1909 சித்தரிக்கும் அஞ்சல் அட்டை

பரமஹம்ஸ யோகானந்தர் ஆர்வமடைந்து, அவர்களை அந்த இடத்தை பார்க்கச் சொன்னார். அவர் காரில் இருந்து இறங்கி, முன்பக்கத்தில் நின்று, காலியாக இருந்த ஆனால் அந்த பிரமாண்டமான கட்டிடத்தைப் பார்த்து, “இந்த இடம் நமது போல் உணர்கிறேன்!” என்றார்.

தாராள மனப்பான்மை கொண்ட அவரது மாணவர்களின் உதவியுடனும், குருதேவரின் இரண்டு அடமானக் கடன்களுடனும், 1925 ஆம் ஆண்டு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சர்வதேச தலைமையகம் உருவாக்கப்பட்டது. தனது ஆன்மீகப் பணிக்கு ஒரு நிரந்தர அடித்தளம் அமையப் பெற்றது, பரமஹம்ஸ யோகானந்தருக்கு அதிகமான உண்மைத் தேடுபவர்களைச் சென்றடைய உதவியது.

பரமஹம்ஸரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த இடம் பூங்கா போன்ற மைதானங்கள், கம்பீரமான மரங்கள் மற்றும் தியான தோட்டங்கள் – பரபரப்பான லாஸ் ஏஞ்ஜலீஸில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சரணாலயம் – ஆகியவற்றைக் கொண்ட அமைதியின் புகலிடமாக மாறியது. மதர் சென்டரில் உள்ள அவரது குடியிருப்பு இன்றுவரை ஒரு ஆலயமாக பாதுகாக்கப்படுகிறது, மேலும் நூலகம் மற்றும் வரவேற்பு அரங்கில் அவரது சில தனிப்பட்ட பொருட்களின் கண்காட்சி உள்ளது. பல ஆண்டுகளாக அவர் வழிபாடுகள் நடத்திய தேவாலயம் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக தினமும் திறக்கபடுகிறது; மற்றும் அவர் அடிக்கடி வகுப்புகள் வழங்கிய ஒரு அழகான வெளிப்புற “டெம்பல் ஆஃப் லீவ்ஸ்” அமைதியான சிந்தனைக்குள் மூழ்கச் செய்கிறது.

1925 இல் புதிதாக வாங்கப்பட்ட கட்டிடத்தின் முன் பரமஹம்ஸ யோகானந்தர்
த “டெம்பல் ஆஃப் லீவ்ஸ்”
தோட்டங்களில் தியானம் செய்யும் வருகையாளர்கள்

SRF தலைமையக மைதானத்தில் பரமஹம்ஸரின் தெய்வீக உணர்வுநிலையின் சக்திவாய்ந்த அதிர்வுகள் ஊடுருவியிருப்பதால், ஏற்புத் திறன் கொண்ட வருகையாளார்கள் தங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்திய மாற்றும் தாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பரமஹம்ஸரின் அன்புக்குரிய மதர் சென்டரை அடுத்த 100 ஆண்டுகள் மற்றும் அதற்கும் அப்பாலும் எடுத்துச் செல்ல தயாராக உள்ள ஒரு முக்கிய திட்டமான SRF சர்வதேச தலைமையக மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தலுக்கான திட்டங்களை 2024 மார்ச் மாதத்தில் லாஸ் ஏஞ்ஜலீஸ் நகரத்திற்கு சமர்ப்பித்தோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். சர்வதேச தலைமையக கட்டிடத்தில் நில அதிர்வு மற்றும் உயிர் பாதுகாப்பு மேம்பாடுகளை மேற்கொள்வதோடு, பரமஹம்ஸ யோகானந்தருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சிறிய தோட்ட ஆலயத்தை சேர்ப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும். ஒப்புதல் செயல்முறையின் ஒரு பகுதியாக நாங்கள் நகரத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், மேலும் வரும் மாதங்களில் திட்டம் குறித்த புதுப்பிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தியானத் தோட்டங்களில் அமையவிருக்கும் எதிர்காலத் தோட்ட ஆலயத்தின் உருவாக்கம்

பரமஹம்ஸருக்கு மிகவும் பிரியமான, உலகளாவிய யோக விஞ்ஞானத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான அவரது பணியின் மையப்பகுதியாக இருக்கும், SRF மதர் சென்டருக்கு ஒரு வர்சுவல் யாத்திரை மேற்கொள்ள உங்களை அழைக்கிறோம்.

இதைப் பகிர