ஸ்ரீ தயா மாதா அவர்களின் “நர்சரிங் எ ஹெல்தி, பாசிடிவ் ஏட்டிட்யூட் டுவர்ட்ஸ் அவர்ஸெல்ஸ்”

10 செப்டம்பர், 2025

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் மூன்றாவது தலைவரும், சங்கமாதாவுமான (“அமைப்பின் அன்னை”) ஸ்ரீ தயா மாதா அவர்களின் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 1955 முதல் 2010 இல் தான் மறையும் வரை அந்தப் பதவியில் பணியாற்றினார். இந்தச் செய்தி 2010 இல் யோகதா சத்சங்க இதழில் “எ லெடர் ஃப்ரம் ஸ்ரீ தயா மாதா” என்ற தலைப்பில் முதலில் வெளியிடப்பட்டது; பற்பல ஆண்டுகளாக, இதழின் வாசகர்களால், இத்தகைய செய்திகள் அவற்றின் ஊக்கம் மற்றும் விவேகமான ஆலோசனைகளுக்காக மிகவும் விரும்பப்படுகின்றன.

லோடஸ்-ஆரஞ்-லைன்ஆர்ட்

இறைவனை நோக்கிய நமது பயணத்திலும், வாழ்க்கையின் பிற இலக்குகளை நோக்கிய நமது பெருமுயற்சியிலும், நம்மைப் பற்றிய ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

இதை, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் எப்போதும் வலியுறுத்தினார்: நாம் எதை உறுதியாகச் சிந்தித்து நம்புகிறோமோ, அதை நம் வாழ்வில் ஈர்க்கிறோம். நம்மை ஆன்மாக்களாகக் காணும் மகிழ்ச்சியான மனநிலையை நாம் உருவாக்கிக் கொண்டால் — நம் ஆன்மீக ஆற்றலிலும், உள்ளார்ந்த நற்குணத்திலும் திடநம்பிக்கை கொண்டு, இவற்றை வளர்த்துக்கொள்வதன் மூலம் — நமக்குள் இருக்கும் தெய்வீக ஆத்மன் அல்லது ஆன்மாவாகிய நம் உண்மையான சுயத்தை நாம் மேலும் வெளிப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு தனிப்பட்ட ஆன்மாவும், இறைவனால் அவனது பிரகாசமான குணங்களின் தனித்துவமான வெளிப்பாடாகப் பிரத்யேகமாகப் படைக்கப்பட்டது. இந்த உண்மையை ஆழ்ந்து சிந்திப்பது பரவசமளிக்கிறது! இயல்பாகவே நமக்கு எந்தக் குறைபாடும் இல்லை. நாம் தியானத்தின் சக்தியாலும், சரியான வாழ்க்கையின் மூலமும் ஏற்கெனவே நமக்குரிய முழுமையை மீண்டும் கண்டுணர்ந்தால் போதும்.

பரமஹம்ஸர் கூறினார், “நீங்கள்‌ என்னவாக இருக்கிறீர்களோ அது, நீங்கள்‌ எப்பொழுதும்‌ மிகவும்‌ ஏங்கிய எதையும் விட அல்லது எவரையும்‌ விட மிக உயர்ந்ததாகும்‌. இறைவன்‌ உங்களில்‌ தன்னை வெளிப்‌படுத்தியுள்ள முறையில்‌ வேறு எந்த மனிதனிலும்‌ வெளிப்படுத்தவில்லை. உங்கள்‌ முகம்‌, மற்ற எவருடையதையும்‌ போன்று இல்லை. உங்கள்‌ ஆன்மா மற்ற எவருடையதையும்‌ போன்று இல்லை. நீங்கள்‌ உங்களுக்கே நிறைவுற்றவராக இருக்கிறீர்கள்‌, ஏனெனில்‌ எல்லாவற்னறயும்‌ விட மகத்தான பொக்கிஷமான இறைவன்‌ உங்கள்‌ ஆன்மாவினுள்‌ உறைகிறான்‌.”

இதை மேலும் ஆழமாக உணர்ந்து நம்புங்கள். நம்மை நாமே ஏன் வரம்புகளுக்கோ, கடந்த காலத் தவறுகளுக்கோ ஆட்படுத்த வேண்டும்? இறைவனின் நிபந்தனையற்ற அன்பிலும், நமது மனப்பூர்வமான மற்றும் இடையறாத முயற்சிகளில் அவரது செயலூக்கமான உதவியிலும் முழு திடநம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்குவோம். சந்தேகம் மற்றும் ஊக்கமின்மை இருளை, மகிழ்ச்சியை உருவாக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களின் பிரகாசமான ஒளியால் அகற்றுங்கள்; அதுவே ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாளும் ஆன்மாவின் இயல்பான வழி.

உங்களில் உள்ளார்ந்து இருக்கும் தெய்வீக குணங்களை போற்றவும் வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்ளுங்கள், அகங்காரப் பெருமைக்காக அல்லாமல், மாறாக தம்முடைய ஒரு அம்சத்தை உங்கள் மூலமாக இந்த உலகிற்கு வழங்க விரும்பும் சாசுவத அன்பனால் பேரன்புடன் போற்றப்படுவதன் காரணமாக.

“எப்பொழுதும் நீங்கள் இறைவனின் குழந்தை என்று பெருமிதம் கொள்ளுங்கள்,” பரமஹம்ஸர் கூறினார். “பேசுவதற்கும் இயங்குவதற்கும் மற்றும் உணர்வதற்கும் ஆன உங்கள் வல்லமையின் பின்னால் இருப்பது அவனது சக்தியே…. அவனுடன் உங்களுக்குள்ளேயே தொடர்பு கொள்ளலாம்…. முறை தவறாமல் தியானம் செய்யுங்கள்…. நீங்கள் முக்தி அடைவீர்கள்; உங்கள் வாழ்வின் தாக்கம் மற்றவர்களுக்கும் முக்தி அடைவதற்கான வழியை காட்டும்.”

இதைப் பகிர