YSS

நினைவேந்தல்: சுவாமி ஆனந்தமோய் (1922-2016)

6 செப்டம்பர், 2016

பரமஹம்ஸ யோகானந்தரின் நேரடி சீடரும், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சன்னியாசியுமான நமது மரியாதைக்குரிய சுவாமி ஆனந்தமோய், செப்டம்பர் 6, 2016 செவ்வாய்க்கிழமை மாலை லாஸ் ஏஞ்சலீஸின் மவுண்ட் வாஷிங்டனில் உள்ள எஸ் ஆர் எஃப்- இன் சர்வதேச தலைமையகத்தில் அமைதியாகக் காலமானார்.

எஸ் ஆர் எஃப் -இன் மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் ஆழ்ந்த மரியாதைக்குரிய சன்னியாசி சீடராக, சுவாமி ஆனந்தமோய் தனது தன்னலமற்ற வாழ்க்கையினாலும் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக வாழ்க்கை மற்றும் கிரியா யோக போதனைகளின் ஆழமான புரிதல் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோரை ஊக்கப்படுத்தி மேம்படுத்தினார். பல ஆண்டுகளாக இறை ஐக்கியப் பாதைக்கு அவர் உதவிய மற்றும் ஊக்குவித்த உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற ஆன்மாக்களின் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.

நினவஞ்சலி சேவை திட்டங்கள்

ஒய்எஸ்எஸ் ஆசிரமங்கள் மற்றும் கேந்திரங்களில் பொது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது:

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 25, 2016

யோகதா சத்சங்க மடம், தக்ஷினேஸ்வர்: காலை 10.30 – மதியம் 12.00

யோகதா சத்சங்க சாகா மடம், ராஞ்சி: காலை 10.00 – 11.30

யோகதா சத்சங்க சாகா ஆசிரமம், நொய்டா: காலை 10.00 – மதியம் 12

ஒய்எஸ்எஸ் கேந்திராக்கள்

யோகதா சத்சங்க தியான கேந்திரா, பெங்களூர்: காலை 10.00 – மதியம் 12.15

யோகதா சத்சங்க தியான கேந்திரா, சண்டிகர்: காலை 10.00 – மதியம் 12.00

யோகதா சத்சங்க தியான கேந்திரா, டெல்லி: காலை 10.00 – 11.30

யோகதா சத்சங்க தியான கேந்திரா, லக்னோ: காலை 09.00 – மதியம் 1.00, தொடர்ந்து வீடியோ

யோகதா சத்சங்க தியான கேந்திரா, மும்பை: மதியம் 12.30 – 02.00

யோகதா சத்சங்க தியான கேந்திரா, ராஜமுந்திரி: காலை 11.00 – மதியம் 12.00

நீங்கள் இந்த நினைவு நினைவஞ்சலியில் கலந்து கொள்ள முடிந்தாலும் இல்லாவிடினும், சுவாமி ஆனந்தமோய், பேறுபெற்ற முக்திநிலை மற்றும் ஆனந்த சாம்ராஜ்ஜியங்களுக்கு நிலை மாறும்போது, அவரது எழுச்சியூட்டும் மற்றும் முன்மாதிரியான வாழ்க்கையில் நாங்கள் மகிழ்ச்சியடைந்து, எங்கள் அன்பையும் நன்றியையும் அனுப்பும்போது, பரமாத்மாவில் எங்கள் அனைவருடனும் இணையுமாறு உங்களை அழைக்கிறோம்.

ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாறு

நவம்பர் 1, 1922 இல் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் பிறந்த ஹென்றி ஷாஃபெல்பெர்கர், என்ற சுவாமி ஆனந்தமோய் தனது வளரிளம் பருவத்தில் கீழை நாடுகளின் தத்துவத்திற்கு அறிமுகமானார், விரைவில் தனது ஆன்ம ஞான நாடுதலைத் தொடங்கினார். ஆனால், வழிகாட்ட ஒரு இறைஒளி பெற்ற ஆசிரியரை எவ்வாறு கண்டறிவது என்று அவர் வியப்படைந்தார். “நான் எனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, என் தந்தையின் வணிகத்தில் விரக்தியுடனான இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “அதற்குள், இந்து தத்துவத்தில் எனக்கு இருந்த ஆர்வத்தை விட்டுவிட்டேன், எனென்றால் எனக்கு ஒரு குருவைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகத் தோன்றியது. நான் கலைத் தொழிலில் ஈடுபட்டேன், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல கட்டிடக் கலைஞரான ஃபிராங்க் லாயிட் ரைட்டிடம் படிக்க அமெரிக்கா செல்ல அழைக்கப்பட்டேன்.” அவர் 1948 இல் அமெரிக்காவிற்கு வந்தார், உடனே பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தை கண்டுபிடித்துள்ளார். “நான் புத்தகத்தை வேட்கையுடன் படித்தேன்,” என்று அவர் கூறினார். “நான் விரும்பியதைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைக் கற்று இறைவனை அறிய வேண்டும் என மனதில் தீர்மானித்துக் கொண்டேன். ”

சில மாதங்களுக்குப் பிறகு, சுவாமி ஆனந்தமோய் இந்த மகத்தான குருவைக் காணும் நம்பிக்கையில் லாஸ் ஏஞ்சலீஸ் சென்றார். எஸ் ஆர் எஃப் ஹாலிவுட் கோவிலில் பரமஹம்ஸர் வழங்கிய ஞாயிற்றுக்கிழமை சத்சங்கத்தின் முடிவில் அவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. “இது ஒரு மறக்க முடியாத அனுபவம்,” என்று அவர் கூறினார். “சத்சங்கத்திற்குப் பிறகு, குருதேவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார், பெரும்பாலான சபையினர் அவரை வரவேற்கச் சென்றனர். இறுதியாக நான் அவர் முன் நின்றபோது, அவர் என் கையைப் பிடித்துக்கொண்டார், நான் அந்த ஆழமான ஒளிரும் மென்மையான கண்களைப் பார்த்தேன். வார்த்தை எதுவும் பேசவில்லை. ஆனால் அவரது கை மற்றும் கண்கள் மூலம் விவரிக்க முடியாத ஆனந்தம் என்னுள் வருவதை உணர்ந்தேன்.”

சுவாமி ஆனந்தமோய் 1949 இல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆசிரமத்தில் ஒரு சன்னியாசியாக நுழைந்தார், மேலும் 1952 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குருதேவர் மறையும் வரை பரமஹம்ஸரின் தனிப்பட்ட பயிற்சியைப் பெறும் பாக்கியம் பெற்றார். நவம்பர் 1957 இல் அவர் சன்னியாசத்தின் இறுதி சன்னியாசச்சபதம் எடுத்துக் கொண்டார் – ஆனந்தமோய் என்ற பெயரைப் பெற்றார். (“இறைப்பேரின்பம் ஊடுருவப் பெற்ற”) – மேலும் ஏப்ரல் 1958 இல் எஸ் ஆர் எஃப் சன்னியாசி சீடராக நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு நிகழ்வுகளும் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவால் நடத்தப்பட்ட இரண்டு விழாக்களில் நடைபெற்றன.

ஒரு சன்னியாசச் சீடராக அவரது நீண்ட கால வாழ்க்கையின் போது, அவர் தனது குருதேவரின் பணிக்கு பல மற்றும் மாறுபட்ட வழிகளில் சேவை செய்ய அழைக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டு ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் லேக் ஷ்ரைன் திறக்கப்படுவதற்கு முன்னர், நிலத் தோற்ற மேம்பாட்டு பணி, ஹாலிவுட் கோயில் மற்றும் ஆசிரம மையத்தின் மைதானத்தில் இந்தியா ஹால் மற்றும் லோடஸ் டவர் கட்ட உதவியது மற்றும் ஹாலிவுட்டில் உள்ள எஸ் ஆர் எஃப் கஃபே இல் சமையல் பணி ஆகியவை அவரது ஆரம்பகால பணிகளில் அடங்கும். அவர் 1950 களில் தனது சன்னியாசி சீடர் பணிகளைத் தொடங்கினார், மேலும் பல ஆண்டுகளாக எஸ் ஆர் எஃப் இன் ஹாலிவுட், என்சினிடாஸ், பீனிக்ஸ், லேக் ஷ்ரைன், பசடேனா மற்றும் புல்லர்டன் கோயில்களில் சன்னியாசிச் சீடராக பணியாற்றினார். கூடுதலாக, அவர் இந்தியாவிற்கு பல பயணங்களை மேற்கொண்டார், பரமஹம்ஸரின் யோகதா சத்சங்க சொஸைடிக்கு சேவை செய்தார், கிரியா யோக தீட்சை வழங்கும் நிகழ்வுகளை நடத்தினார், மற்றும் நாடு முழுவதும் ஏராளமான அவையினரிடம் பேசினார். அவர் பல ஆண்டுகளாக பல்வேறு எஸ் ஆர் எஃப் ஆசிரம மையங்களின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

சுவாமி ஆனந்தமோய் பல ஆண்டுகளாக ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார். ஸ்ரீ தயா மாதா அவரை எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளின் ஆன்மீக வழிகாட்டுதல் பொறுப்பாளராக நியமித்தார், மேலும் அவர் இந்த பொறுப்பில் பல தசாப்தங்களாக அன்பான ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றினார்.

பரமஹம்ஸர் சுவாமி ஆனந்தமோயிடம், அவர் ஒரு ஆசிரியராகவும், பேச்சாளராகவும் இருக்க விதிக்கப்பட்டுள்ளார் என்றும், மேலும் இந்த பணிக்காகவே அவர் நீண்ட காலம், பரவலாக நினைவுகூரப்படுவார் என்றும் கூறியிருந்தார். நான்கு தசாப்தங்களாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் விரிவான பயணங்களின் போது, சுவாமி ஆனந்தமோய் எஸ் ஆர் எஃப் இன் மிகவும் விரும்பப்படும் மற்றும் மரியாதைக்குரிய சன்னியாசி சீடர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார், எஸ் ஆர் எஃப் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் ஒரே மாதிரியாக பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை அவரது அறிவுக் கூர்மையான விளக்கக்காட்சிகள், குருதேவருடனான அவரது அனுபவங்களின் தனிப்பட்ட நினைவூட்டல்கள் மற்றும் அவரது விவேகம் மற்றும் கருணையுடன் கூடிய தனிப்பட்ட ஆலோசனை ஆகியவைகளின் மூலம் எழுச்சியூட்டினார்.

ஒரு அன்புக்குரிய சன்னியாசிக்கு அன்பான வணக்கங்கள்

ஸ்வாமி ஆனந்தமோயிக்கு நம் அன்பான  வணக்கங்களை அனுப்பும்போது, அவர் தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்திருந்த இறைவடனும் குருதேவருடனும் இப்போது ஐக்கியமாகிவிட்டார் என்பதை நினைத்து ஆறுதல் பெறலாம். அவரது ஊக்கமளிக்கும், உள்ளார்ந்த வழிகாட்டுதல் மற்றும் அவரது அன்புக்குரிய இனிமை யைப் பாதுகாத்து வைத்திருக்கும் பல ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளுக்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். எஸ் ஆர் எஃப் இணையதளம் மற்றும் எஸ் ஆர் எஃப் யூடியூப் தளத்தில் சுவாமி ஆனந்தமோய் உடனான இந்த சிறப்புத் தருணங்கள் சிலவற்றை அனுபவிக்க உங்களை அழைக்கிறோம்:

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் புத்தகக் கடையில் சுவாமி ஆனந்தமோயின்  ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp