யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர், ஸ்வாமி சிதானந்த கிரி, பரமஹம்ஸ யோகானந்தர் 1925-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் மலை உச்சியில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகத்தை நிறுவியதன் 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக ஒரு சிறப்புரை ஆற்றினார்.
யோகானந்தரால் அன்புடன் SRF மதர் சென்டர் எனப் பெயரிடப்பட்ட இந்த இடம், அவரால் SRF சன்னியாசிகளுக்கான ஒரு பயிற்சி மையமாகவும், பண்டைய கிரியா யோக விஞ்ஞானத்தை உலகெங்கிலும் பரப்புவதற்கான நிர்வாக மையமாகவும் நிறுவப்பட்டது.
1936 ஆம் ஆண்டு மதர் சென்டர் இல் நடைபெற்ற ஒரு பக்திபூர்வ நிகழ்ச்சியின்போது, அவர் பிரார்த்தித்தார்: “தெய்வத் தந்தையே… உனக்கான எமது அன்பின் வழியே மவுண்ட் வாஷிங்டனை ஒரு பூலோக சுவர்க்கமாக மாற்ற எங்களுக்கு அருள்கூர்வாய்… உன்னைத் நாடி இங்கு வரும் ஒவ்வொருவரின் இதயத்திலும், ஒரு நடமாடும் சொர்க்கம் நிறுவப்படட்டும்.”
ஸ்வாமி சிதானந்தாஜி அவர்களுடன் நடைபெற்ற இந்தச் சிறப்பு நிகழ்வு, லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள SRF சர்வதேச தலைமையகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

















