2026 SRF உலகப் பேரவையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள, YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியுடனான இரண்டு சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம்:
- புதன்கிழமை, ஆகஸ்ட் 5: மூன்று மணி நேரத் தியானம்
- சனிக்கிழமை, ஆகஸ்ட் 8: சத்சங்கம்
SRF உலகப் பேரவை என்பது, பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகப் போதனைகளில் ஆழமாக மூழ்கித் திளைப்பதற்காக, உலகெங்கிலும் உள்ள மெய்ஞானம் தேடுவோரை ஒன்றிணைக்கும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இது ஆன்மீக வளம் நிறைந்த ஒரு வார கால நிகழ்ச்சியை வழங்குகிறது. இதன்மூலம், மற்ற மெய்ஞானம் தேடுவோருடன் தியானம் செய்வதாலும், அவர்களுடன் இருப்பதன் மூலமும் கிடைக்கும் ஆனந்தத்தையும் அருளாசிகளையும் அனுபவிக்க முடிகிறது.
ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் மூன்று மணி நேர தியானம்
(நேரடி இந்தி மொழிபெயர்ப்புடன்)
புதன்கிழமை, ஆகஸ்ட் 5, 2026
இரவு 8:30 – இரவு 11:30 (IST)
யோகம் மற்றும் அதன் தியான விஞ்ஞானத்தின் காலத்தால் அழியாத பரிசான மகத்தான அக அமைதியை நீங்கள் உணர விரும்புகிறீர்களா? உங்களது ஆன்மாவிற்குள் கண்டுணரப்பட காத்திருக்கும் உண்மையான நிறைவைப் புரிந்து கொள்ள, ஸ்வாமி சிதானந்த கிரியுடனான மூன்று மணி நேர தியானத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மையமான தியானத்தின் அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்துணர ஸ்வாமி சிதானந்தாஜி பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுவார். இந்த வழி நடத்தப்படும் தியானத்தில், பக்திமயமான கீர்த்தனம் இசைத்தலும் இடம்பெறும்.
ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் சத்சங்கம் —
பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகள்
(இந்தி நேரடி மொழிபெயர்ப்புடன்)
சனிக்கிழமை, ஆகஸ்ட் 8, 2026
காலை 8:00 – 9:00 மணி (IST)
பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோகப் போதனைகளில் காணப்படும் ஞானம், ஆனந்தம் மற்றும் ஊக்கத்தை உள்வாங்கிக்கொண்டு, தெய்வீகத் தோழமை உணர்வுடன் ஸ்வாமி சிதானந்த கிரியுடன் நேரம் செலவிடும் இந்தச் சிறப்புமிக்க வாய்ப்பிற்காக எங்களுடன் இணையுங்கள்.

















