சர்வதேச யோகா தினம்

யோக தத்துவம் மற்றும் விஞ்ஞானத்திற்கு உலகம் இப்போது ஆண்டுதோறும் மரியாதை செலுத்துகிறது என்பதை அறிந்துகொள்வதில் பரமஹம்ஸர் மிகவும் மகிழ்ச்சியடைவார், ஏனெனில் காலத்தால் அழியாத யோக தியான உத்திகளை மெய்ப்பொருள் நாடும் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதற்கு அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, யோகம் பற்றிய இன்றைய உலக ஆர்வம் பெருமளவு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பரமஹம்ஸ யோகானந்தர் எடுத்துச் சென்ற போதனைகளின் விளைவாகும். “சர்வதேச யோகா தினம் குறித்த இந்தியாவின் யோசனை ஐ.நா. வில் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றால், அந்த பெருமை அமெரிக்காவில் இந்தியாவின் முதல் யோக குரு பரமஹம்ஸ யோகானந்தரையே சேரும்” என்று ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்காவில் யோகத்திற்கு அடித்தளம் அமைத்ததில் அவர் பெரும் பங்கு வகித்தார்.”

பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.

நிகழ்வுகள் பற்றி

ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS), உடல், மனம் மற்றும் ஆன்ம நலனை மேம்படுத்தும் வகையில் ஆன்லைன் மற்றும் நேரில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தது.

ஆன்லைன் நிகழ்வுகளின் பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஆன்லைன் நிகழ்வுகள்

“கிரியா யோக தியானத்திற்கான அறிமுகம்”

(ஒரு வழிநடத்தப்பட்ட தியான அமர்வை உள்ளடக்கியது)

YSS சன்னியாசிகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் யோக-தியானம் குறித்த அறிமுக அமர்வுகள் நடத்தினார்கள். உள்ளார்ந்திருக்கும் பேரின்பத்தை எழுப்பி, இறுதியில் ஆன்ம அனுபூதி அளிக்கவல்ல பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகளின் பயிற்சியின் மூலம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் உள் சமநிலையையும், அமைதியையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை சாதகர்கள் கண்டறியும் வகையில் இந்த அமர்வுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, YSS சன்னியாசிகள் சரியான அமர்வுநிலை, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பம், மற்றும் மனக்காட்சியாக காண்பது உள்ளிட்ட வழிமுறைகளுடன் கூடிய வழிநடத்தப்படும் தியான அமர்வை நடத்தினார்கள்.

ஆங்கில அமர்வு

(ஸ்வாமி லலிதானந்த கிரி)

இந்தி அமர்வு

(ஸ்வாமி சைதன்யானந்த கிரி)

தமிழ் அமர்வு

(ஸ்வாமி சுத்தானந்த கிரி)

தெலுங்கு அமர்வு

(ஸ்வாமி கேதாரானந்த கிரி)


பரமஹம்ஸ யோகானந்தர் பற்றி

Founder Paramahansa Yoganandaபரமஹம்ஸ யோகானந்தர் தனது விரிவான போதனைகளால் லட்சக் கணக்கானவர்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். “மேற்கில் யோகத்தின் தந்தை” என்று பரவலாகக் கருதப்படும் பரமஹம்ஸர், விஞ்ஞான முறை பிராணாயாம (உயிர் சக்தி கட்டுப்பாடு) உத்திகளைக் கொண்ட உலகளாவிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார். யோகத்தின் இறுதி இலக்கு, தன்னை எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆன்மாவாக உணர்வதே ஆகும். யோகானந்தரின் திட்டம் – யோகதா சத்சங்க பாடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது – சமயத்தின் இந்த உள்ளார்ந்த அடிப்படைக்கு ஒரு நடைமுறை அணுகுமுறையை வழங்குகிறது. மேலும் இது ஹத யோகத்தின் சரீர ரீதியான நன்மைகளில் ஆர்வமுள்ளவர்களை மட்டுமல்லாமல், தங்கள் மன திறன்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள அதிக மக்களையும் ஈர்க்கும் ஒரு அமைப்பாகும்.

அவரது போதனைகள் மற்றும் அவர் கற்பித்த தியான உத்திகள் இன்று கீழே காண்பவைகள் மூலம் கிடைக்கின்றன:

மற்றவர்கள் கூறியவை


யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பற்றி

Main Building of Ranchi Ashramகடந்த 100 ஆண்டுகளாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) அதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தோன்றிய புனித ஆன்மீக விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை கிடைக்கச் செய்வதற்காக 1917 இல் யோகதா சத்சங்க சொஸைடியை நிறுவினார். இந்த சமய சார்பற்ற போதனைகள் முழுமையான வெற்றி மற்றும் நல்வாழ்வை அடைவதற்கான ஒரு முழுமையான தத்துவம் மற்றும் வாழ்க்கை முறையையும், அத்துடன் பரம்பொருளுடன் (இறைவன்) ஆன்மத்தின் ஐக்கியம் என்ற வாழ்க்கையின் இறுதி இலக்கை அடைவதற்கான தியான முறைகளையும் உள்ளடக்கியது.

பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.


புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர