பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி தினம்

நினைவு தியானம்

வெள்ளிக்கிழமை, மார்ச் 7, 2025

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

என்னுடைய சரீரம் மறைந்துவிடலாம், ஆனால் என் பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மேலும் என் ஆன்மா வாழ்ந்து கொண்டே இருக்கும்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

மகாசமாதி என்பது முக்தி அடைந்த யோகி, ஸ்தூல உடலிலிருந்து இறுதியாக உணர்வுபூர்வமாக வெளியேறுவதைக் குறிக்கிறது. நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி புனித தினத்தில், YSS சன்னியாசி ஒருவரால் ஆன்லைன் தியானம் வழி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், உத்வேகம் அளிக்கும் வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன.

இந்த விசேஷ நாளில், பல்வேறு ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தின.

இந்த விசேஷ தினம், குரு தங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும் அளவிடற்கரிய அருளாசிகளுக்கு அவருக்கு மரியாதை செலுத்தி, குரு-காணிக்கை மூலம் நன்றியை வெளிப்படுத்தும் நாளாக பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்கொடையை நீங்கள் ஆன்லைனில் அளிக்கலாம். உங்கள் தாராளமான பங்களிப்பு அவருடைய உத்வேகம் தரும் போதனைகளைப் பரப்ப உதவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர