ஒய். எஸ். எஸ் நூற்றாண்டை நினைவு கூறும் வண்ணம் இந்திய பிரதமர் தபால் தலையை வெளியிடுகிறார்

7 மார்ச், 2017

தபால் தலை

பாரதப் பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 7, 2017 அன்று புதுதில்லியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை பணிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

இந்த சந்தர்ப்பமானது, யோகதா சத்சங்க சொஸைடியின் 100-வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வண்ணம் இந்திய அரசால் ஒரு தபால் தலை வெளியிடப்பட்டபோது அமைந்தது. இந்த விழாவின் தேதியானது பரமஹம்ஸர் அடைந்த மார்ச் 7, 1952-ன் நிறைவை மேன்மைப் படுத்தும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  மகாசமாதி, அடைந்த மார்ச் 7,1952-ன் நிறைவை மேன்மை படுத்தும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, மார்ச் 1917 -ல் இந்தியாவின் திஹிகாவில் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஒரு சிறிய ஆசிரமம் மற்றும் சிறுவர் பள்ளியில் தொடங்கப்பட்டது. இன்று ஒய்.எஸ்.எஸ் இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் முழுவதுமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளைக் கொண்டுள்ளது.

(குறிப்பு: காணொளி 15:56 முதல் 18:18 வரை நிகழும் ஒளிபரப்பு குறைகளுக்கு மன்னிக்க வேண்டுகிறோம்)

பிரதம மந்திரி புதிய தபால்தலையை, அலுவலக நிகழ்வுகளுக்கு அரசின் சம்பிரதாய மையமான விக்யான் பவனில் விசாலமான மைய அரங்கில் 1500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஒய் எஸ் எஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கொண்ட கூட்டத்திற்கு முன், வெளியிட்டார். பிறகு அவர் ஒரு எழுச்சியூட்டும் உரையை நிகழ்த்தினார்; அதில் அவர் பரமஹம்ஸரை இந்தியாவின் மிகப்பெரிய யோகிகள் மற்றும் குருமார்களில் ஒருவர் என்றும், அவரது வாழ்க்கையும் பணியும் உலகிற்கு இந்திய ஆன்மீகத்தின் மாபெரும் மதிப்பை மெய்ப்பித்துள்ளது என்றும் விரிவாகக் கூறினார். அத்துடன், நவீன உலகத்தில் இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்வதில் குருதேவரது உணர்வையும் மரபுரிமைச் செல்வத்தையும் எஸ் எஸ் வெற்றிகரமாக பராமரித்து வருகிறது என்றும் சிலாகித்தார்.

முழு உரை ஆங்கிலத்தில் | இந்தியில்

பிரதமர் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்

Prime Minister of India, Narendra Modi speaking about Paramahansa Yogananda and Kriya Yoga. “மார்ச் 7 ஆன இன்று ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தை நினைவு கூற நாம் அனைவரும் ஒன்றாகக் கூடியுள்ளோம்” பிரதம மந்திரி கூறினார், “மேலும் நான் ஸ்ரீஸ்ரீ (மிருணாளினி) மாதாஜி அவர்களை வணங்குகிறேன், ஏனெனில் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து இந்த விழாவில் அவர் நம்முடன் இணைகிறார் என்று கேள்விப்பட்டேன்.”…

மனதை உள்முகமாகத் திருப்பி, அகப் பிரணாயாமத்தை மேற்கொள்ள ஒருவருக்கு அதிகத்துணிவும் திடநம்பிக்கையும் தேவைப்படுகின்றன. சில யோக முறைகளுக்கு புறவலிமையும் எளிதில் வளையும் நெகிழ்வுத் தன்மையும் தேவைப்படுகிறன, ஆனால் கிரியா யோகப் பாதையின் வழி ஓர் உள்ளார்ந்த ஈடுபாட்டைக் கூறுகிறது, அந்த துணிவை வழங்கி, வாழ்க்கையின் புதிர்களை புரிந்து கொள்ளச் செய்யும் பயணத்தில் அது உங்களை ஈடுபடுத்துகிறது.”…

“[பரமஹம்ச யோகானந்தர்] அடிக்கடி கூறுவார் “நான் ஒரு மருத்துவமனை மெத்தையில் படுத்துக் கொண்டு இறக்க விரும்பவில்லை, அந்த நேரத்தில் நான் என் கால்களில் புதைக் காலணிகளை அணிந்த வண்ணம் என் தாயகத்தைப் பற்றி பேசிக் கொண்டு உயிர் நீக்க விழைகிறேன்” இதனால் என்ன பொருள்படுகிறது என்றால், பண்டைய போதனைகளை மேலை நாடுகளில் பரப்புவதற்காக இந்தியாவின் கரைகளை விட்டு அவர் வெளியேறினாலும், தன்னுடைய அன்பான தாய் நாட்டைப் பற்றியோ பற்று இல்லாமலோ அல்லது தாய்நாட்டை பிரிந்து இருப்பதாகவோ ஒரு கணம்கூட அவர் உணராமல் கழித்திருக்க முடியாது….

“பிடிவாதமான கோட்பாடுகளை நீக்கி, அவர் ஆன்மீகத்தை மிகவும் அணுகக் கூடியதாகவும், தெளிவானதாகவும் செய்வதால் இந்த நூறு வருடங்களில் அவரது பணி உலகம் தழுவியதாகவும், ஆன்மீக ஞானத்தின் ஒரு சாசுவத ஆதாரமாகவும் மாறியுள்ளது.” அவரது ஆன்மீக நிறுவனம் இன்றும் அவரது பணியை நிறைவேற்றுவதைத் தொடரும் வண்ணம் அவர் அதைத் திட்டமிட்டு முறைப்படி வளர்ச்சியுறச் செய்தார். இன்று அவரது ஞானத்தையும் அவரது ஆன்ம பேரின்பத்தையும் பெற்றுப் பருகும் போது, அவரது பணி இன்னும் தொடர்ந்து முன்னேறுவதாகத் திகழ்கிறது.”

மிருணாளினி மாதாவிடம் இருந்து ஒரு செய்தி

விழாவின் போது மேடையில் பிரதமருடன், ஒய்.எஸ்.எஸ் பொது செயலாளர் ஸ்மரனானந்த கிரி, ஒய்.எஸ்.எஸ் இயக்குனர்கள், குழு உறுப்பினர்கள், மற்றும் இவ்விழாவில் பங்கேற்பதற்காக லாஸ்ஏஞ்சலீஸிலுள்ள தலைமையகத்தில் இருந்து பயணம் செய்த ஒய்.எஸ்.எஸ் /எஸ்.ஆர்.எஃப் இயக்குனர் குழு சுவாமி விஸ்வானந்தரையும் உள்ளடக்கி பலர் அமர்ந்திருந்தார்கள். சுவாமி ஸ்மரனானந்தர் நிகழ்ச்சியின் தொடக்க உரையாற்றினார். அதன் பிறகு, லாஸ்ஏஞ்சலீஸிலிருந்து நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பைப் பார்த்துக்கொண்டிருந்த ஒய்.எஸ்.எஸ் /எஸ். ஆர். எஃப் பின் தலைவியும் சங்கமாதாவுமான ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து வந்த எழுச்சியூட்டும் செய்தியை சுவாமி விஸ்வானந்தர் அறிவித்தார்.

ஸ்ரீ மிருணாளினி மாதா அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்:
இந்தியாவின் தொன்றுதொட்ட சரித்திர காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவின் மிகச் சிறந்த வளமும் வலிமையும் அந்நாட்டு ஞானிகள் உணர்ந்தறிந்து மனித இனத்திற்கு விட்டுச்சென்ற சாசுவத ஆன்மீக உண்மைகளைப் போற்றி அவற்றை தீவிரமாக வெளிப்படுத்துவதில்தான் அடங்கியுள்ளது.இந்திய அரசாங்கம் இன்று அத்தகைய ஒரு முன்மாதிரியான உரிய தெய்வீக புருஷரின் வாழ்க்கைப் பணியை மேன்மைப்படுத்த தேர்ந்தெடுத்திருக்கிறது என்ற உண்மை, இந்தியாவிற்கு மட்டுமின்றி, இக்கட்டான காலங்களில் இந்தியாவின் ஆன்மீக ஒளியை எதிர்நோக்கியிருக்கும் உலகில் உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக் கானவர்களுக்கும், ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் அகவெழுச்சிக்கான ஆதாரமாக உள்ளது.” (மாதாஜியின் முழு செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஓய். எஸ். எஸ் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் கூடுதல் பகிர்வு

இந்த மாதம் மார்ச் 19 – 23 வரை ஒரு நிகழ்ச்சியின் மூலம் ராஞ்சி ஆசிரமத்தில் கொண்டாடப்படப் போகும் ஒய்.எஸ்.எஸ் நூற்றாண்டு நிறைவு விழா பற்றி கூடுதலாக விரைவில் பகிர்ந்து கொள்ள எதிர்நோக்கியுள்ளோம். வருடம் முழுவதும் கொண்டாடப் போகும்  நூற்றாண்டு நினைவு கொண்டாட்டத்தை ப் பற்றி கூடுதல் தகவல்களும், மார்ச் 7 – ல் நடந்த தபால்தலை வெளியீட்டின் புகைப்பட ஆல்பத்தை ப் பார்ப்பதற்கும் ஒய்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு விஜயம் செய்யுமாறு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

நிகழ்ச்சியின் கூடுதல் புகைப்படங்கள்.

நரேந்திர மோடி தீபத்தை ஏற்றுகிறார்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் வண்ணம் பிரதம மந்திரி மோடியும், ஒய்.எஸ்.எஸ்/ எஸ்.ஆர்.எஃப் இயக்குனர் குழுவின் உறுப்பினர்களும் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்.
ஸ்மரானந்தா யோகானந்தரின் போதனைகளைப் பற்றி பேசுகிறார்.
சுவாமி ஸ்மரனானந்தா அவர்கள், பரமஹம்ஸர் எடுத்துக்காட்டாக விளங்கிய இறைஞானம் பற்றியும் மற்றும் ஒரு யோகியின் சுயசரிதத்தின் பல்வேறு மொழிபெயர்ப்புகள் அந்நூலை கிட்டத்தட்ட 95% உலக மக்கள் வாசிக்கும் படியாக செய்துள்ளது பற்றியும் உரையாற்றுகிறார்.
பிரதமர் நினைவு தபால் தலையை காட்சிப்படுத்துகிறார்.
விக்யான் பவனில் பிரதம மந்திரி மோடி அவர்கள்ஒய்.எஸ்.எஸ் -ன் நூற்றாண்டு நிறைவை நினைவுகூறும் தபால் தலையையும், அத்துடன் கூடவே இந்திய அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட விசேஷ துண்டு பிரசுரத்தையும் கரகோஷம் எழுப்பி பாராட்டும் அவையினர் அனைவருக்கும் தெரிவிக்குமாறு காட்டுகிறார்.
பிரதமர் மோடி தனது உரையை ஆற்றுகிறார்.
பிரதம மந்திரி உரையாற்றுகிறார், அதில் பரமஹம்ஸ யோகானந்தரும் அவரது கிரியா யோக போதனைகளும், இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் நவீன உலகத்தின் அதன் விசேஷப் பங்கையும் புரிந்துகொள்வதில் வழங்கியுள்ள ஒப்பற்ற பங்களிப்புகளை வலியுறுத்திப் பேசினார்
YSS இயக்குநர்கள் குழுவுடன் நரேந்திர மோடி.
தனது உரைக்குப்பின் பாராட்டுக் கரவொலி எழுப்பும் அனைவருக்கும் ஸ்ரீ மோடி தலை வணங்குகிறார்
பிரதமர் மோடிக்கு சுவாமி விஸ்வானந்தர் பரிசளிக்கிறார்
ஸ்ரீ மோடி பரமஹம்ஸரின் "என் இந்தியா" கவிதையின் ஒரு பகுதியை அழகிய வேலைப்பாடு வடிவத்தில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் சார்பில் சுவாமி விஸ்வானந்தாவிடமிருந்துப் பரிசாக பெறுகிறார்

“எங்கே கங்கையும், கானகங்களும், இமாலயக் குகைகளும் மற்றும் மனிதர்களும். . . . அந்தப் பூமியைத் தொட்டது என் தேகம்; நான் புனிதனானேன்!”

மார்ச்7, 2017 அன்று ஸ்ரீ மிருணாளினி மாதாவின் செய்தியின் முழுவிவரம்:

அன்பானவர்களே,

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் நூற்றாண்டு நிறைவை மேன்மைப்படுத்தி நினைவு கூரும் தபால் தலையின் வெளியீடு என்னும் இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் நான் என் ஆன்மாவின் வாழ்த்துக்களையும் தெய்வீக அன்பையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவின் மூலம் இந்திய அரசு, இந்தியாவின் சிறந்த மகன்களில் ஒருவனான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கும் அவர் நிறுவிய ஒய் எஸ் எஸ்-ஸிற்கும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது என்ற செய்தியினால் நான் மட்டற்ற மகிழ்ச்சியையும் நன்றி உணர்வும் நிரம்பப் பெற்றவன் ஆகிறேன். இந்நிகழ்ச்சியை சாத்தியமாக்குவதில் பங்குபெற்ற அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றிகள் உரித்தாகுக. பரமஹம்ஸ யோகானந்தர் தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை அமெரிக்காவில் இந்தியாவின் உலகளாவிய ஆன்மீகம் மற்றும் பண்டைய யோகத் தியான விஞ்ஞானத்தைப் பரப்புவதில் கழித்தாலும் தாய்நாட்டிற்கான அவரது அன்பும் அக்கறையும் ஒருபோதும் குறையவில்லை. 1952-ல் இதே தேதியில் அவர் உலகை விட்டு நீங்கும் முன் அவர் கூறிய இறுதி வார்த்தைகள் அவரது அன்புக்குரிய இந்தியாவிற்கு அவரது புகழ் அஞ்சலியாக அமைந்தன.

இந்தியாவின் தொன்றுதொட்ட சரித்திர காலத்தில் இருந்து இன்று வரை, இந்தியாவின் மிக உயர்ந்த வளமும் வலிமையும், அந்நாட்டு ஞானிகள் உணர்ந்தறிந்து மனித இனத்திற்கு விட்டுச்சென்ற சாஸ்வத ஆன்மீக உண்மைகளைப் போற்றி அவற்றைத் தீவிரமாக வெளிப்படுத்துவதில் தான் அடங்கியுள்ளது. யுகம் யுகங்களாக உன்னத ஆன்மாக்கள் – மிக உயரிய தெய்வீக ஞானம் கொண்ட மகாத்மாக்கள், மகான்கள், முனிவர்கள் – அவர்களது இந்தியத் தாய்நாட்டிற்கான பேரன்பினால் அத்தகைய அதிஉன்னத மற்றும் புனித இலக்கிற்கு சேவை புரியும்படி உந்தப்பட்டனர். இந்திய அரசாங்கம் இன்று அத்தகைய ஓர் முன்மாதிரியான உயரிய தெய்வீகப் புருஷரின் வாழ்க்கைப் பணியை மேன்மைப்படுத்த தேர்ந்தெடுத்திருக்கிறது என்ற உண்மை இந்தியாவிற்கு மட்டுமின்றி, இக்கட்டான இக்காலங்களில் இந்தியாவின் ஆன்மீக ஒளியை எதிர்நோக்கியிருக்கும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மற்றும் அகவெழுச்சிக்கான ஆதாரமாக உள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அடிக்கடி கூறுவார், “உங்களை முதலில் சீர்திருத்திக் கொள்ளுங்கள் பின் நீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை சீர்திருத்துவீர்கள்.” இந்தியாவின் தெய்வீக மற்றும் உலகளாவிய யோகம் மற்றும் தியானத்தின் விஞ்ஞானம், நமது நடத்தை மற்றும் எண்ண ரீதியானப் படிவங்களில் நீடித்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றங்களை கொணர்வதற்கான மிக பயனுள்ள வழிமுறைகளின் உருவகமாகத் திகழ்கின்றன. பரமஹம்ஸ யோகானந்தரது சொசைடியின் மைய இலக்கு மற்றும் லட்சியங்களில் ஒன்றானது, அனைத்து தேசங்களுக்கிடையே, இந்தியாவின் உயர் ரிஷிகளால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக போதிக்கப்பட்ட விஞ்ஞானப்பூர்வமான தியான உத்திகளின் ஞானத்தைப் பரப்புவதுதான். இதன்மூலம் ஒவ்வொரு மனிதனும் – தேச, மத அல்லது இனங்களுக்கு அப்பாற்பட்டு – தன்னுள் தெய்வீகத்தை அறிந்து அக அமைதியை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் தன்னுள் அமைதியைப் பெற்றால், உலக அமைதி தானாகவே பின்தொடரும்.

தனது மிக மும்முரமான அலுவல்கள் மத்தியிலும் இந்த விசேஷ நாளின்போது நேரடியாகக் கலந்து கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கியுள்ள மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் அன்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒய் எஸ் எஸ் நூற்றாண்டு நினைவுத் தபால்தலையானது, தானே ஒரு தீவிர யோகப் பயிற்சியாளராக உள்ள திரு. மோடி அவர்களால் வெளியிடப்படுவது எத்தகைய ஒரு பொருத்தம் வாய்ந்ததாக உள்ளது! திரு மோடி அவர்களால் முன்மொழியப்பட்டு, பின்னர் ஏராளமான நாடுகளால் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய நாடுகளின் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச யோகா நாள், உலகம் முழுவதும் யோக விஞ்ஞானத்தின் உலகளாவிய செய்தியைப் பரப்புவதில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இத்தகையத் திருப்புமுனைத் தொடக்க முயற்சிக்காக திரு மோடி அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தர், இந்தியாவின் ஆன்மீகமும் மேலைநாடுகளின் பொருள்சார் திறமையும் கலந்த ஒரு இலட்சிய ரீதியான சமூகம் பிற்காலத்தில் உருவாகும் என்றும் உரைத்தார். அதனால் இந்தியா, மனித உணர்வு நிலையை அதன் மேல்நோக்கிய பரிணாம வளர்ச்சி சுற்றிற்கு உயர்த்திட ஓர் முக்கிய மற்றும் அவசியமான பங்கை ஏற்க வேண்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரும் பிற இந்திய உயர்குருமார்களும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த ஒற்றுமையை நல்கும் ஆன்மீக போதனைகளின் பயிற்சியின் வாயிலாக உலக அமைதி, தெய்வீகம் இணக்கம் மற்றும் உலகக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வளம் ஆகியவற்றிலான ஒரு சகாப்தத்திற்கு நாம் முன்னோக்கி செல்லவேண்டும் என்பதே என் ஆர்வமிக்க பிரார்த்தனையாகும்.

இறைவன் மற்றும் உயர்குருமார்களின் அன்பும் மொழியும் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து மேம்படுத்தட்டும்.

ஸ்ரீ மிருணாளினி மாதா

சங்க மாதா மற்றும் தலைவி,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்

இதைப் பகிர

Facebook
X
WhatsApp