குருவுடன் சேர்ந்திருத்தல் என்பது, அவருடைய பௌதீக வடிவின் முன் இருப்பது என்பது மட்டுமின்றி, (சில சமயங்களில் இது சாத்தியமற்றது என்பதால்) அவரை நமது இதயங்களில் இருத்தி, கொள்கையளவில் அவருடன் ஒன்றாகி இருந்து அவருடன் நம்மை இசைவிப்பது என்று முக்கியமாகப் பொருள்படும்.
— ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, கைவல்ய தரிசனம்
கைவல்ய தரிசனம் நூலில், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி அனைத்து சமயங்களின் அடிப்படை ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வேதங்களிலிருந்து இணையான பகுதிகளை ஆராயும் ஒரு மிகச் சிறந்த ஆய்வறிக்கையை உலகிற்கு வழங்கியுள்ளார். பரமஹம்ஸ யோகானந்தரின் குருவான ஞானாவதாரம் அல்லது “ஞானத்தின் அவதாரம்” என்று போற்றப்படும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் 1855 மே 10 அன்று மேற்கு வங்காளத்தில் உள்ள செராம்பூரில் அவதரித்தார்.
ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் அவதார தினத்தை கௌரவிக்கும் வகையில், மே 4, ஞாயிற்றுக்கிழமை அன்று YSS சன்னியாசி ஒருவரால் ஒரு சிறப்பு நினைவு நீண்ட தியானம் நடத்தப்பட்டது. ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த ஆன்மீகரீதியாக மேம்படுத்தும் நிகழ்ச்சியில் கீதமிசைத்தல், ஊக்கமளிக்கும் வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
YSS ஆசிரமங்கள் கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளிலும் இந்தப் புனித சந்தர்ப்பத்தில் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த புனித சந்தர்ப்பத்தில் நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்துங்கள். ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மற்றும் YSS குருமார்களிடமிருந்து கிடைக்கப் பெறும் எண்ணற்ற அருளாசிகளுக்கான போற்றுதலின் வெளிப்பாடாக உங்கள் பங்களிப்புக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறோம்.