YSS ஆசிரமங்களில் 2026 SRF உலகப்
பேரவை திரையிடல்
(தக்ஷிணேஸ்வர், நொய்டா, சென்னை துவாரஹாத்)
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3, 2026 – ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 9, 2026 (இந்திய நேரப்படி)
திரையிடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன!
கவனத்திற்கு: YSS ராஞ்சி ஆசிரமத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானப் பணிகளான செப்பனிடப்படாத சாலைகளை மறுசீரமைத்தல், தோட்டப் பாதைகளை மேம்படுத்துதல் மற்றும் பிற புனரமைப்புப் பணிகள் காரணமாக, பேரவை நிகழ்ச்சி ராஞ்சி ஆசிரமத்தில் திரையிடப்படாது.
நிகழ்வு பற்றி
நான் ஒரு கும்பலை விட ஒரு ஆன்மாவை விரும்புகிறேன், ஆனால் நான் ஆன்மாக்களின் கூட்டத்தை நேசிக்கிறேன்.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) ஆசிரமங்களில் ஒரு சிறப்பு ஆன்மீகக் கூட்டம் நடைபெறவுள்ளது; அதில் 2026 ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) உலகப் பேரவை நிகழ்ச்சிகள் திரையிடப்படும். YSS ஆசிரம புனித சூழலில் இருந்துகொண்டே, இப்பேரவையின் ஆன்மீக ரீதியாக மேம்படுத்தும் அதிர்வுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள இந்த அரிய வாய்ப்பு YSS பக்தர்களுக்குக் கிடைக்கும்.
SRF உலக பேரவை என்பது பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகளை ஆழ்ந்து அறிவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வரும் மெய்ப்பொருள் நாடுவோர்களை ஒன்றிணைக்கும் வருடாந்திர நிகழ்வாகும். இந்தப் பேரவை, ஆன்மீக வளம் நிறைந்த ஒரு வார கால நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இதில் பின்வருவன அடங்கும்:
- YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்தகிரியுடன் சிறப்பு தியானம் மற்றும் சத்சங்கம்
- கூட்டு தியனாங்கள்
- பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் ஞானம் குறித்த சன்னியாசிகளின் உத்வேகம் தரும் சத்சங்கங்கள்
- YSS/SRF தியான உத்திகள் குறித்த வகுப்புகள் — சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், ஹாங்-ஸா மற்றும் ஓம் உத்திகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்
- ஆன்மாவின் எழுச்சிக்கும் பக்தியை ஆழப்படுத்துவதற்கும் கீர்த்தனங்கள் மற்றும் பக்திபூர்வமாக பாடும் அமர்வுகள்
- வீடியோ விளக்கக்காட்சிகள்
நொய்டா, தக்ஷிணேஸ்வர், சென்னை மற்றும் துவாரஹாத் YSS ஆசிரமங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி, YSS பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சியடையவும், குருதேவரின் போதனைகள் பற்றிய ஆழமான புரிதலைப் பெறவும், தங்கள் தியான உத்திப் பயிற்சிகளை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும். YSS சன்னியாசிகள் காலை மற்றும் மாலை கூட்டுத் தியானங்களை வழிநடத்துவார்கள், மேலும் கோரிக்கையின் பேரில் பக்தர்களுக்கு ஆன்மீக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
இந்த விசேஷமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் ஆன்மீக ஆர்வத்தை புதுப்பித்துக் கொள்வது மட்டுமல்லாமல், மற்ற ஆர்வமுள்ள சாதகர்களுடன் தியானிப்பது, அவர்களோடு சேர்ந்து இருப்பது ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அருளாசிகளையும் அனுபவித்துணர உங்களை ஊக்குவிக்கிறோம். இத்தகைய ஒரு நிகழ்வின் தனிச்சிறப்பான அருளாசிகளான பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையை மாற்றும் போதனைகள் மற்றும் தெய்வீக இருப்பை உணர்வுபூர்வமாக உணர்தல் ஆகியவற்றில் ஆழந்து மூழ்க நாம் ஒன்றிணைவோம்.
கவனத்திற்கு:
- YSS/SRF பக்தர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.
- 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
- நிகழ்ச்சிகள் மும்முரமாக இருந்து கொண்டே இருக்கும் என்பதால், பலவீனமான உடல்நிலை அல்லது சிறப்புத் தேவைகள் கொண்ட பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.
- முன்பதிவுகளுக்கான கோரிக்கைகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உறுதிப்படுத்தப்படும்.
நிகழ்ச்சி நிரல்
ஒவ்வொரு இடத்திலும் இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 3, திங்கட்கிழமை காலை தொடங்கி ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நிறைவடையும். ஒவ்வொரு நாளுக்கான உத்தேச நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
காலை 06:30 முதல் 07:50 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 08:00 முதல் 09:00 வரை — தொடக்க சத்சங்கம்: தி ஆர்ட் ஆஃப் ஜாய்ஃபுல் லிவிங் — யோகாஸ் பாத் டு ஹேப்பினெஸ்
காலை 11:00 முதல் நண்பகல் 12:00 வரை — YSS சிறப்பு சத்சங்கம்: பேரவை வாரத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது
பிற்பகல் 03:00 முதல் 04:00 வரை — காணொளிக் காட்சி
மாலை 06:00 முதல் இரவு 08:00 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 07:00 முதல் 08:30 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 09:30 முதல் 10:30 வரை — தியான உத்திகளில் வல்லமை பெறுதல் — பாகம் I (ஹாங்-ஸா ஒருமுகப்பாட்டு உத்தி)
காலை 11:00 முதல் நண்பகல் 12:00 வரை — இடர்னல் யூத்: வாட் டஸ் இட் மீன் அண்ட் ஹௌ கேன் வி ஹேவ் இட்?
பிற்பகல் 03:00 முதல் 04:00 வரை — பிரபஞ்ச சக்தியால் உடலுக்கு செறிவூட்டுதல்
மாலை 06:00 முதல் இரவு 08:00 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 07:00 முதல் 08:30 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 09:30 முதல் 10:30 வரை — தியான உத்திகளில் வல்லமை பெறுதல் — பாகம் II (ஓம் தியான உத்தி)
காலை 11:00 முதல் நண்பகல் 12:00 வரை — சத்சங்கம்: இன்னர் செக்யூரிடி த்ரூ டிவைன் கனெக்ஷன்
பிற்பகல் 03:00 முதல் 04:00 வரை — சத்சங்கம் (கேள்வி பதில்கள்))
இரவு 08:30 முதல் 11:30 வரை — ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் தியானம்
காலை 09:30 முதல் 10:30 வரை — சத்சங்கம் (கேள்வி பதில்கள்)
காலை 11:00 முதல் பிற்பகல் 12:30 வரை — YSS சன்னியாசி ஒருவரால் வழி நடத்தப்படும் தியானம்
பிற்பகல் 03:00 முதல் 04:00 வரை — சத்சங்கம்: பிகமிங் அன் இன்ஸ்ட்ருமென்ட் ஆஃப் டிவைன் லவ்
மாலை 05:40 முதல் இரவு 09:00 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் கீர்த்தனை தியானம்
காலை 07:00 முதல் 08:30 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 09:30 முதல் 10:30 வரை — சத்சங்கம் (கேள்வி பதில்கள்)
காலை 11:00 முதல் நண்பகல் 12:00 வரை — சத்சங்கம்: த குரு — டிவைன் ஃப்ரெண்ட் அண்ட் கைட்
பிற்பகல் 02:30 முதல் 04:00 வரை — கீர்த்தனம் (பக்திபூர்வ பாடல்)
மாலை 06:00 முதல் இரவு 08:00 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 06:30 முதல் 07:50 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 08:00 முதல் 09:00 வரை — ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் சத்சங்கம்: பரமஹம்ஸ யோகானந்தாஸ் கிரியா யோகா டீச்சிங்ஸ்
காலை 10:30 முதல் பிற்பகல் 12:30 வரை — கிரியா யோக மறு ஆய்வு மற்றும் சரிபார்ப்பு
காலை 10:30 முதல் 11:30 வரை — கிரியாபான்கள் அல்லாதோருக்கான காணொளி வகுப்பு
பிற்பகல் 03:30 முதல் 04:30 வரை — YSS சன்னியாசிகளுடன் தோழமை
மாலை 05:40 முதல் இரவு 09:00 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் வழி நடத்தப்படும் தியானம்
காலை 07:00 முதல் 08:30 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
காலை 10:30 முதல் 11:00 வரை — கீர்த்தனம்
காலை 11:00 முதல் நண்பகல் 12:00 வரை — சத்சங்கம்: ப்ரிங்கிங் த காம்னெஸ் ஆஃப் மெடிடேஷன் இன்டு அவர் ரிலேஷன்ஷிப்
நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 12:30 வரை — நிறைவுரை மற்றும் பிரசாதம்
பிற்பகல் 04:00 முதல் இரவு 07:30 வரை — சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம்
மேலும் தகவல்
தங்கும் கால அளவு:
- அனைத்து பக்தர்களுக்கும் கூடுதலாக மூன்று நாட்கள் தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது – அவர்கள் நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக வந்து, நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு கூடுதல் நாள் தங்கலாம்.
- குருதேவரின் ஆசிரமத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் வரை தங்குவதன் மூலம், பக்தர்கள் ஓய்வு, மன அமைதி மற்றும் ஆன்மீக புத்துணர்ச்சிக்குப் போதுமான நேரம் பெறுவார்கள். அதற்கேற்ப உங்கள் வருகை மற்றும் புறப்பாட்டை நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
தங்குமிடம்:
- பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியாக பகிரப்பட்ட தங்குமிடம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் தயவுசெய்து அதற்கேற்ப திட்டமிட்டு பேக் செய்து கொள்ளுங்கள்.
- தங்குமிடம் அல்லது உணவு தொடர்பான சிறப்புத் தேவைகள் உள்ள பக்தர்கள் தயவுசெய்து தங்கள் சொந்த ஏற்பாடுகளை செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படை:
- நான்கு இடங்களிலும் உள்ள குறைந்த அளவிலான தங்குமிட வசதிகள் காரணமாக, இட ஒதுக்கீடுகள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உறுதி செய்யப்படும்.
- உங்கள் முன்பதிவு உறுதிசெய்யப்பட்டு, நீங்கள் கலந்துகொள்ள இயலாத பட்சத்தில், முன்பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது அல்லது வேறு ஒருவருக்கு மாற்றப்படவும் மாட்டாது என்பதைப் நினைவில் கொள்ளுங்கள்.
பணம் செலுத்துதல்:
- முன்பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு ₹ 2,500/- ஆகும். இதில் தங்குமிடம் மற்றும் உணவுக்கான செலவுகள் அடங்கும். இக்கட்டணத்தைச் செலுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
- உணவு, தங்குமிடம் தேவைப்படாத பக்தர்கள் கட்டணமின்றி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
திரையிடல் நிகழ்வில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன!
பக்தர்கள் YSS பக்தர் இணைய தளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது YSS உதவி மையத்தை அழைத்தோ, அல்லது திரையிடல் நடைபெறும் ஆசிரமங்களில் ஒன்றிற்கு சென்றோ முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செயல்முறை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:
பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு:
விரைவான மற்றும் எளிதான முன்பதிவுக்கு, பக்தர்கள் தங்கள் முன்பதிவு கோரிக்கையை பக்தர் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
உதவி மையத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய:
(0651 6655 555) என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது பின்வரும் விவரங்களை வழங்கி [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பவும்:
- உங்கள் முழுப் பெயர்
- வயது
- முகவரி
- மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
- YSS பாட பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
- உங்கள் திட்டமிடப்பட்டுள்ள வருகை மற்றும் புறப்படும் தேதிகள்
உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பைப் பயன்படுத்தி நீங்கள் தொகையைச் செலுத்தலாம்.
கவனத்திற்கு:
- ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பதிவு செய்வதற்கான கோரிக்கைகள் அதிகபட்ச வரம்பை எட்டினால், அவ்விடத்தின் பதிவு முன்னதாகவே முடிவடையும்.
- வெற்றிகரமாக பதிவு செய்தவுடன், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். அத்தகைய அறிவிப்பை நீங்கள் பெறவில்லை என்றால், YSS ராஞ்சி உதவி மையத்தை தொலைபேசி (0651 6655 555) அல்லது மின்னஞ்சல் ([email protected]) மூலம் தொடர்பு கொள்ளவும்.
- YSS/SRF பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.
- 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
எப்போதும் போல, முன்பதிவுப் பிரிவு, தங்குமிடம், ஒலி-ஒளி அமைப்பு, உணவு, சுகாதாரம், வழிகாட்டுதல் போன்ற பல்வேறு பகுதிகளுக்குத் தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றுள் சில பணிகளுக்கு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே சில தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். நீங்கள் தன்னார்வலராக பணியாற்ற விரும்பினால், உங்கள் விண்ணப்பத்தில் அதைக் குறிப்பிடவும்.
முன்பதிவுகள் மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்
யோகதா சத்சங்க ஆசிரமம் — தக்ஷிணேஸ்வர்
21, யு. என். முகர்ஜி ரோடு, தக்ஷிணேஸ்வர்
கொல்கத்தா, மேற்கு வங்கம் – 700 076
தொலைபேசி: +91 8420873743, +91 9073581656, +91 7439825373
மின்னஞ்சல்: [email protected]
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — நொய்டா
பரமஹம்ஸ யோகானந்தா மார்க், B–4, செக்டார் 62
கௌதம் புத்தா நகர், உத்தரபிரதேசம் – 201 307
தொலைபேசி: +91 9899811808, +91 9899811909
மின்னஞ்சல்: [email protected]
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை
மன்னூர் கிராமம், P.O. வள்ளர்புரம்
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு – 602 105
தொலைபேசி: +91 7550012444, +91 7305861965
மின்னஞ்சல்: [email protected]
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — துவாரஹாத்
துவாரஹாத்
அல்மோரா, உத்தரகண்ட் – 263 653
தொலைபேசி: +91 9756082167, +91 9411708541
மின்னஞ்சல்: [email protected]
மாற்றாக, கீழே பகிரப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி நீங்கள் YSS உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி: (0651) 6655 555
மின்னஞ்சல்: [email protected]

















