மனிதன் தெய்வீகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாத வரையில் மனித நடத்தையை நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய்.
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி
ஞானாவதாரம் அல்லது “ஞானத்தின் அவதாரம்” என்று போற்றப்படும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் YSS/SRF பக்தர்களின் பரம்குரு ஆவார். ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மகாசமாதி புனித சந்தர்ப்பத்தில், சிறப்பு ஆன்லைன் நினைவு தியானம் YSS சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டது. மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்த ஆன்மீக ரீதியில் உற்சாகமளிக்கும் நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், உத்வேகம் அளிக்க வாசிப்பு மற்றும் தியானம் ஆகியவை இடம்பெற்றன.
இந்த சந்தர்ப்பத்தில், பல்வேறு ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் நேரில் நினைவுதின நிகழ்ச்சிகளை நடத்தின.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
இந்த புனித சந்தர்ப்பத்தில், நீங்கள் குரு-காணிக்கை அல்லது நன்கொடை அளிக்க விரும்பினால், ஆன்லைனில் அவ்வாறு செய்ய உங்களை வரவேற்கிறோம். உங்கள் தாராளமான பங்களிப்பு உங்களுக்கு மிகுந்த அருளாசிகளை வழங்குவது மட்டுமல்லாமல், YSS/SRF குருமார்களின் கிரியா யோக போதனைகளைப் பரப்பவும் உதவும்.