பரமஹம்ச யோகானந்தரின் 125-வது பிறந்தநாள் சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு செய்தி

5 ஜனவரி, 2018

ஜன்மோத்சவ் 2018
சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து செய்தி – தலைவர்

அன்புக்குரியவர்களே,

நமது அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் 125வது அவதார நினைவுநாள் எனும் இப்புனித நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் உரித்தாகுக. இரண்டு மாதங்களுக்கு முன்பு குருதேவரின் புத்தகத்திற்கான என் வருகையின்போது கும்பலுடன் நான் உணர்ந்த ஆனந்தம், அகவெழுச்சி மற்றும் அருள் ஆசிகளால் என் இதயம் இன்னும் நிரம்பிவழிகின்றது. உங்கள் பக்தியையும் ஆன்மீக உற்சாகத்தையும் பிரதிபலிக்கும் உங்கள் ஒளிமயமான முகங்கள் என்றென்றைக்குமாக என் நினைவில் பதிந்து உள்ளன. உங்கள் ஆன்மீக ஏக்கமெனும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு, நமது மரியாதைக்குரிய குருதேவரின் அன்பானது, நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் எந்த இறைவனிடம் இருந்து வந்தோமோ அவனிடம் நம்மை என்றென்றைக்குமாக நெருக்கமாக ஈர்த்து நம் அனைவரையும் சுற்றிவளைத்து உள்ளது – அந்த இறைவன் ஒருவன் மட்டுமே இந்த மாய உலகில் நாம் பிறவிகள் தோறும் நாடும் பரிபூரண அன்பிற்கான ஏக்கத்தைத் தணிக்க முடியும்.

அவனை அறிய வேண்டும் என்ற உங்கள் அவாவின் நேர்மைக்கு இறைவன், உங்களிடம் நம் அன்பிற்குரிய குருதேவரை உங்கள் வழிகாட்டியாகவும் சாசுவத நண்பனாகவும் அனுப்பியதன் மூலமாக மறுமொழி அளித்துள்ளான். நமக்கு குருதேவர் அளித்துள்ள சாதனாவை, அவர் உதவியில் உள்ள முழு நம்பிக்கையுடன் நாம் பயிற்சி செய்தால் அவர் நம்மை இறைவனுடனான ஐக்கியத்திற்கு தவறாமல் வழிகாட்டுவார். நமது குருதேவர், உலகம் முழுவதுமாக பரப்புவதற்கு கட்டளையிடப்பட்ட கிரியா யோக விஞ்ஞானம் மூலம், அனைத்து செல்வங்களிலும் மிக அரிய செல்வத்தை நமக்கு வழங்கியுள்ளார்- அமைதியான ஆன்ம ஆலயத்தில் இறைவனது எல்லையற்ற உணர்வு நிலையின் ஸ்பரிசத்தில் உணரப்படும் மனித கற்பனைக்கெட்டாத பேரின்பத்தை நாம் அனுபவிப்பதற்கான கருவியே அக்கிரியா யோகம். அந்த தெய்வீகக் கொடை மற்றும் உங்களை என்றும் பின் தொடர்ந்து கண்காணித்து வரும் குருதேவரின் நிபந்தனையற்ற அன்பு எனும் கொடை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர வேண்டிய தருணமாக அது இருக்கட்டும். அந்த அன்பைப் பற்றிய விழிப்புணர்வை உங்கள் இதயத்தில் தக்கவையுங்கள், அந்த அன்பில் உங்கள் மனித இயல்பில் உள்ள எந்த குறையையும் பாராது உங்கள் ஆன்மாவின் அழகு மற்றும் திறனை மட்டுமே இறைவனும் குருவும் காண்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்களும் கூட அகத்தே உள்ள அந்த தெய்வீக பிரதி பிம்பத்தைப் பார்க்கக் கற்கும்போது, உங்களால் எதையும் வெல்ல முடியும் என்ற திட நம்பிக்கையைப் பெறுவீர்கள். நீங்கள் தியானம் புரியும் போது குருதேவரின் அந்த அன்பை நினைவில் கொள்ளுங்கள், அதன் சக்தி, உத்திகள் மூலமாகப் பாய்ந்து உங்கள் உணர்வு நிலையை மாற்றி உங்கள் உண்மையான ஆன்மாவின் தூய்மையையும் பிரகாசத்தையும் மறைத்துள்ள மாயையின் உறையை அகற்றுவதை உணருங்கள். நீங்கள் அதைச் செய்யும்போது உங்கள் சித்தத்தை இறைவனது சித்தத்துடன் இணக்கமுற்றிருக்க கடும் முயற்சி செய்யுங்கள், உங்கள் முடிவான முக்தி உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில், கடந்த வருட குருதேவர் பணியின் நூற்றாண்டு நிறைவு விழா, அவரது போதனைகள் உடைய சக்தியின் நினைவூட்டியாகவும் மற்றும் இந்தியாவிலும் அத்துடன் உலகெங்கும் அவை பரவிக் கொண்டிருக்கும் தீவிர வேகத்தின் சான்றாகவும் இருந்து வருகிறது. இந்த வருட நிறைவு விழாவும், அதில் நேரிலோ அல்லது ஆத்மார்த்தமாகப் பங்கேற்றவர்கள் தனிநபர் முயற்சிகளை செறிவூட்டியுள்ளது. இந்த வருட ஜன்மோத்சவ் கொண்டாட்டத்திலிருந்தும் கடந்த வருட அனைத்து அழகிய நிகழ்வுகளிலிருந்தும், நீங்கள் அனுபவித்து உள்ள ஆன்ம ஆனந்தம், குருவின் நிபந்தனையற்ற அன்பில் ஒரு கூடுதலான நம்பிக்கை மற்றும் உங்கள் சாதனாவில் விடாப்பிடியுடனிருக்க ஒரு உறுதியான தீர்மானம் ஆகியவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அவர் உங்களுக்கு வழங்க ஏங்கும் எல்லையற்ற ஆன்மீக தானத்தை நீங்கள் திறந்த மனம் மற்றும் இதயத்துடன் பெரும் பொருட்டு அவர் காட்டியுள்ள பாதையைப் பின்பற்றுதல் அவருக்கு உங்களது நன்றிக் கொடையாகத் திகழட்டும்.

ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்.

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர

Facebook
X
WhatsApp