நினைவாலய அர்ப்பணிப்பின் வெள்ளி விழாக் கொண்டாட்டம்

16 டிசம்பர், 2020

ஸ்மிருதி மந்திர் அர்ப்பணிப்பின் வெள்ளி விழாவைக் கொண்டாட்டங்கள்
Play Video

நினைவாலய அர்ப்பணிப்புக் காணொலி

இந்த ஆண்டு யோகதா சத்சங்க சாகா ஆசிரமம், ராஞ்சியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் ஸ்ம்ரிதி மந்திர் -ஐ (நினைவாலயம்) அர்ப்பணித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இந்த ஆலயம் ஆசிரம வளாகத்தில் உள்ள புனித இடத்தில் நிற்கிறது; இங்குதான் குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், 1920ல், சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா செல்லும் மனக்காட்சியைக் கண்டார். இக்காட்சியை விவரித்தவாறு தன் ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் பரமஹம்ஸர் எழுதுகிறார்:

 

“அமெரிக்கா! நிச்சயமாக இந்த மக்கள் அமெரிக்கர்கள்!” இதுதான் என் மனக்காட்சியில் மேற்கத்திய முகங்களின் ஒரு பரந்த தோற்றம் கடந்து சென்ற போது என் சிந்தனையாகும்.

தியானத்தில் மூழ்கியபடி, ராஞ்சி பள்ளியின் பண்டக அறையில் சில தூசி படிந்த பெட்டிகளுக்குப் பின்னே நான் அமர்ந்திருந்தேன். சிறுவர்களுடன் கழித்த அந்தப் பரபரப்பான வருடங்களில் ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது!

காட்சி தொடர்ந்தது; ஒரு பரந்த அளவிலான கூட்டம் என்னை உன்னிப்பாக கவனிப்பது, நடிகனைப் போல உணர்வுநிலை மேடையின் குறுக்காக வீசிச் சென்றது.

அது பரமஹம்ஸ யோகானந்தரின் அமெரிக்கப் பயணப் புறப்பாட்டிற்கும் பின்னர் இந்தியாவின் பழம்பெரும் கிரியா யோக அறிவியலைப் பரப்ப ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ஐ நிறுவுவதற்கும் வழிவகுத்த ஒரு சகாப்தம்-படைக்கும் தருணம் ஆகும். இந்தத் தொலைதூரக் காட்சியின் விவரங்களும் அதையடுத்து வந்த நிகழ்வுகளும் ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. நினைவாலய அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் -ன் மூன்றாம் தலைவி மற்றும் சங்கமாதாவான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா கூறினார், “பேருண்மையின் தூதராக குருதேவரை அனுப்பியதற்காக நாங்கள் எமது அன்பான இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். இறைவனுக்கான குருதேவரின் ஆழ்ந்த அன்பிலும் மற்றவர்களின் நலனுக்காகவே முழுவதுமாக வாழப்பட்ட அவருடைய தன்னலமற்ற வாழ்வின் நினைவிலுமே நாங்கள் இந்த ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் ஸ்மிரிதி மந்திர் – ஐ அர்ப்பணிக்கிறோம்.”

ஒரு நூறு வருடங்களுக்கு முன் பரமஹம்ஸர் அந்தக் காட்சியைக் கண்ட இடம் ஒரு சின்னஞ்சிறு பண்டக அறையாகும். ஒரு நீண்ட காலமாக அதே இடத்தில் கட்டப்பட்ட ஒரு தியான மந்திர் தினசரி தியானங்களுக்கான ஒரு புனித இடமாகச் செயல்பட்டது. பல வருடங்கள் நடந்த அர்ப்பணிப்புமிக்க திட்டமிடலுக்குப் பிறகே, இந்தப் பளிங்கு மண்டபம் கட்டப்பட்டது.

நினைவாலயம் தீபாவளியின் போது நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளால் ஒளியேற்றப்பட்டது

ஆலயம் ஓர் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, அது ஒரு கம்பீரமான கட்டிடக்கலை அழகையும் கொண்டுள்ளது. ஆசிரமத்தின் நடுவில் இரத்தினக்கல்லைப் போல அமைக்கப்பட்ட இந்த மாசற்ற வெண்ணிற தலைசிறந்த படைப்பாலும் அதன் உள்ளார்ந்த எளிமையாலும் – நீல ஆகாயத்தைப் பின்புலமாகக் கொண்ட பளிங்குக் குவிமாடம், பல்வண்ண மலர்களின் அணிக்கோவை கொண்ட பச்சைப் புல்வெளிகளால் சூழப்பட்ட மாளிகை – ஒருவர் உடனடியாக தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகிறார். தீபாவளி சமயத்தில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்படும் ஆலயம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பேரழகை மேற்கொள்கிறது. ஒவ்வொரு பார்வையாளரும் இந்த ஆலயத்தின் கலைநயமுடைய மகிமையைக் கண்டு வியக்கின்றனர் மற்றும் ஒரு புதிரான அமைதியை உணர்கின்றனர்; ஒருவரும் அதன் ஆட்கொள்ளும் அழகை நோட்டமிடாமல் அதைக் கடந்து செல்வதில்லை. பீடத்தில் உள்ள குருதேவரின் மிகவும் நேர்த்தியான ஆளுயரப்படம் உயிர்ப்பும் அன்பும் நிறைந்ததாகத் தோன்றுகிறது; அவை ஆலயத்திற்குள் நுழையும் பக்தர்களின் மீது இடைவிடாமல் பொழிகின்றன – நுழைவாயிலின் மேல் பதிக்கப்பட்ட “அன்பால் மட்டுமே என் இடத்தை நிரப்ப முடியும்” என்ற வார்த்தைகளுக்கு ஒரு வாழும் சான்று. இந்த வார்த்தைகள் பிரேமவதாரம் (அன்பின் அவதாரம்) மாதிரியாக விளங்கும் அந்தத் தெய்வீக வாழ்வின் ஒரு நினைவூட்டலாகச் செயல்படுகின்றன; அதனால் நாமும் நம் வாழ்க்கைகளில் இந்த அன்பை வெளிப்படுத்தலாம்.

1995ம் ஆண்டு மார்ச் 20-ல் இருந்து 26 வரை நடைபெற்ற ஸ்மிருதி மந்திர் சமர்ப்பண் சங்கம் என்ற ஒருவார நிகழ்ச்சியின் போது, இந்தத் தனித்தன்மைவாய்ந்த, முழுவதும் பளிங்கினால் ஆன, எண்கோண ஆலயம் மார்ச் 22, 1995ல் பரமஹம்ஸ யோகானந்தரின் நேரடிச் சீடரும் ஓர் ஆழ்ந்த மதிப்பிற்குரிய ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் சன்னியாசி யும் ஆன சுவாமி ஆனந்தமோய் கிரியால் அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 1200 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராஞ்சியில் உள்ள ஸ்மிருதி மந்திரில் சுவாமி ஆனந்தமோய்
பரமஹம்ஸ யோகானந்தர் ஸ்மிரிதி மந்திர்-ன் அர்ப்பணிப்பின் போது சுவாமி ஆனந்தமோய் ஆரத்தி எடுக்கிறார்.
ராஞ்சியில் உள்ள ஸ்மிருதி மந்திர் அர்ப்பணிப்பில் பக்தர்கள்
அர்ப்பணிப்பு விழாவிற்குப் பிறகு ஆலயத்தில் நுழைய பக்தர்கள் வெளியே வரிசையில் நிற்கின்றனர்.

அர்ப்பணிப்பு நாளில், ஸ்ரீ தயா மாதா கூறினார், “குருதேவரையும் எழுபத்தைந்து வருடங்களுக்கு முன் அவர் கண்ட காட்சியால் இயங்கவைக்கப்பட்ட உலகளாவிய திட்டப்பணியையும் கௌரவிக்கும் வண்ணம் ஒரு பொருத்தமான நினைவு மண்டபத்தை இங்கே கட்டுவது எமது விருப்பமாக இருந்து வந்தது. இன்று அந்த விருப்பம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்று நாம் அந்த உன்னதமான குருதேவரை, இறைவனின் மற்றும் மனிதகுலத்தின் மகா அன்பரை, ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை கௌரவிக்கிறோம்….இந்தப் பளிங்கு ஆலயம் இந்த மண்ணில் குருதேவர் வாழ்ந்தார் மற்றும் நடந்தார் என்பதற்கு ஒரு கட்புலனாகும் நினைவூட்டலாக அமையட்டும், அதனால் மனிதகுலம் வாழ்வின் உண்மையான பொருளைக் கற்கலாம்; மற்றும் நாமும் இறைவனை நேசிக்கலாம், இறைவனுடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் அவனுடைய என்றும்-புதிய அன்பின் மற்றும் ஆனந்தத்தின் உணர்வுப்பூர்வமான விழிப்புணர்வில் வாழலாம். நாங்கள் பரமஹம்ஸ யோகானந்தர் ஸ்மிரிதி மந்திர்-ஐ அர்ப்பணிக்கிறோம்; இங்கு பக்தர்கள் தனித்தனியாக வந்து தியானத்தில் அமைதியாக அமர்ந்து இறைவனுடனும் குருதேவருடனும் ஆன கூட்டுறவில் இருக்கலாம்.

புனித இடங்கள், அவற்றில் வாழ்ந்து தியானம் செய்த மகானின் அதிர்வுகளைக் காலாகாலங்களுக்கும் தக்கவைத்திருக்கின்றன என்பதால், ஒரு பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. குருதேவர் கூறினார், “நீங்கள் மிகவும் ஆன்மீகமயமான ஓர் இடத்திற்குச் செல்லும் போது, நீங்கள் மேம்படுத்தும் அதிர்வுகளைப் பெறுகிறீர்கள் மற்றும் அவை உங்களை மேலும் சிறப்பாக மாற்றுகின்றன. அதுதான் பெரிய மகான்கள் வாழ்ந்திருக்கும் இடங்களுக்குச் செல்லும் யாத்திரைகளின் மதிப்பு.” இந்தப் புனித இடத்தில் குருதேவருடனான ஒரு சிறந்த கூட்டுறவைப் பெறும் தெய்வீக அனுபவத்திற்கு பல வருடங்களாக எண்ணற்ற பக்தர்கள் சான்றளிக்கின்றனர். ஒருவருடைய ஏற்புத்தன்மைக்கு ஏற்றபடி, நினைவாலயம் ஒவ்வோர் ஆன்மாவும் தேடிக்கொண்டிருக்கும் ஆறுதல், வழிகாட்டல், அன்பு ஆகியவற்றை வழங்குகிறது.

1995ல் முதன்முதலாக நினைவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களிடமிருந்து சில சிந்தனைகள் இங்கே:

“பல வருடங்களாக நமக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்தினுள் நுழைந்த போது, நாங்கள் அழகான பளிங்கு ஆலயத்தைக் கண்டு மிகவும் சிலிர்த்துப் போனோம். நினைவாலயம் ஓர் அழகான கட்டிடக்கலை மாளிகை ஆகும். பீடத்தில் உள்ள குருதேவரின் அழகான படம் உயிர்ப்பு நிறைந்து தோற்றமளிக்கிறது, அவருடைய அன்பான பார்வை புனித ஆலயத்தினுள் நுழையும் பக்தர்களின் மீது இடைவிடாத அருளாசிகளைப் பொழிகிறது.”

துணை ஆபரணம்--1-300x10

“நான் எப்படி தியானம் செய்கிறேன் என்று கவனித்தவாறு குருதேவர் என் முன்னால் அமர்ந்திருப்பதைப் போல இருந்தது.”

துணை ஆபரணம்--1-300x10

“ராஞ்சியை நாங்கள் முன்பு பார்த்திருந்தோம், ஆனால் இம்முறை அது வித்தியாசமாக இருந்தது. மையத்தில் இருந்தது எல்லாப் பக்கங்களிலும் ஒரு பின்னல் வேலைப்பாடுகளைக் கொண்ட ஓர் அழகிய பளிங்குக் கட்டிடம்; நீங்கள் முதலில் பார்க்கும் போது ஒரு பெரிய குவிமாடமும் சுற்றியுள்ள தூண்களும் ஒரு கம்பீரமான காட்சியை உருவாக்குகிறது. பின் ஒரு மிகப்பெரிய உருவப்படம் – குருதேவர் அதிலிருந்து நேரடியாக வெளிவந்து உங்களை இப்போதே வரவேற்க விரும்புகிறார் என்பதைப் போல. மேலும் ஆலயத்தில் உள்ள அதிர்வுகள்! நான் என்ன சொல்ல! குருதேவர் தானே கீழிறங்கி வந்து அங்கே தங்கிவிட்டதைப் போல இருக்கிறது.”

பல ஆண்டுகளாக ராஞ்சி ஆசிரமத்திற்கு வருகை புரிந்து கொண்டிருக்கும் பக்தர்களிடமிருந்து ஒரு சில சிந்தனைகள்:

“ஆசிரம வளாகத்தினுள் நான் அடியெடுத்து வைக்கும் போது, அது நான் எப்போதும் இங்கேயே இருப்பவன் என்ற ஓர் உணர்வைத் தருகிறது. நான் நினைவாலயத்தின் அமைதியான உள்ளிடங்களில் அமரும் போது, அது என் குருதேவர் மேற்கத்திய உலகை எதிர்த்துப் போராடியவாறு இந்தப் போதனைகளை உலகிற்கும் எனக்கும் கொண்டுவர தன் தாய்நாட்டின் சுகத்தைத் தியாகம் செய்தார் என்ற நன்றியுணர்வு என்னை நிரப்பியது.”

துணை ஆபரணம்--1-300x10

“குருதேவர் வளர்ந்து கொண்டிருந்த தன் சிறுவர் பள்ளியுடன் மனநிறைவடைந்து அந்தப் பண்டக அறையில் அந்தக் காட்சியைக் கண்டிருக்காவிட்டால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரியா யோகத்தின் பலன்களை அனுபவித்திக் கொண்டிருக்கும் இந்த நாளை நாம் பார்த்திருக்க மாட்டோம்.”  

துணை ஆபரணம்--1-300x10

“நினைவாலயத்தில் நான் நுழையும் ஒவ்வொரு முறையும், என் எல்லாக் கவலைகளும் பதற்றங்களும் என் இருப்பிலிருந்து வெளியேறுகின்றன.” 

துணை ஆபரணம்--1-300x10

“ஒரு நிறுவனத்தின் இந்த நினைவுச் சின்னத்தை ஆரம்பிக்க என்ன ஒரு பணிவான இடம்.”

இதைப் பகிர

Facebook
X
WhatsApp