YSS பாடங்களின் தமிழ் பதிப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது!

22 ஜூலை, 2022

யோகதா சத்சங்க ஆன்ம-அனுபூதிக்கான பாடங்கள் இப்போது தமிழில் கிடைக்கின்றன என்பதையும், இந்த தமிழ் அடிப்படைப் பாடத் தொடருக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

ஒய் எஸ் எஸ்-தமிழ்-பாடங்கள்-அடிப்படை-தொடர்-வெளியீடு-ஜூலை 2022

பரமஹம்ஸ யோகானந்தர், வரவிருக்கும் உலகளாவிய நாகரீகத்திற்கான ஒரு சிறப்பு ஆன்மீக அருட்பேறாக உலகிற்கு கொண்டு வருவதற்கென அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போதனைகளின் மையமாக யோகதா சத்சங்கப் பாடங்களைக் கருதினார்.

ஜூலை 22 முதல், எங்கள் பக்தர் போர்டல் மூலம் ஆன்லைனில் இந்தப் பாடங்களுக்கு நீங்கள் சேரலாம். உங்களிடம் பக்தர் போர்டல் கணக்கு இல்லையென்றால், இப்போதே கணக்கை துவங்குங்கள். பாடங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், திங்கள் முதல் சனிக்கிழமைவரை 9:00 a.m. to 4.30 p.m வரை (IST), YSS உதவி மையத்தை தொலைபேசியில் (0651) 6655 555 தொடர்பு கொள்ளவும். ஏதேனும் கேள்விகள் அல்லது மின்னஞ்சலுக்கு:[email protected].

பிற இந்திய மொழிகளில் — இந்தி, தெலுங்கு மற்றும் பெங்காலி மொழிகளில் மொழிபெயர்ப்புகள் நடைபெற்று வருகின்றன. இவையும், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் ஞானத்தை முடிந்தவரை பல சாதகர்களுக்கு கிடைக்கச்செய்யும் வகையில், விரைவில் எதிர்காலத்திலும் கிடைக்கும் என நம்புகிறோம்.

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp