புதிய கல்வி ஆண்டிற்கான பதின்ம வயதினருக்கான ஒரு புதிய திட்டம்: ஆன்லைன் டீன் ரீசார்ஜிங் ஸ்டேஷன் (OTRS)

7 அக்டோபர், 2026

தியானம் செய்யவும் மற்றும் யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் போதனைகளை பயிற்சி செய்யவும், இந்தியா முழுவதிலுமிருந்து பதின்மவயதினர் ஆன்லைனில் ஒன்றுகூடினர்.

YSS இளையோர் சேவைகள் சார்பில் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 16, 2026 வரை ஐந்து வார இறுதி நாட்களில் ஆன்லைன் டீன் ரீசார்ஜிங் ஸ்டேஷன் (OTRS) மழைக்காலத் தொடர் நடத்தப்பட்டது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற பத்து வார இறுதி நிகழ்ச்சிகளில் இந்தியா முழுவதிலுமிருந்து 140-க்கும் மேற்பட்ட பதின்ம வயதினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிகள், அவர்கள் புதிய கல்வி ஆண்டை ஒரு ஆன்மீக எழுச்சியுடன் தொடங்க உதவின. அனுபவம் வாய்ந்த வழிவகுப்பாளர்களால் நடத்தப்பட்ட ஒவ்வொரு அமர்வும், ஒரு முக்கிய தலைப்பைக் குறித்த பதினைந்து நிமிட கலந்துரையாடல் வழி கற்பித்தல் மற்றும் முப்பது நிமிட வழி நடத்தப்படும் தியானம் மற்றும் சங்கல்பப் பயிற்சி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

எப்படி-வாழ-வேண்டும் வகுப்புகள்

வேடிக்கை செயல்பாடுகள், கதைகள் மூலம் கருத்துகளைத் தெரிவிக்கும் முறை மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள உத்திகள் ஆகியவை எனக்குப் பிடித்திருந்தன.

— S.A., ஒரு பதின்மவயதினர், வயது 15, கர்நாடகா

கதைகள் மூலம் இணையும் பதின்ம வயதினர்

தேர்வுகள், சக மாணவர்களின் அழுத்தம் மற்றும் பலவிதமான பாடத்திட்டம் கடந்த செயல்பாடுகளின் தேவைகளைச் சமாளித்துக் கொண்டிருந்த பதின்ம வயதினர், எப்படி-வாழ-வேண்டும் வகுப்புகளை வரவேற்றனர்; ஏனெனில், இது தீவிர நடைமுறைகளைக் கையாளும் அதே வேளையில் கூட ஆன்மீக ரீதியில் தங்களை வளர்த்திக் கொள்ள உதவின.

தலைப்புகள் பின்வருமாறு:

  • ஒருமுகப்படுதல்
  • இச்சா சக்தி
  • தோழமை
  • அச்சமின்மை
  • விசுவாசம், மற்றும்
  • பக்தி

இந்த நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற வழிவகுப்பவர்களும் வழிகாட்டிகளும் பணியாற்றினர். ஒரு யோகியின் சுயசரிதம் மற்றும் மெஜ்டா நூல்களிலிருந்து கூறப்பட்ட கதைகள் குறிப்பாகப் பாராட்டப்பட்டதோடு, பதின்ம வயதினர்களின் அன்றாட அனுபவங்களுக்கு ஆன்மீகக் கோட்பாடுகளை நெருக்கமாகக் கொண்டுவர உதவின.

துடிப்புமிக்க கலந்துரையாடல்கள்

ஆன்லைன் வடிவம் பதின்ம வயதினருக்குத் துடிப்புமிக்க, கலந்துரையாடும் வகையிலான கற்றலைச் சாத்தியமாக்கியது. குழு விவாதங்கள், கருத்துக்கணிப்புகள் மற்றும் வலைப்பின்னல் உரையாடல் செய்திகள் ஆகியவை பங்கேற்பாளர்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டன.

ஆன்லைன் அமர்வுகளின் போது கருத்துக்கணிப்புகள் மற்றும் வலைப்பின்னல் உரையாடல் வழியாக ஈடுபாட்டுடன் பங்கேற்கும் பதின்மவயதினர்.

ஒரு சிறப்பு YSS சன்னியாசிகள் நிகழ்ச்சி

OTRS-இன் மற்றொரு சிறப்பம்சம் ஸ்வாமி சங்கரானந்தாவுடனான ஒரு சிறப்பு அமர்வு ஆகும்; இந்நிகழ்ச்சியில் அவர் புத்தரின் வரலாற்றை அகக்காட்சிவழி கதைசொல்லல் மூலம் பகிர்ந்து கொண்டார். முதுமை, நோய், மரணம் மற்றும் அமைதியான துறவி ஆகிய நான்கு எளிய காட்சிகள் எவ்வாறு அந்த இளம் இளவரசரை உண்மை தேடும் பயணத்தில் ஈடுபடச் செய்தன என்பதையும் போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து, அவர் ஞானம் அடையும் வரை தியானத்திலிருந்து எழுவதில்லை என்று சபதம் ஏற்றார் என்பதையும் பதின்ம வயதினர் அறிந்துகொண்டனர். சிறிய தினசரி முயற்சிகளில் கூட, நிலையான தீர்மானமே ஒரு சாதகரை முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதை இது நினைவூட்டுகிறது.

கர்மவினையின் பங்கு மற்றும் அன்றாட வாழ்க்கையில் தியானம் செய்வதன் மதிப்பு பற்றி பதின்மவயதினரின் சிந்தனைகள்.

அனுபவப் பகிர்வுகள்

பெற்றோர்களும் பதின்ம வயதினரும் ஆன்லைன் நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், அவற்றை தொடர்ந்து நடத்துமாறும் கேட்டுக்கொண்டனர். இனிவரும் காலங்களில், OTRS வசந்த காலம் மற்றும் மழைக்கால அமர்வுகளுடன், இளையோர் சேவைகள் வழங்கும் அரையாண்டு நிகழ்வாக இருக்கும்.

பதின்ம வயதினருக்கான அடுத்த ஆன்லைன் சத்சங்கம் (OTS) குறித்த அறிவிப்பு

வசந்த கால மற்றும் மழைக்காலக் காலங்களில் வழங்கப்படும் OTRSக்குக் கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் கோடை மற்றும் குளிர்காலத் தொடர்களாக வழங்கப்படும் பதின்ம வயதினருக்கான ஆன்லைன் சத்சங்கத்திலும் (OTS) -லும் அவர்கள் கலந்து கொள்ளலாம். இளம் மாணவர்களின் கற்றல் மற்றும் இணையவழித் தோழமை தொடர்வதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் போதனைகள் பற்றிய ஆழமான ஆய்வைக் கொண்டுள்ள OTS-ன் குளிர்காலத் தொடர், நவம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பதின்ம வயதினருக்கான ஆன்லைன் சத்சங்கத்தின் 2026–27 குளிர்காலத் தொடரில் பங்கேற்க ஆர்வமுள்ள பெற்றோர்களும் பதின்ம வயதினரும், கீழே உள்ள படிவத்தின் மூலம் தங்கள் விருப்பத்தைப் பதிவு செய்யலாம்:

குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான பிற இளையோர் சேவைத் திட்டங்கள் குறித்த கூடுதல் வினவல்களுக்கு, [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

பதின்ம வயதினர் முகாம்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சத்சங்கங்கள்

YSS இளையோர் சேவைகள் 2026 மே-ஜூன் மாதங்களில் சோலன், ஷூலினி பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான கோடைகால முகாமை நடத்தியது. இந்த குழு சில YSS ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் மண்டலிகளில் நேரில் பதின்ம வயதினருக்கான நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.

சோலன், ஷோலினி பல்கலைக்கழகத்தில் 2026 கோடைக்கால முகாம் பற்றி படியுங்கள்

கவனத்திற்கு: குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான அடுத்த YSS முகாம், சோலன், ஷூலினி பல்கலைக்கழகத்தில் உத்தேசமாக 2027, மே 23-29 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

para-ornament

இதைப் பகிர