YSS

உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் எமது உளமார்ந்த நன்றிகள்

22 மார்ச், 2021

“என்னிடம் எதுவும் இல்லாதிருந்தால், எனக்காக எதையும் செய்யும் நண்பர்களை உங்கள் அனைவரிடத்திலும் நான் பெற்றிருக்கிறேன் என எனக்குத் தெரியும். மேலும் ஒவ்வொரு வழியிலும் உங்களுக்கு உதவப் போகும் ஒரு நண்பனை என்னிடத்தில் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியும். நாம் ஒருவருக்கொருவர் இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவே மிகவும் அழகான உறவு.”​

—பரமஹம்ஸ யோகானந்தர்

அன்பிற்குரிய தெய்வீக ஆன்மாவே,

குருதேவரின் ஆசிரமங்களில் உள்ள சன்னியாசிகளிடமிருந்தும் மற்றும் சேவகர்களிடமிருந்தும் உங்களுக்கு வணக்கமும் அன்பான வாழ்த்துகளும் உரித்தாகுக! நீங்களும் உங்கள் அன்பிற்குரியவர்களும் உடல்ரீதியாக, மனரீதியாக, மற்றும் ஆன்மீகரீதியாக நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம் மற்றும் அதற்காகப் பிரார்த்தனை செய்கிறோம்.

கடந்த ஆண்டு மிகவும் சவாலாக இருந்திருக்கிறது, மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நமது ஆன்மீகக் குடும்ப உறுப்பினர்களில் பலரின் வாழ்க்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், பல முனைகளில் அடுக்கடுக்கான சவால்கள் எழுந்த போதிலும், ஆன்மீகப் படிப்பினைகள் அதிக அளவிலும் மேம்படுத்துவதுமாகவும் இருந்தன. நீடித்த அமைதியும் குணமாக்குதலும் இறைவனுடனான மற்றும் குருவுடனான நமது அக ஒத்திசைவின் வாயிலாக மட்டுமே காணப்பட முடியும் என்று உணர்ந்தறிந்தது அவற்றில் முதன்மையானதாகும். அது குருதேவரின் ஆழ்ந்த போதனைகளில் நம்மை மூழ்கடித்துக்கொண்டு ஒளி, அன்பு, பெரிய மகான்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் நிலைபெறுவதன் மூலம் அகத்தே நோக்கித் திரும்ப, நமது இச்சாசக்திக்கு மீள்-செறிவூட்ட, மற்றும் எதிர்மறைத் தாக்கங்களை வெற்றிகொள்ள நமக்குக் கற்பிக்கிறது.

உங்களுடைய நேரம், பிரார்த்தனைகள், நல்லெண்ணம், பொருள்சார் உதவி ஆகியவற்றின் மூலம் உதவி செய்வதை விரைவுபடுத்திய உங்களைப் போன்ற அன்பான இதயம் கொண்ட ஆன்மாக்களால் வெளிப்படுத்தப்பட்ட மனிதநேயத்தில், பரிவில், மற்றும் ஒருமைப்பாட்டில் இருந்த பெரிய நம்பிக்கையை கடந்த ஆண்டு நமக்குக் காண்பித்தது. இந்த அல்லற்படும் காலங்களில் அத்துணை தன்னலமில்லாமல் வழங்கப்பட்ட உங்களுடைய தாராளமான ஆதரவிற்காக நாங்கள் மிகவும் நன்றி பாராட்டுகிறோம். உங்களுடைய ஆதரவையும் தெய்வீக நட்பையும் நாங்கள் ஆழ்ந்து பாராட்டுகிறோம் மற்றும் உயர்வாக மதிக்கிறோம் என்பதை அறிவீர்களாக.

குருதேவரின் கருணையாலும், உங்களுடைய பெருந்தகைமையான ஆதரவாலும் அர்ப்பணிப்பாலும், எங்களால் கடந்த ஆண்டில் நமது குரு-சகோதரர்களுக்கும் குரு-சகோதரிகளுக்கும் சேவை செய்யவும் மனிதநேய சேவையை ஆற்றவும் பல சவாலான முயற்சிகளைத் தொடங்கி நிறைவுசெய்ய முடிந்திருக்கிறது. ஆசிரமத்தில் குறைந்த அளவிலான செயற்பாடு கொண்ட இக்காலத்தை நாங்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சில திட்டப்பணிகளை நிறைவு செய்யவும் நமது பக்தர்களுக்கு உதவும் புதிய சேவைமிகு செயற்பாடுகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டோம்.

யோகதா சத்சங்கப் பாடங்களின் புதிய பதிப்பு

  • அடிப்படைத் தொடரை நிறைவு செய்தோருக்காகத் துணைப் பாடங்களை ஆங்கிலத்தில் வெற்றிகரமாக எங்களால் வெளியிட முடிந்தது.
  • புதிய அடிப்படைத் தொடர் பாடங்களை இந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் பணியை நிறைவுசெய்ய நாடு முழுவதிலுமுள்ள பக்த-மொழிபெயர்ப்பாளர்களின் குழுக்களுடன் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்.

மின்னியல் (டிஜிட்டல்) முறைகளின் வாயிலாக குருதேவரின் போதனைகளை எடுத்துச் செல்லுதல்

 

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரம் (அல்லது எஸ் ஆர் எஃப் ஆன்லைன் தியான மையம்)) — கூட்டுத்தியானங்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஆன ஓர் ஆன்லைன் தளம்—மிகவும் தேவையான நேரத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தமது பாராட்டை வெளிப்படுத்தியவாறு பல பக்தர்கள் எங்களுக்கு எழுதியிருந்தனர் “பக்தரால் ஆலயத்திற்குச் செல்ல முடியாத போது, ஆலயம் பக்தரின் வீட்டிற்கே வந்துவிட்டதே!” என்று கூறியவாறு பக்தர்களில் ஒருவர் எங்களுக்கு எழுதினார்.

  • முதன்முதல் ஆன்லைன் சாதனா சங்கம் இந்தியில் வெற்றிகரமாக ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரத்தில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது; மற்ற இந்திய மொழிகளில் சங்கங்கள் எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும்வரவிருக்கின்றன. நீங்களும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயனடைந்திருக்கிறீர்கள் என நாங்கள் நம்புகிறோம்: ஒரு நாள் ஏகாந்தவாச நிகழ்ச்சிகள், நினைவஞ்சல் மற்றும் வாராந்திர தியானங்கள், சாதனா சங்கங்கள், இன்ன பிற.

சேவைச் செயற்பாடுகள்

  • சேவை வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும்:
  • ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களிலும் தியான கேந்திரங்களிலும் வேலை செய்யும் பெரும்பாலானோர் கீழ்மட்டப் பொருளாதாரத் தளத்திலிருந்து வருகின்றனர், அங்கே வருமான இழப்பு மிகப்பெரிய துன்பங்களைக் கொடுக்கக்கூடும். உங்கள் பங்களிப்பு நமது பணியாளர்களைத் தக்கவைக்கவும் அவர்களுக்குச் சம்பளத்தை இடைவிடாது மற்றும் உரிய நேரத்தில் வழங்கவும் எங்களுக்குச் சாத்தியப்படுத்தியது.
  • நாடு முழுவதிலும் சேவைச் செயற்பாடுகள்:
    • எமது ஆசிரமங்களைச் சுற்றி மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் பல நகரங்களிலும் சேவைச் செயற்பாடுகளை மேற்கொள்ள உங்கள் பங்களிப்பு எங்களுக்கு உதவியது. பணிமுடக்கக் காலங்களின் போது, ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களிலிருந்தும் தியான கேந்திரங்களிலிருந்தும் தன்னார்வலத் தொண்டர்கள் தமது வாழ்வாதார வழிகளை இழந்த ஏழைகளுக்கும் தினக்கூலித் தொழிலாளிகளுக்கும் உணவுப் பொருட்கள், சுகாதாரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.
    • இயற்கைப் பேரிடர் நிவாரப் பணியில் ஒய் எஸ் எஸ் அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வெள்ள மட்டும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். அன்பிற்குரிய குருதேவரின் பிறந்தநாள் விழாவின் போது, முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள், தொழுநோய்ப் பகுதிகள் ஆகியவற்றிற்கும் இன்ன பிற இடங்களுக்கும் போர்வைகளை விநியோகிப்பதன் மூலமும் உணவையும் உணவுப் பொருட்களையும் வழங்குவதன் மூலமும் எங்களால் ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் சேவையாற்ற முடிந்தது.
துவாரஹாட் ஆசிரமத்திற்கு அருகேயுள்ள காவ்னாட், தலி காவ்னாட், மடிகர் ஆகிய இடங்களில் போர்வைகள் வழங்கப்பட்டன.
ராஞ்சியில் உள்ள ஓர் அநாதை இல்லத்திற்கு பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.
தக்ஷிணேஷ்வர் மற்றும் அரியதாஹா பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு ஒய் எஸ் எஸ் 400 போர்வைகளை விநியோகித்தது.

ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களின் மற்றும் தியான கேந்திரங்களின் பரிபாலனம் 
சூழ்நிலைகள் அனுமதித்த பிறகு நீங்கள் எல்லோரும் வருகை தரும் போது தயார் நிலையில் வைத்திருக்க, ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களைத் தடையில்லாமல் பராமரிக்கவும் நடத்தவும் உங்களுடைய தயக்கமிலா ஆதரவு எங்களுக்கு வழிவகை செய்தது.

சேவகர் வசதிகளுக்கான கட்டமைப்பு விரிவாக்கச் செயல்திட்டத்தின் மீதும் எங்களால் பணியாற்றி ராஞ்சியில் குருசேவாதாம்-ல் உள்ள மூன்று துயிற்கூடங்களை குருதேவரின் ராஞ்சி ஆசிரமத்தில் பல்வேறு பொறுப்புகளில் சேவை செய்யும் சேவர்களுக்காக அறைகலன்களுடன் அமைந்த 27 அறைகளாக மாற்றும் பணியை நிறைவுசெய்ய முடிந்தது.

உங்களுடைய ஆதரவு மிகவும் போற்றப்படுகிறது

உங்களுடைய தாராளமான நிதியுதவிக்காக ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும் ஆழ்ந்த நன்றிகள் உங்களுக்கு உரித்தாகுக. உங்களுடைய நன்கொடைகள் குருதேவரின் திட்டப்பணியை முன்னெடுத்துச் செல்வது, அவருடைய போதனைகளை வெளியிடுவது, ஆன்மீக நிகழ்ச்சிகளை வழங்குவது, ஆசிரமங்களை நடத்துவது, தொண்டுப் பணிகள் செய்வது ஆகியவற்றில் விவேகத்துடன் பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். நமது குருதேவரின் முக்தியளிக்கும் மற்றும் ஆன்ம-ஆறுதலளிக்கும் போதனைகளைப் பரப்பும் இந்தப் புனிதச் செயல்திட்டத்திற்கு மேலும் பங்களிக்க உங்களால் முடிந்தால் மற்றும் நீங்கள் விரும்பினால், ஓர் ஆண்டிறுதி நன்கொடையை வழங்க வேண்டுகிறோம்; அது குறிப்பாக எதிர்வரும் மாதங்களுக்காக நாங்கள் திட்டமிடும் போது உதவிகரமாக அமையும். மாதாந்திர நன்கொடை வழங்குவது உங்களுக்கு அதிக வசதிப்படுமானால், இந்தப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள முறையைத் தேர்வு செய்ய வேண்டுகிறோம்; இது http://donateyss.org/என்ற ஒய் எஸ் எஸ் இணையதளத்தில் உள்ளது.

உங்களுடைய பக்திப்பூர்வப் பங்களிப்புகளின் வாயிலாக—அது பிரார்த்தனைகளின் வாயிலாகவோ அல்லது பொருள்சார் ஆதரவின் வாயிலாகவோ அல்லது ஆன்மீக ஒழுங்குமுறைகளைப் பயிற்சி செய்வதின் மூலமாகவோ, எதுவாயினும் சரி—நீங்கள் குருதேவரின் தெய்வீகப் பணிக்கு உதவி செய்யும் போது, நீங்கள் வெளியே அனுப்பும் எதுவும் பன்மடங்காக மற்றும் உங்கள் வாழ்வில் ஓர் அருளாசியாக உங்களிடம் தவிர்க்கமுடியாமல் திரும்ப வரும்.

பெரிய மகான்களின் கருணையாலும் எங்கும்-நிறைந்த அருளாசிகளாலும் நீங்கள் எப்போதும் சூழப்பட்டிருப்பீர்களாக. இப்பாதையின் மீதான உங்களுடைய பேரார்வம் குறையாமல் இருக்கட்டும் மற்றும் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் தெய்வீக அன்பை கிரியா யோகம் எனும் ஆன்ம-விழிப்பூட்டும் அறிவியல் மூலம் நீங்கள் காண்பீர்களாக.

தெய்வீக நட்பில்,

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp