
கடந்த ஒரு வருடத்தில் நாம் பகிர்ந்து கொண்ட ஆன்மீக ரீதியான தோழமையின் அருமையான தருணங்களை மிகுந்த மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைவுகூர்கிறோம். பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள், மனப்பூர்வமான செய்திகள், சேவை மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் உங்கள் பங்கேற்பு, நம்மை தனது தெய்வீக அரவணைப்பில் ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் நம் அன்பான குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு எங்கள் இதயங்களை நன்றியால் நிரப்புகிறது.
இந்த ஆண்டு முழுவதும் உங்கள் தொடர்ச்சியான தாராள மனப்பான்மை மற்றும் ஊக்கத்திற்கு எங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம், இது நமது குருதேவரின் புனிதப் பணியை பின்வரும் பகுதிகளில் முன்னெடுக்க உதவியுள்ளது:
குருதேவரின் போதனைகளின் பரப்பெல்லையை விரிவுபடுத்துதல்
-
யோகதா சத்சங்க பாடங்களின் புதிய பதிப்பு இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் மொழிபெயர்ப்புகள் நடந்து வருகின்றன.
-
ஒரு யோகியின் சுயசரிதம் ஆடியோபுக் இப்போது குஜராத்தி மற்றும் மலையாளத்தில் கிடைக்கிறது, மேலும் அதன் மின்புத்தகம் பெங்காலி, ஒடியா மற்றும் நேபாளி மொழிகளில் வெளியிடப்பட்டது. பல YSS புத்தகங்கள் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன, இது உண்மையைத் தேடுபவர்கள் குருதேவரின் போதனைகளை தங்கள் தாய்மொழியில் அணுக உதவுகிறது.


ஸ்வாமி சிதானந்தஜி தனது சமீபத்திய இந்திய வருகையின் போது புதிய YSS பதிப்புகளை வெளியிடுகிறார்
பக்தர்களுக்கு மேலும் ஆன்மிக ஆதரவு
கடந்த ஆண்டு, YSS பக்தர்களுக்கு அவர்களின் பயிற்சியில் மிகவும் தேவையான உதவியை வழங்கும் பல சிறப்புத் திட்டங்களை YSS மேற்கொண்டது, அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான புதிய தேடுபவர்களுக்கு குருதேவரின் செய்தியை அறிமுகப்படுத்தியது.
சிறப்பு நிகழ்வுகள்:
-
நம் மதிப்பிற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் பெங்களூரு, சென்னை, அகமதாபாத், நொய்டா மற்றும் காத்மாண்டு வருகை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு உத்வேகம் அளித்து உயர்த்தியது.
ஒரு பக்தர் எழுதியுள்ளார்: “ஸ்வாமி சிதானந்தஜியின் முன்னிலையில் இருப்பது சூரியனின் அரவணைப்பில் நிற்பது போல் உணர்ந்தேன் – ஆறுதல், எழுச்சி, மற்றும் ஆழமான மாற்றம்…. அவரது வருகை எனக்குள் ஓர் அமைதியையும் தெளிவையும் எழுப்பியது, மேலும் முனைப்புடனும் இசைவுடனும் உணர எனக்கு உதவியது.”
-
இதேபோல், கும்பமேளா 2025 இல் ஆயிரக்கணக்கானோர் YSS முகாமில் தங்கியிருந்து பயனடைந்தனர். ஒரு பக்தர் பகிர்ந்து கொண்டதாவது: “எனது உள் விரக்தியையும், வருத்தத்தையும் போக்க கும்ப மேளாவிற்கு செல்ல விரும்பினேன். அதில் நான் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், குருஜியின் அருளால், மூன்று நாள் YSS முகாமில் இருந்து திரும்பியபோது, என் இதயம் தெய்வீக அன்பாலும், அளவற்ற மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்தது. குருதேவரின் அன்பால் ஒளிர்ந்து, எங்களை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டு, எங்கள் தங்குதலை மிகவும் வசதியாக மாற்றிய சன்னியாசிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி.”


கும்பமேளா 2025 இல் YSS முகாம் 2025
ஆசிரமங்களை ஆன்மீக சரணாலயங்களாக பராமரித்தல்

YSS சென்னை ஆசிரமத்தில் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சி
உங்கள் ஆதரவுக்கு நன்றி, YSS ஆசிரமங்கள் தொடர்ந்து அமைதி மற்றும் தெய்வீக புத்துணர்ச்சியின் சரணாலயங்களாகத் தொடர்கின்றன:
-
சென்னை ரிட்ரீட், ஆண்டு முழுவதும் சன்னியாசிகள் வழி நடத்தும் தியானங்கள், சங்கங்கள் மற்றும் தியான நிகழ்ச்சிகளை வழங்கும் ஒரு முழுமையான YSS ஆசிரமமாக முறையாக மாற்றப்பட்டுள்ளது.
-
ராஞ்சி மற்றும் தக்ஷிணேஸ்வர் ஆசிரம விருந்தினர் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன, இது பக்தர்களுக்கு அமைதியான மற்றும் வசதியான தங்குதலை உறுதி செய்கிறது.
-
ராஞ்சி ஆடிட்டோரியம் புதுப்பிக்கப்பட்டு, அதிநவீன ஆடியோ-வீடியோ அமைப்புகள் மற்றும் வசதியான இருக்கைகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட, அனைத்து வானிலைக்கும் ஏற்ற அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது.
-
2024 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராஜமுந்திரி சாதனாலயா, இப்போது பயிற்சி மற்றும் ஆன்மீக சிந்தனைக்கான ஓர் அமைதியான ஏகாந்த வாச மையமாக செயல்படுகிறது.
மனிதநல மற்றும் அறப்பணி செயல்பாடுகள்
உங்கள் ஆதரவுக்கு நன்றி, ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள YSS மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகளில் இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. YSS கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம், மேலும் தேவைப்படும் திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கல்வி உதவிகளையும் வழங்குகிறோம்.
உங்கள் ஆதரவு மிகவும் பாராட்டப்படுகிறது
குருதேவரின் பணியைத் தொடர்வதில் உங்கள் பிரார்த்தனைகள், பங்கேற்பு மற்றும் பங்களிப்புகள் மிக முக்கியமானவை. உங்கள் தொடர்ச்சியான ஆதரவு, கிரியா யோகத்தின் முக்தி அளிக்கும் போதனைகளை மேலும் பல உண்மை தேடுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்னும் பெரிய வெற்றியைப் பெற எங்களுக்கு உதவும்.
பரமஹம்ஸ யோகானந்தர் கூறியதாவது, “உயர்ந்த மகான்கள் கூட தங்களது வெற்றியை, முடிவான இறை அனுபூதி அனுபவங்களை, மற்றவர்களுடன் அவர்கள் இறைவனை உணர்வதில் உதவும் வகையில் பகிர்ந்து கொள்ளும் வரை முழுவதுமாக விடுவிக்கப்படுவதில்லை.”
நாம் முன்னேறிச் செல்லும்போது, இறைவன் மற்றும் நமது அன்பான குருதேவரின் வழிகாட்டும் ஒளி நம்மை தொடர்ந்து உயர்த்தி பாதுகாக்கட்டும். இந்த தெய்வீக குடும்பத்தில் உங்கள் இருப்பை நாங்கள் போற்றுகிறோம், மேலும் இந்த புனித பணியின் ஒரு முக்கிய பகுதியாக நிலைத்திருக்க உங்களை அழைக்கிறோம்.
தெய்வீகத் தோழமையில்,
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா