ஹரித்வார் கும்ப மேளா — 2027

வியாழன், மார்ச் 4, 2027 – வியாழன், ஏப்ரல் 15, 2027

ஹரித்வார் கும்ப மேளா 2027 — நிகழ்வின் ஃபீசர்ட் இமேஜ்

இந்த நிகழ்வுக்கான பதிவுகள் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2026 அன்று தொடங்கும்.

நிகழ்வு பற்றி

கும்ப மேளாக்கள் என்பவை காலங் காலமாக பாரதத்தில் நடைபெற்று வரும் சமயத் திருவிழாக்களாகும். அவை ஆன்மீகக் குறிக்கோள்களை மக்களின் பார்வையில் தொடர்ந்து வைத்திருக்கின்றன.

— பரமஹம்ஸ யோகானந்தர்

நம் அன்பிற்குரிய குருதேவரின் இந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS), கும்பமேளாக்களின் போது முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது. 2025-ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நாங்கள் ஒரு முகாமை ஏற்பாடு செய்திருந்தோம்; அதில் ஏராளமான YSS மற்றும் SRF பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஹரித்வாரில் 1992 முதல், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தைத் தவிர்த்து, ஒவ்வொரு கும்பமேளா மற்றும் அர்த்த கும்பமேளாவின்போதும் YSS முகாம் ஒன்றை நடத்தி வருகிறது. அதைப் போலவே, 2027-ம் ஆண்டு ஹரித்வார் கும்பமேளாவின்போதும் YSS முகாமை அமைக்க திட்டமிட்டுள்ளது. YSS/SRF பக்தர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.

மார்ச் 4 முதல் ஏப்ரல் 15, 2027 வரை கும்பமேளா மைதானத்தில் இந்த முகாம் செயல்படும். இக்காலகட்டமானது பின்வரும் புனித நீராடல் நாட்களை உள்ளடக்கியதாக இருக்கும்:

  • மகா சிவராத்திரி (சனிக்கிழமை, மார்ச் 6) — அமிர்த ஸ்நானம்
  • பால்குண (சோமவதி) அமாவாசை (திங்கட்கிழமை, மார்ச் 8) — அமிர்த ஸ்நானம்
  • நவ சம்வத்ஸரம் (புதன்கிழமை, ஏப்ரல் 7)
  • மேஷ சங்கராந்தி/பைசாகி (புதன்கிழமை, ஏப்ரல் 14) — அமிர்த ஸ்நானம்

மேளாவின் மூன்று அமிர்த ஸ்நான (ஷாஹி ஸ்நான) நாட்களும் இந்த காலகட்டத்திற்குள்ளேயே வருகின்றன. கும்ப மேளாவில் முகாம் நடைபெறும் காலம் முழுவதும், பக்தர்களின் தங்குதலை ஆன்மிக ரீதியாகச் செழுமைப்படுத்தும் வகையில் YSS சன்னியாசிகளால் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் காலை, மாலை நேரக் கூட்டுத் தியானங்கள், கீர்த்தனங்கள் (பக்தி பூர்வ பாடல்கள்) மற்றும் சத்சங்கங்கள் ஆகியவை அடங்கும்.

பிரயாக்ராஜ் கும்ப மேளாவில் நடைபெற்ற முந்தைய முகாம்களின் சிறப்பம்சங்கள்

para-ornament

ஒரு அருளப்பெற்ற அனுபவம்

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் YSS ஏற்பாடு செய்திருந்த முந்தைய முகாம்களில் பங்கேற்ற பக்தர்கள் சிலர் தெரிவித்த அனுபவப் பகிர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி விவரங்கள்

பதிவு

கட்டண விவரங்கள்:

  • உணவுக் கட்டணம் உட்பட பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு ₹ 2,500 ஆகும்.
  • பதிவுக் கட்டணம் செலுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பதிவு குறித்த தகவல்கள்

இந்த நிகழ்வுக்கான பதிவுகள் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1, 2026 அன்று தொடங்கும்.

பதிவு செயல்முறை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:

பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு:

விரைவான மற்றும் எளிதான பதிவுக்கு, பக்தர்கள் YSS பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

YSS உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிவு செய்தல்:

(0651) 6655 555 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது [email protected] முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி பின்வரும் விவரங்களை வழங்குங்கள்:

  • உங்கள் முழுப் பெயர்
  • வயது
  • முகவரி
  • மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
  • YSS பாட பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • உங்கள் குழுவில் உள்ள பிற உறுப்பினர்களின் (யாரேனும் இருந்தால்) வயது மற்றும் பாலினம் மற்றும் அவர்கள் உங்களுடன் எவ்வாறு தொடர்புடையவர்கள்
  • நீங்கள் வருகை தரும் மற்றும் புறப்படும் தேதிகள்

உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பு வழியாக தொகையை செலுத்தலாம்.

SRF பக்தர்களுக்கான பதிவு:

  • ஆர்வமுள்ள SRF பக்தர்கள் YSS உதவி மையத்தை மின்னஞ்சல் ([email protected]) மூலம் தொடர்பு கொண்டு மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களின் அனைத்து விவரங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • முகாமில் YSS ஏற்பாடு செய்துள்ள ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உணவு மற்றும் தங்குமிட வசதிகளைப் பெறவும் SRF பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இருப்பினும், முகாமில் உள்ள எளிய தங்குமிட ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஹோட்டலில் தங்கள் சொந்த தங்குமிட ஏற்பாடுகளை செய்து கொள்ள பரிந்துரைக்கிறோம்.

கவனத்திற்கு:

  • 12 முதல் 75 வயதுக்குட்பட்ட YSS/SRF பக்தர்கள் இந்தக் முகாமில் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • கிடைக்கக்கூடிய வசதிகள் குறைவாக இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். நீங்கள் விரும்பும் தேதிகளில் அதிக நெரிசல் ஏற்பட்டால், மாற்றுத் தேதிகள் ஒதுக்கப்படலாம்.
  • பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். அதனை நீங்கள் முகாமிற்கு வரும்போது கொண்டு வர வேண்டும். அத்தகைய செய்தி கிடைக்கவில்லை என்றால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • உங்கள் பதிவு உறுதிசெய்யப்பட்ட போதிலும் உங்களால் கலந்துகொள்ள இயலவில்லை எனில், பதிவுக்கட்டணம் திரும்ப வழங்கப்படமாட்டாது அல்லது வேறொரு நபருக்கு மாற்றப்படவும் மாட்டாது.
  • முகாம் வசதிகள் முதன்மையாக YSS பக்தர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், உங்கள் குடும்ப உறுப்பினர்களோ அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களோ உங்கள் குழுவுடன் வர விரும்பினால், அவர்களும் அதில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.
தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள்

பதிவு செய்துகொண்டவர்களைப் பொறுத்தவரை, YSS முகாமில் தங்குவதற்கான கால அளவு, வருகை மற்றும் புறப்படும் நாட்கள் உட்பட நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகள் மட்டுமே. இதன் நோக்கம், அங்குள்ள குறைந்த வசதிகளை அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பயன்படுத்திக்கொள்வதையும், அதே வேளையில் அவர்கள் நீராடல் மற்றும் பிற சடங்குகளை நிறைவேற்றிக் கொள்வதையும் உறுதி செய்வதற்காகும்.

கவனத்திற்கு:

  • முகாமில் வசதிகள் குறைவாக இருப்பதால், YSS மூலம் தங்குமிடம் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே முகாமில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய உறுதிப்படுத்தல் இல்லாத நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை உடன் அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
  • ஆண்களும் பெண்களும் தனித்தனி கூடாரங்களில் தங்க வைக்கப்படுவார்கள்; எனவே குடும்பங்கள் அதற்கேற்ப தங்கள் உடமைகளை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்குமிட வசதி

முகாமில் தங்குமிடங்கள் மணலில் அமைக்கப்பட்ட கூடாரங்களாக இருக்கும், அவற்றின் தரைகள் வைக்கோலால் மூடப்பட்டு, அதன் மேல் தார்ப்பாய் விரிக்கப்பட்டிருக்கும்.

  • படுக்கைகள், தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படும், ஆனால் தயவுசெய்து உங்கள் சொந்த படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஸ்லீபிங் பைகளை கொண்டு வாருங்கள்.
  • ஹரித்வாரில் மார்ச் மாதத்தில் வானிலை மிதமான வெப்பத்துடன் காணப்படும், ஏப்ரல் மாதம் செல்லச் செல்ல வெப்பம் மேலும் அதிகரிக்கும். எனவே, வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான பொருட்கள், போதுமான நீர்ச்சத்து மற்றும் லேசான பருத்தி ஆடைகளைக் கொண்டு வரவும், மார்ச் மாத அதிகாலை நேரங்களுக்காக மெல்லிய சால்வை அல்லது ஸ்டோல் ஒன்றையும் கொண்டு வரவும், தோராயமான வெப்பநிலைகள் பின்வருமாறு:
    • பகல் நேரம்: 25°C–37°C (77°F–99°F)
    • இரவு நேரம்: 13°C–22°C (55°F–72°F)
  • நீங்கள் ஒரு ரெயின்கோட் அல்லது குடை (இந்த மாதங்களில் எப்போதாவது மழை பெய்யக்கூடும் என்பதால்), கொசு விரட்டி கிரீம், ஒரு டார்ச், உங்கள் ஆசனம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத் தேவையான பிற பொருட்களை உடன் எடுத்து வரலாம்.

உணவு

பக்தர்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதுமின்றி எளிமையான உணவுகள் வழங்கப்படும்.

அருகிலுள்ள ஹோட்டல்கள்

கும்ப மேளாவின் போது தங்குமிடம் அல்லது உணவு தொடர்பாகச் சிறப்புத் தேவைகள் கொண்ட பக்தர்கள், அருகிலுள்ள ஹோட்டல்கள் ஒன்றில் தங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் டிசம்பர் மாதம் வெளியிடப்படும்.

எப்படி சென்றடைவது

ஹரித்துவாரை அடைதல்:

  • விமானம் மூலம்: டேராடூன் (ஜாலி கிராண்ட்) விமான நிலையம் (DED) ஹரித்துவாரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது.
  • ரயில் வழியாக: ஹரித்வார் சந்திப்பு (HW) முக்கிய ரயில் நிலையமாகும்.
  • சாலை வழியாக: தில்லியிலிருந்து சுமார் 210 கி.மீ தொலைவில் ரூர்க்கி வழியாக NH-334 நெடுஞ்சாலையில் ஹரித்வார் உள்ளது.

சிறப்பு நீராடல் நாட்களின் போது:

அதிகமான மக்கள் கூட்டம் காரணமாக, வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால், தயவுசெய்து குறைந்த அளவு சாமான்களை எடுத்து வாருங்கள்.

வினவல்களுக்கான தொடர்பு விவரங்கள்

யோகதா சத்சங்க கிளை மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி – 834001
ஜார்கண்ட்

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, காலை 9:00 மணி – மாலை 4:30 மணி.)
மின்னஞ்சல்: [email protected]

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர