ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் புதிய தலைவரை அறிவிக்கிறது

2 செப்டம்பர், 2017

Swami Chidananda current Spiritual head of YSS/SRF.

சுவாமி சிதானந்த கிரி ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப்-பின் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

யோகதா சத்சங்க சொஸைடி ஆப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் இயக்குனர்கள் குழுமம், சுவாமி சிதானந்த கிரி அவர்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பின் தலைவராகவும் ஆன்மீக முதல்வராகவும், இப்பதவியில் ஜனவரி 2011 லிருந்து கடந்த மாதம் அவர் இறக்கும் வரை சேவை செய்த ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவை அடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அடைகிறது. இவரது நியமனம், ஆகஸ்ட் 30, 2017 அன்று எஸ் ஆர் எஃப் இயக்குனர் குழுமத்தால் ஒருமித்த வாக்கு வாயிலாக, ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2010-ல் தனது மறைவிற்கு முன்னர் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவி ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா, ஸ்ரீ மிருணாளினி மாதாவிடம், மிருணாளினி மாதாவிற்குப் பிறகு சுவாமி சிதானந்த கிரி ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப்- பின் தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்ற முடிவைத் தெரிவித்தார். மிருணாளினி மாதாவும் ஆகஸ்ட் 3,2017-ல் தான் மகாசமாதி எய்துவதற்கு முன் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் இயக்குனர்கள் குழுமத்தில் இதை உறுதிப்படுத்தி, ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் பரிந்துரையை வலியுறுத்தினார்.

சுவாமி சிதானந்த கிரி ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சன்னியாசியாக நாற்பது ஆண்டுகளும், ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் இயக்குனர் குழுமத்தின் ஒரு உறுப்பினராக கடந்த 8 வருடங்களாகவும் இருந்து வருகிறார். அவரது சன்னியச வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே அவர் ஶ்ரீ மிருணாளினி மாதாவுடன் நெருங்கிப் பணிபுரிந்து பரமஹம்ஸரது நூல்கள் மற்றும் பிற ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் வெளியீடுகளை தொகுப்பதிலும் பிரசுரப்பதிலும் ஸ்ரீ மாதாவிற்கு ஏற்ப உறுதுணையாய் இருந்ததன் மூலம் ஶ்ரீ மாதாவிடமிருந்து அவரது ஞானம்மிக்க குருதேவருடன் ஒத்திசைந்திருக்கும் பயிற்சையைப் பெற்றார்.

இறைவனுக்கும் எஸ் ஆர் எஃப் பணிக்கும் சேவை செய்ய ஒரு விழிப்புணர்வு

1953-ல் மேரிலேண்டிலுள்ள அன்னாபோலீஸ் நகரில் பிறந்த சுவாமி சிதானந்தா, பரமஹம்ஸருடைய போதனைகளையும் என்ஸினிடஸிலுள்ள அவரது ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப் கிளையையும் 1970 களின் ஆரம்ப காலங்களில், ‘சான்டியாகோ’விலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் தத்துவ ஆராய்ச்சி மாணவராக இருந்த போது தற்செயலாக எதிர்கொண்டார். நீண்டகாலமாக உணர்ந்து வந்த இந்திய ஆன்மீகத்தின் மீதான ஆர்வத்தினால் ஈர்க்கப்பட்டு அவர் என்ஸினிடாஸிலிருந்த எஸ் ஆர் எஃப் ஆசிரமத்திற்குச் சென்றார்; பல்கலைக்கழக வளாகத்திந் வடக்கே இருந்த ஆசிரமம், அருகிலுள்ள கரையோர கிராமங்களில் வாழ்ந்த மாணவர்களுக்கு ஒரு பிரபலமான அடையாளக் கட்டிடமாகத் திகழ்ந்தது.

சில மாதங்களுக்குப் பின் ஒரு யோகியின் சுயசரிதத்தின் ஒரு பிரதியைக்காணும் வாய்ப்பு நேர்ந்தது, அவர் உடனடியாக புத்தகத்தின் பக்கங்களில் புதைந்து கிடந்த உயர்ஞானம் மற்றும் தெய்வீக உணர்வு நிலையினால் ஆட்கொள்ளப்பட்டார். தனது பல்கலைக்கழகப் படிப்பின் இறுதி வருடத்தில் அவர் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்களுக்கு பதிவு செய்துகொண்டு என்ஸினிடாஸில் உள்ள எஸ் ஆர் எஃப் பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அவர், அந்த காலகட்டத்தில், அவ்வாசிரமத்தின் சமயச் சொற்பொழிவாளர் ஆக இருந்த சுவாமி ஆனந்தமாய்யினுடைய இரைகளால் மிகவும் எழுச்சியூட்டப்பட்டு அவரது தனிப்பட்ட அறிவுரைகளினாலும் மிகவும் பயன் அடைந்தார். பரமஹம்சர் அது தெய்வீக அதிர்வலைகளால் ஊடுருவப்பட்ட ஆசிரமத்தில் புனித சுற்றுப்புறத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகளால் ஆழ்ந்து தாக்கமுறப்பெற்று, வாழ்க்கை முழுவதும் இறைவனை நாடுவதற்கும் மற்றும் பரமஹம்சர் பணிக்கு ஒரு சன்னியாசிச் சீடராக சேவை செய்வதற்கான ஒரு அவா உடனடியாக அவருள் எழுந்தது.

சுவாமி சிவானந்தா, 1977 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் சன்னியாசியாக சேர்வதற்கு விண்ணப்பித்துக் கொண்டவர்கள் ஆசிரமத்தில் சேர்ந்து, இளம் துறவிகளுக்கான பயிற்சிக்குப் பொறுப்பேற்றிருந்த ஆசிரம சன்னியாசி புனித சுவாமி பிரேமமொய்யின் கண்டிப்பான ஆனால் அன்பான வழிகாட்டுதலின் கீழ் ஒன்றரை வருடம் கழித்தார். சுவாமி பிரேமாமொய் தான் முதன்முதலில் மிருணாளினி மாதாவிடம் இந்த இளம் சன்னியாசியை எஸ் ஆர் எஃப் பதிப்பாசிரியர் துறையில் சேர்த்துக் கொள்வதற்குப் பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைத்தார். ஏப்ரல் 1979 இல் இளம் சன்னியாசிகளுக்கான பயிற்சியை முடித்த பிறகு, சுவாமி சிதானந்த, மவுண்ட் வாஷிங்டனில் உள்ள சர்வதேச தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு, உடனடியாக, நூல்கள் பிரசுரத்துறையில் பதிப்பாசிரியர் சார்ந்த பணி அளிக்கப்பட்டார். அவர், குருதேவர் ஆல், நேரடியாக தனது நூல்கள் மற்றும் உரைகள் குறித்த எதிர்கால தொகுப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்ட ஶ்ரீ மிருணாளினி மற்றும் அவரது சக தலைமைப் பதிப்பாசிரியர் ஶ்ரீசகஜமாதா ஆகிய இருவர் கீழும் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றார்.

1996ல் சகஜமாதாவின் மறைவிற்கு சற்று பின்னர் சுவாமி சிதானந்தா, அன்றைய தலைவி ஶ்ரீ தயாமாதாவால் எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ்-ன் சர்வதேச வெளியிட்டு குழுமத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் ஸ்ரீ தயாமாதா மற்றும் மிருணாளினி மாதாவுடன் சேர்ந்து, 2010இல், ஶ்ரீ தயா மாதாவின் மறைவு வரை சேவை புரிந்தார். இந்த காலத்தில், இந்த இரு மூத்த குருதேவரது நேரடி சீடர்களுக்கு, 1980லிருந்து பரமஹம்ஸரது மிகப்பெரிய ஆன்மீக விளக்க உரைகளையும் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: பகவத் கீதை மற்றும் தி செகண்ட் கமிங் ஆப் கிரைஸ்ட்: உங்கள் அகத்தே உள்ள கிறிஸ்துவின் உயிர்த்தெழல்) உள்ளடக்கிய அனைத்து ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் நூல்களின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் துணை புரிந்தார். தயா மாதா, மிருணாளினி மாதா மற்றும் சகஜமாதா ஆகிய மூவரால், பல வருடங்களுக்கு படிப்படியாக அளிக்கப்பட்ட ஆழ்ந்த பயிற்சிக்குப்பின், ஸ்ரீ மிருணாளினி மாதாவால், அவரது மறைவிற்குப் பின் ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் பிரசுரங்களின் தலைமைப் பதிப்பாசிரியராக சுவாமி சிதானந்தர் பொறுப்பேற்க நியமிக்கப்பட்டார்.

சுவாமி சிவானந்தா, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழில் ஸ்ரீ தயா மாதவாவால் இறுதி சன்னியாச விரதங்களில் தீட்சை அளிக்கப்பட்டார்; அவரது துறவு பெயர் “பேரின்பம் (ஆனந்தா) எல்லையற்ற தெய்வீக உணர்வு நிலை (சித்) மூலம்” என்று பொருள்படுகிறது. ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் அதிகாரப்பூர்வமான சன்னியாசி என்ற முறையில் அவர் பரமஹம்சர் யோகானந்தரது போதனைகளை, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா அத்துடன் இந்தியா ஆகிய நாடுகளில் சொற்பொழிவுப் பயணங்கள் மற்றும் ஏகாந்தவாச நிகழ்ச்சிகளின் போதும், அத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் வருடாந்தர எஸ் ஆர் எஃப்பின் உலகளாவிய சமயச்சபை நிகழ்வுகளின் போதும், பகிர்ந்து கொண்டார். அவர் 2009ல் ஸ்ரீதர் மாதா வால் ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் இயக்குனர் குழுமத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்; மற்றும் அவர், தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் எஸ் ஆர் எஃப்-பின் பல்வேறு செயல்பாடுகளையும், செய்முறைகளையும் மேற்பார்வையிடும் நிர்வாகக்குழு உறுப்பினராக பல வருடங்கள் சேவை புரிந்துள்ளார்.

” அனைவரும் சேர்ந்து இறைவனை நமது ஆன்மாக்களின் ஒரே அன்பனாக நாடுதல்…..”

தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் எஸ் ஆர் எஃப் / ஒய் எஸ் எஸ் துறவிகள் இடையே உரையாற்றி சுவாமி சிதானந்தா கூறினார்:

” மிக்க பணிவுடனும், குருதேவர் பரமஹம்ச யோகானந்தர் மட்டுமே எப்பொழுதும் இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பார் என்ற உணர்வுடன் தான், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் உதவியையும், ஸ்ரீ தயா மாதா மற்றும் ஸ்ரீ மிருணாளினி மாதா அவர்களின் வேண்டுகோளான அவர்களதுப் பணியைத் தொடர்ந்து முன்நடத்தும் சேவையை அவர்கள் காட்டிய வழிகளில் நிறைவேற்ற முயல்வதில், வேண்டுகிறேன். குருதேவரது அன்பின் புனித சாதனங்களாக இருப்பதில் அவர்களது அர்ப்பணிப்பும், ஒவ்வொரு எண்ணம், முடிவுகள் மற்றும் செயலிலும் குருதேவர் விருப்பம் மற்றும் வழிகாட்டுதலுடன் ஒத்திசைந்திருக்க நாடுவதில் அவர்களது தெய்வீக எடுத்துக்காட்டுகளும், ஆசிரமத்தில் என் வாழ்க்கை முழுதூடாக எனக்கு ஒரு அகத்தூண்டுதலாக இருந்து வந்துள்ளன; அதன் பொறுப்புணர்வுடன் நான் இதை இறைவன் மற்றும் குருமார்களின் மகத்தான பணியில் எதிர்வரும் வருடங்களில் உங்கள் அனைவரது உதவி, பிரார்த்தனைகள், நல்லெண்ணம் மற்றும் தெய்வீக நட்புறவில் நம்பிக்கை வைத்து சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள், குரு தெய்வம் என்ற சீடர்களின் ஐக்கிய ஆன்மீக குடும்பம் என்ற முறையில்தான் நாம் அனைவரும் சேர்ந்து கூட்டாக ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப்-பின் இந்த மகத்தான பணியை தெய்வீக அன்பு, ஆனந்தம் மற்றும் சுய சரணாகதி என்ற உணர்வில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை ஆமோதிக்கும் வகையில் உங்கள் பாத தூளியை ஏற்கிறேன். குருதேவர் நம் அனைவரையும் வற்புறுத்திய மற்றும் அதுதான் இனி வரும் அனைத்து காலங்களிலும் உயிர் நாடியாகவும் வலிமையாகவும் இருக்கப்போகிறது என்று தீர்க்க தரிசனமாக அருளிய, இறைவனை நம் ஆன்மாக்களின் ஒரே அன்பாநாக நாடும் உணர்வில் உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறேன். ஜெய் குரு! ஜெய் மா!”

உலகளாவிய ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் ஆன்மீக குடும்பத்திற்கு, சுவாமி சிதானந்தஜி பின்வரும் செய்தியை தெரிவிக்க விரும்புகிறார்:

” அன்புக்குரியவர்களே, இறைவன் மட்டும் குருதேவரது அன்பின் பெயரில் உங்கள் அனைவருக்கும் வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்: மேலும் நாம் அனைவரும் கிரியா யோக தியானம் என்ற இந்தத் தெய்வீகப் பாதையில் பயணித்து பரமஹம்ஸ யோகானந்தரால் நமக்குக் கொணரப்பட்ட இறைவனுடன் ஒத்திசைந்து வாழ்க்கையில், நான் இறைவன் மற்றும் குருதேவரின் தொடர்ந்த நல்லாசிகளை நம் அனைவருக்காகவும் கோருகிறேன். குருதேவரது பெயரில் உங்கள் அனைவருக்கும் சேவை செய்வதற்கு மற்ற ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளும் இருப்பதுபோல் நானும் பணிவுடன் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இறைவனை நாடும் இல்லறப் பாதையிலோ அல்லது துறவறப் பாதையிலோ ஆன்மாக்களின் உலகளாவிய ஒரு குழு என்ற முறையில், இந்த போதனைகளின் ஆன்மீக நல்லாசிகளுக்காக நாம் மேலும் நம் சொந்த சாதனா மற்றும் இறைவன் அத்துடன் குருமார்களுடனான அகத்தொடர்பையும் ஆழப்படுத்துவதற்கான நம் தீர்மானத்திலும் நாம் நன்றி உணர்வுடன் இணைந்து இருப்போம். அவர்களது இடைவிடாத நல்லாசிகளை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்வீர்களாக.ஜெய்குரு!”

இதைப் பகிர

Facebook
X
WhatsApp