குரு பூர்ணிமா

(நினைவு தியானம் மற்றும் சொற்பொழிவு)

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025

காலை 6:30 மணி.

– காலை 8:30 மணி.

(IST)

நிகழ்வு பற்றி

குருவிற்கும்‌ சீடனுக்கும்‌ இடையே உள்ள உறவுதான்‌, நட்பில்‌ உள்ள அன்பின்‌ மிக உயர்ந்த வெளிப்பாடு; அது இருவரும்‌ பகிர்ந்து கொள்ளும்‌ ஒரே இலட்சியமாகிய–அனைத்திற்கும்‌ மேலாக இறைவனை நேசிப்பது–என்ற பெருவிருப்பத்தின்‌ அடிப்படையில்‌ அமைந்த நிபந்தனையற்ற தெய்வீக நட்பாகும்‌.

— பரமஹம்ஸ யோகானந்தர்

குரு பூர்ணிமா புனித தினத்தில், YSS பக்தர்கள், வணக்கத்திற்குரிய YSS குருமார்கள் பரம்பரைக்கு — குறிப்பாக, நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருக்கு — இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறார்கள். அவருடைய தெய்வீக அகத் தூண்டுதலும் வழிகாட்டுதலும், நம்மை ஆன்ம-அனுபூதிப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகின்றன.

இந்த நிகழ்வை நினைவுகூரவும், புனித குரு-சிஷ்ய உறவைப் கௌரவிக்கவும், YSS சன்னியாசி ஒருவரால் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆன்மீகரீதியாக வளப்படுத்தும் நிகழ்வில் ஒரு கூட்டுத் தியானம், பக்தி கீர்த்தனம் மற்றும் ஒரு ஊக்கமளிக்கும் சொற்பொழிவு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இந்தப் புனித நன்னாளில், YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளிலும் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் செய்தி

இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் வணக்கத்திற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் சிறப்பு செய்தியைப் படிக்க, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்:

உங்கள் வாழ்வில் அவர்கள் பொழிந்த ஏராளமான அருளாசிகளுக்காக நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தர் மற்றும் YSS குரு பரம்பரைக்கு உங்கள் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கவும், அவரது தெய்வீகப் பணிக்குச் சேவை செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் விரும்பினால், குரு பூர்ணிமா வேண்டுகோளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்:

இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் காணிக்கை செலுத்த, கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்:

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர