இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது.
வரவிருக்கும் நிகழ்வில் எங்களுடன் சேர விரும்பினால், நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

ஜன்மாஷ்டமி

(நினைவு தியானம் மற்றும் சொற்பொழிவு)

YSS ODK ஜன்மாஷ்டமி நினைவு நிகழ்ச்சிகள் — 2026

நிகழ்வு பற்றி

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் பரிந்துரைத்த பாதை உலகின் பரபரப்பான மனிதனுக்கும் மிக உயர்ந்த ஆன்மீக ஆர்வலருக்குமான மிதமான, நடுத்தர, பொன்னான பாதையாகும்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

ஜன்மாஷ்டமி — பகவான் கிருஷ்ணரின் அவதார தினம், அவருடைய போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன — யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் ஆண்டுதோறும் சிறப்பு நினைவு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இது செப்டம்பர் 4 அன்று வருகிறது.

இந்தப் புனித நன்னாளை பின்வரும் நிகழ்ச்சிகளுடன் நாம் கொண்டாடும் வேளையில், அவற்றில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்:

YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரியுடன்
ஜன்மாஷ்டமி நினைவு தியானம்
(உடனடி இந்தி மொழிபெயர்ப்புடன்)

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 4, 2026
காலை 7:00 மணி – காலை 8:00 மணி (இந்திய நேரப்படி)

இந்தச் சிறப்பு நாளில், YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் ஒரு நினைவுத் தியானம் வழிநடத்துவார்; இந்நிகழ்ச்சி அமெரிக்கா, லாஸ் ஏஞ்ஜலீஸில் உள்ள YSS/SRF சர்வதேச தலைமையகத்திலிருந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை (இந்திய நேரப்படி) நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இந்த வீடியோ பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

YSS சன்னியாசி ஒருவரின் இந்தி சொற்பொழிவு

भगवान कृष्ण : मानव रूप, दिव्य स्वरूप

(பகவான் கிருஷ்ணர்: மனித வடிவில் இறைவன்)

சனிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2026
மாலை 6:30 – இரவு 7:30 (இந்திய நேரப்படி)

புனித ஜன்மாஷ்டமி தினத்தில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசி ஸ்வாமி அச்யுதானந்த கிரி, “भगवान कृष्ण: मानव रूप, दिव्य स्वरूप (பகவான் கிருஷ்ணா: மனித வடிவில் இறைவன்)” என்ற தலைப்பில் இந்தியில் சொற்பொழிவாற்றுவார்.

இந்தச் சொற்பொழிவில், ஸ்வாமி அச்யுதானந்தா ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத இயல்பை எடுத்துரைப்பார் — அதாவது பூரண அவதாரமான அவருடைய திருநாமமே, (ākarṣayati iti kṛṣṇaḥ) பிரிந்து சென்ற ஆன்மாக்களைத் தங்களின் திவ்ய இல்லத்திற்குத் திரும்ப ஈர்க்கும் தவிர்க்க முடியாத பிரபஞ்ச ஈர்ப்பைக் குறிக்கிறது. சாதாரண புலன் உணர்வுகளுக்கும் மனித அறிவிற்கும் எட்டாத, இறைவனின் சாசுவத ஆனந்தம் மற்றும் நிபந்தனையற்ற அன்பு ஆகியவற்றின் பிரிக்க முடியாத சாராம்சமாக பகவான் கிருஷ்ணர் எவ்வாறு திகழ்கிறார் என்பதையும் அவர் விளக்குவார்.

இந்த சொற்பொழிவு, ராதா எடுத்துக்காட்டும் தூய ஆன்மா-பரம்பொருள் பக்தி, மற்றும் படைப்பை நிலைநிறுத்தும் பிரபஞ்ச ஒத்திசைவு ஆகிய அவனுடைய தெய்வீகத் திருவிளையாடலின் (லீலை) மறைபொருள் முக்கியத்துவத்தை மேலும் ஆழமாக ஆராயும், பகவத் கீதையைப் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் எழுச்சியூட்டும் விளக்கமான காட் டாக்ஸ் வித் அர்ஜுனா-விலிருந்து மேற்கோள் காட்டி, கிரியா யோக விஞ்ஞானமும் ஆழ்ந்த உள்முகப்படுத்தப்பட்ட தியானமும், புலன் எல்லைகளின் திரையைத் துளைத்து, வரம்பிற்குட்பட்ட மனிதப் பற்றுதல்களை பேரன்பாக (வாசுதேவ குடும்பகம்) மாற்றி, உள்ளுறையும் சர்வ வல்லமை கொண்ட கிருஷ்ண உணர்வுநிலையை விழித்தெழச் செய்யவும் எவ்வாறு சாதகர்களுக்கு உதவுகின்றன என்பது குறித்த கருத்துக்களை ஸ்வாமி அச்சுதானந்தா பகிர்ந்துகொள்வார்.

ஆகஸ்ட் 29, சனிக்கிழமையன்று தக்ஷிணேஸ்வர், யோகதா சத்சங்க மடத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ள இச்சொற்பொழிவில் கலந்துகொள்ள அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

கவனிக்கவும்: இந்த உரை செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி) பார்க்கக் கிடைக்கும்.

நேரில் நிக்ழ்ச்சிகள்

இந்தப் புனித தருணத்தில், YSS ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் நேரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் அறிய மற்றும் கலந்துகொள்ள, உங்களுக்கு அருகிலுள்ள தியான மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஸ்வாமி சிதானந்த கிரி-யிடமிருந்து ஜன்மாஷ்டமி நற்செய்தி

“பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருஅவதார நினைவுநாளான இந்த ஆன்மீக எழுச்சியூட்டும் ஜன்மாஷ்டமியில் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவதரித்திருந்தாலும், இந்த மகத்தான, நேசத்திற்குரிய இறை-அன்பின் அவதாரம், தனது அழகான மனித வடிவத்தில் இம்மண்ணுலகில் வாழ்ந்தது எவ்வளவு உண்மையானதோ அதே போலவே, அவருடன் இசைந்திருப்பவர்களுக்கு இன்றும் மெய்யானவராக உள்ளார் — ஆன்ம-அனுபூதி எனும் இலக்கை நோக்கிய இராஜ யோகப் பாதையில் உள்ள உண்மையான சாதகர்களுக்கு வழிகாட்டி, அவர்களை மேம்படுத்த என்றும் தயாராக உள்ளார்.”

காணிக்கை செலுத்த

பகவத் கீதையின் சாசுவத ஞானத்தை நமக்கு அருளிய பகவான் கிருஷ்ணருக்கு நன்றி செலுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பை ஜென்மாஷ்டமி நமக்கு வழங்குகிறது. இந்தப் புனித நாளில் நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் செலுத்துங்கள்:

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர