பரமஹம்ஸ யோகானந்தரின் ஜன்மோத்ஸவ்
நினைவு தியானம் மற்றும் சொற்பொழிவு

(ஆங்கிலத்தில் YSS சன்னியாசி ஒருவர் நடத்துவது)

ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

காலை 6:30 மணி

– காலை 8:30 மணி

(IST)

நிகழ்வு பற்றி

உண்மையான அன்பு தெய்வீகமானது. மேலும்‌ தெய்வீக அன்புதான்‌ ஆனந்தம்‌. தீவிர தாகத்துடன்‌ இறைவனை நாடி நீங்கள்‌ எவ்வளவு அதிகமாக தியானிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அந்த அன்பை உங்கள்‌ இதயத்தில்‌ நீங்கள்‌ உணர்வீர்கள்‌. அப்பொழுது நீங்கள்‌ அன்பே ஆனந்தம்‌, ஆனந்தமே இறைவன்‌ என்பதை அறிவீர்கள்.‌

— பரமஹம்ஸ யோகானந்தர்

1893 ஆம் ஆண்டு இந்தியா, கோரக்பூரில் பகபதி மற்றும் ஞான பிரபா கோஷ் ஆகியோருக்கு பிறந்து முகுந்த லால் கோஷ் என்று பெயர் சூட்டப்பட்ட பரமஹம்ஸ யோகானந்தரின் அவிர்பவ் திவஸ் (அவதார தினம்) ஜனவரி 5 ஆகும். அவர் பிறப்பதற்கு முன்பே, இந்தியாவின் புனித யோக தியான விஞ்ஞானத்தை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு வருவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று அவரது ஞான ஒளி பெற்ற குரு பரம்பரை குருமார்கள் முன்னறிவித்தனர்.

நமது அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஜன்மோத்ஸவ் புனித நிகழ்வு யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவினால் ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை ஆங்கிலத்தில் YSS சன்னியாசி ஒருவர் நடத்திய ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியுடன் நினைவுகூரப்பட்டது. இதில் பிரார்த்தனை, பிரபஞ்ச கீதம் பாடுதல், வாசிப்பு மற்றும் தியானமும் பின்னர் அதைத் தொடர்ந்து ஒரு சொற்பொழிவும் நடைபெற்றது.

பரமஹம்ஸரின் ஜன்மோத்ஸவ் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரமங்கள், தியான கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளிலும் இந்த பிரேமாவதாரத்திற்கு அன்பு, பக்தி மற்றும் மனமார்ந்த நன்றியுடன் கொண்டாடப்பட்டது.

இந்த நாளில், வாழ்க்கையை மாற்றும் கிரியா யோக தியான போதனைகளை உலகிற்கு கொண்டு வந்ததற்காகவும், ஆன்மீக பயணத்தில் அவரது வழிகாட்டுதல்களுக்கும், அருளாசிகளுக்கும் அன்பார்ந்த பரமஹம்ஸருக்கு பக்தர்கள் தங்கள் நன்றியை நன்கொடை அளிப்பதன் மூலம் தெரிவிக்கின்றனர். இந்த புனித காணிக்கையை நீங்கள் செலுத்த விரும்பினால், தயவுசெய்து கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர