ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர் அவதார தினம்

ஆன்லைன் நினைவு தியானம்

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 30

காலை 6:30 மணி

– காலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

“கிரியாவைப் பயில்பவர்களுடன் நான் என்றும் இருப்பேன்,” என்று அவர் தன்னருகில் இருக்க முடியாத சீடர்களுக்கு ஆறுதலாகக் கூறுவார். “என்றும் பெருகிவரும் உன் ஆன்மீக உணர்வுகளின் மூலமாக நான் உனக்குப் பிரபஞ்ச வீட்டிற்கு வழி காட்டுவேன்.”

— லாஹிரி மகாசயர், ஒரு யோகியின் சுயசரிதம் இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி

யோகாவதார் அல்லது “யோகத்தின் அவதாரம்” என்று போற்றப்படும் லாஹிரி மகாசயர், இமயமலையில் உள்ள ராணிக்கேத் அருகே மரணமற்ற குருவான மகாவதார பாபாஜியை முதன்முதலில் சந்தித்து, அவரிடமிருந்து புனித கிரியா யோக விஞ்ஞானத்தில் 160 ஆண்டுகளுக்கு முன்பு தீட்சை பெற்றார். பரமஹம்ஸ யோகானந்தர், அவருடைய ஒரு யோகியின் சுயசரிதம் நூல் மூலம் இந்த தெய்வீக அருளாசியை முதன்முதலில் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார், அதில் அவர் கூறினார்: “இந்த மங்களகரமான சம்பவம் லாஹிரி மகாசயருக்கு மட்டும் ஏற்படவில்லை. அது மொத்த மனித குலத்திற்கே ஓர் அதிர்ஷ்ட வேளையாகும்.; தொலைந்து போயிருந்த அல்லது நெடுங்காலமாக மறைந்து போயிருந்த மிக உயர்ந்த யோகக் கலை மறுபடியும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.”

லாஹிரி மகாசயரின் அவதார தினமான (பிறந்த நாள்) செப்டம்பர் 30 அன்று, புனித கிரியா யோக போதனைகளை உலகிற்குக் கொணர்ந்த மகா யோகாவதாரை போற்றும் விதமாக YSS சன்னியாசி ஒருவர் வழிநடத்தும் சிறப்பு ஆன்லைன் தியானத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி தொடக்கப் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கும், அதைத் தொடர்ந்து, உத்வேகமளிக்கும் வாசிப்பு, கீர்த்தனம் மற்றும் தியானம் ஆகியவை இருக்கும். மேலும் பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் நிறைவடையும்.

குறிப்பு: இந்த நிகழ்ச்சி அக்டோபர் 1, புதன்கிழமை, இரவு 10 மணி (IST) வரை பார்க்கக் கிடைக்கும்.

இந்த ஆன்லைன் தியானத்திற்கு கூடுதலாக, இந்த சமயத்தில் YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் திட்டமிடப்பட்டுள்ள நேரில் நினைவு கூரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகிலுள்ள YSS மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.

இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால், எங்கள் வலைத்தளத்திற்குச் சென்று, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம். உங்கள் நன்கொடை பல மனிதநேயப் பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு உதவுவது மட்டுமின்றி, மகா குருவின் மீதான உங்கள் சாசுவத அன்பையும், தளராத பக்தியையும் வெளிப்படுத்துகிறது.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர