இடைவிடாது தியானம் செய். அதனால் நீ விரைவிலேயே உன்னை எல்லாவிதமான துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற சாரமாக உணர்வாய். உடலின் கைதியாக இருந்து கொண்டிருப்பதை நிறுத்து. கிரியா என்னும் ரகசியத் திறவுகோலின் மூலம் பரம்பொருளினுள் தப்பித்துக் கொள்ளக் கற்றுக்கொள்.
— லாஹிரி மகாசயர், ஒரு யோகியின் சுயசரிதம் இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர் நவீன காலத்தில் ஆன்மீக தாகமுள்ள ஆன்மாக்களுக்கு கிரியா யோகத்தின் முன்னோடி ஆவார். உலகெங்கிலும் உள்ள YSS/SRF பக்தர்களால் அவர் யோகாவதார், “யோகத்தின் அவதாரம்” என்று போற்றப்படுகிறார். ஒரு இல்லறவாசியாக இருந்தும், உயர்ந்த ஆன்மீக உணர்தலை அடைந்த அவர் ஒரு மனிதன் தனது லெளகீக கடமைகளை நிறைவேற்றி, அதே சமயம் ஆன்ம-அனுபூதிப் பாதையைப் பின்பற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டினார்.
லாஹிரி மகாசயர் தமது ஸ்தூல சரீரத்தை நீத்து, செப்டம்பர 26, 1895 அன்று மகாசமாதி அடைந்தார். ஒரு முக்தியடைந்த யோகியின் தேகத்திலிந்து உணர்வுபூர்வ இறுதி வெளியேற்றம். இந்த நாளை நினைவுகூரும் விதமாக, செப்டம்பர 26, வெள்ளிக்கிழமை அன்று YSS சன்னியாசி ஒருவரால் ஆன்லைன் தியானம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொடக்க பிரார்த்தனை, உத்வேகமளிக்கும் வாசிப்பு, அதைத் தொடர்ந்து கீர்த்தனம் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெற்றன, மேலும் பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் நிறைவடைந்தது.
இந்த சிறப்பு நாளில் பல்வேறு ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் பக்தர்களுக்கு நேரில் நிகழ்ச்சிகளை நடத்தின.
இந்த சிறப்பு நாளில், நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அதைச் செய்யலாம். உங்கள் தாராளமான பங்களிப்புகள் கிரியா யோக போதனைகளை உண்மையாக நாடுபவர்களுக்குப் பரப்ப உதவுகின்றன.

















