YSS/SRF தலைவரின் இந்திய வருகை — 2025
(நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்)


பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத் நிகழ்வுகளுக்கு மட்டுமே பதிவு தேவை. மேலும் அறிய
சுவாமிஜியின் சுற்றுப்பயண புகைப்படங்களைக் காண, இங்கே கிளிக் செய்யவும்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் இன் மதிப்பிற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, 2025 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் நேபாளத்திற்கு வருகை புரிய திட்டமிட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். ஸ்வாமிஜி இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களுக்கும் (பெங்களூரு, சென்னை, அகமதாபாத், நொய்டா) மற்றும் நேபாளத்தின் காட்மாண்டுவிற்கும் வருகை தர உள்ளார். இவ்விடங்களில் சிறப்பு ஒரு-நாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- பிப்ரவரி 2, ஞாயிற்றுக்கிழமை: பெங்களூரு
- பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை: சென்னை
- பிப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை: அகமதாபாத்
- பிப்ரவரி 27, வியாழக்கிழமை: நொய்டா
- மார்ச் 1, சனிக்கிழமை: காத்மாண்டு
2023 ஆம் ஆண்டில் ஸ்வாமிஜியின் வருகை ஆன்மீக ரீதியில் பலனளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருந்தது என்பதை நாம் அன்புடன் நினைவு கூர்கையில், ஸ்வாமிஜியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகள்
முறையே பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில் ஸ்வாமி சிதானந்தாஜியின் அகமதாபாத் மற்றும் நொய்டா வருகையை ஒட்டிய நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
திட்டமிடப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இந்த நிகழ்வுகளை பின்னரும் கூட பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025
காலை 10:00 மணி - மதியம் 1:00 மணி (IST)
சிறப்பு நீண்ட தியானம்
ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன்
YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, தனது இந்தியப் பயணம் 2025 இன் ஒரு பகுதியாக அகமதாபாத் வருகையின் போது ஒரு சிறப்பு மூன்று மணி நேர தியானம் வழிநடத்துவார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மையமாக உள்ள, தியானத்தின் அமைதி மற்றும் ஆனந்தத்தை உணர இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள YSS/SRF பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஸ்வாமி சிதானந்தஜி வழிகாட்டுவார்.
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025
மாலை 6:30 மணி - 7:30 மணி (IST)
ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களுடன் சத்சங்கம் —
தியானம்: த பாத் டு டிவைன் ப்ளிஸ் அண்ட் அபண்டன்ஸ்
தியானம், அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவு ஆகிய ஆன்மீக புதையல்களைத் திறந்து, இறைப் பேரின்பத்திற்கு ஒரு புனித நுழைவாயிலை வழங்குகிறது, இந்த அபரிமிதத்தை நாம் உணரும்போது, அதன் விளைவுகள் இயற்கையாகவே வெளிப்புறமாக பாய்ந்து, உடல், மன மற்றும் பொருள்சார் செழுமை உட்பட நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் வளப்படுத்துகின்றன.
இந்த ஞான ஒளியூட்டும் உரையில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, இறை அருள் மற்றும் சக்தியின் எல்லையற்ற மூலாதாரத்துடன் தியானம் நம்மை எவ்வாறு இணைத்து, அக இணக்கம், வலிமை மற்றும் பாதுகாப்புக்கு வழிவகுக்கிறது எனபதில் ஆழ்ந்து செல்வார். இறைவனுடன் நமது உள்ளார்ந்த தொடர்பை வளர்த்துக் கொள்வதன் மூலம், ஆன்மீக செல்வங்கள் நம் அக வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல், நமது வெளிப்புற வாழ்க்கையில் சமநிலை, தெளிவு மற்றும் செழுமையாக வெளிப்படுவதையும் நாம் காண்கிறோம்.
வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2025
மாலை 6:30 மணி - 7:30 மணி (IST)
ஸ்வாமி சிதானந்த கிரியுடனான சத்சங்கம் —
தியானம் மூலம் நமது தெய்வீக ஆற்றலை எழுப்புதல்
நம் ஒவ்வொருவரின் அகத்திலும் ஓர் எல்லையற்ற ஆற்றல் உள்ளது, அது உணரப்படுவதற்காகக் காத்திருக்கிறது. தியானம் என்பது இந்த மறைக்கப்பட்ட பொக்கிஷத்தைத் திறந்து, நமது உண்மை ஆன்மாவின் மிக உயர்ந்த வெளிப்பாட்டை நோக்கி நம்மை வழிநடத்தும் திறவுகோலாகும்.
இந்த உரையில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, தியானத்தின் நேர்மையான மற்றும் வழக்கமான உங்கள் பயிற்சி உள்ளார்ந்து இருக்கும் தெய்வீக ஆற்றலை எவ்வாறு எழுப்ப முடியும் என்பதைப் பற்றி ஆழமாக பேசுவார். உடல், மனம் மற்றும் ஆன்மாவை இசைவித்திருப்பதன் மூலம், தியானம் உள்ளார்ந்த மாற்றத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு பாதையாக செயல்படுகிறது, இது ஒரு லட்சியம், அமைதி, மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உங்களுக்கு வல்லமை அளிக்கிறது.
நிகழ்ச்சி விவரங்கள்
பெங்களூரு (பிப்ரவரி 2), சென்னை (பிப்ரவரி 9), மற்றும் அகமதாபாத் (பிப்ரவரி 23) ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில்:
- காலை 10:00 மணி – மதியம் 01:00 மணி — நீண்ட தியானம்
- மதியம் 02:30 – மாலை 03:30 மணி — கீர்த்தனை/வீடியோ நிகழ்ச்சி
- மாலை 04:30 மணி – மாலை 06:00 மணி — தியானம்
- மாலை 06:30 – மாலை 07:30 மணி — மதிப்பிற்குரிய தலைவர் அவர்களின் சொற்பொழிவு
நொய்டா (வியாழக்கிழமை, பிப்ரவரி 27):
- மாலை 04:30 மணி – மாலை 06:00 மணி — தியானம்
- மாலை 06:30 – மாலை 07:30 மணி — மதிப்பிற்குரிய தலைவர் அவர்களின் சொற்பொழிவு
காத்மாண்டு (சனிக்கிழமை, மார்ச் 1):
- மாலை 04:00 – மாலை 05:00 மணி — தியானம்
- மாலை 05:00 – மாலை 06:00 மணி — மதிப்பிற்குரிய தலைவர் அவர்களின் சொற்பொழிவு
நிகழ்வு இடங்களின் முகவரி மற்றும் கூகுள் மேப் இணைப்புகளை கீழே காணலாம்.
பெங்களூரு
த ராயல் செனட்
கேட் எண் 6, பேலஸ் கிரவுண்ட்ஸ்
ஜெயமஹால், பெங்களூரு
கர்நாடகா – 560006
கூகுள் மேப் இணைப்பு – yssi.org/PITblr
சென்னை
ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், 24/13A
தெற்கு அவென்யூ ரோடு, வாசுதேவ நகர்
திருவான்மியூர், சென்னை
தமிழ்நாடு – 600041
கூகுள் மேப் இணைப்பு – yssi.org/PITchn
அகமதாபாத்
கோல்டன் குளோரி ஹால்
கர்னாவதி கிளப், சர்கேஜ் – காந்திநகர் ஹைவே
ஷால்பி மருத்துவமனை எதிரில், ஸ்பிரிங் வேலி
முமத்புரா, அஹ்மதாபாத்
குஜராத் – 380058
கூகுள் மேப் இணைப்பு – yssi.org/PITamdbd
நொய்டா
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – நொய்டா
பரமஹம்ஸ யோகானந்தர் மார்க்
பி-4, செக்டார் 62
நொய்டா – 201307
டிஸ்டிரிக்ட் கௌதம புத்தா நகர், உத்தரபிரதேசம்
கூகுள் மேப் இணைப்பு – yssi.org/PITnoida
காத்மாண்டு
உல்லன்ஸ் பள்ளி, வளாகம் 1 (கூரை உடைய அரங்கம்)
குமால்டர், லலித்பூர்-15
நேபாளம்
கூகுள் மேப் இணைப்பு – yssi.org/PITnepal
பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பதிவு அவசியம். இருப்பினும், நொய்டா மற்றும் காத்மாண்டு நிகழ்ச்சிகளுக்கு இது தேவையில்லை.
பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத்தில், YSS/SRF பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய முடியும், மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், நொய்டா மற்றும் காத்மாண்டு உட்பட அனைத்து இடங்களிலும் மாலை நிகழ்ச்சி, பக்தர்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.
பதிவு இப்போது தொடங்கப்பட்டுவிட்டது!
பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு 1000 ரூபாய். இதில் உணவுக் கட்டணமும் அடங்கும். இருப்பினும், நீங்கள் தங்கும் வசதிகளைப் பெற விரும்பினால், ஒவ்வொரு பக்தரும் எத்தனை நாட்கள் தங்க விரும்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். தங்கும் கட்டணங்கள் பின்வருமாறு:
- அகமதாபாத்: ஒரு இரவுக்கு ஒரு நபருக்கு ₹ 500
- பெங்களூரு: ஒரு இரவுக்கு ஒரு நபருக்கு ₹ 800
- சென்னை: ஒரு இரவுக்கு ஒரு நபருக்கு ₹ 800
பதிவுக் கட்டணம் செலுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், அவ்வாறு செய்ய வரவேற்கிறோம். பதிவு செயல்முறை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:
பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு:
விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யவும்.
YSS உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிவு:
தொலைபேசி எண் (0651) 6655 555 ஐ அழைக்கவும் அல்லது ராஞ்சி ஆசிரம உதவி மையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும் மற்றும் பின்வரும் விவரங்களை வழங்கவும்:
- உங்கள் முழுப் பெயர்
- வயது
- முகவரி
- மின்னஞ்சல்
- தொலைபேசி எண்
- YSS பாடங்கள் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
- நீங்கள் திட்டமிட்டுள்ள வருகை மற்றும் புறப்படும் தேதிகள்
உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பை பயன்படுத்தி தொகையை அனுப்பலாம்.
SRF பக்தர்களுக்கான பதிவு:
ஆர்வமுள்ள SRF பக்தர்கள் YSS உதவி மையத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ளபடி தங்கள் விவரங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க SRF பக்தர்கள் வரவேற்கப்படுவதுடன், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே உணவில் கலந்து கொள்ளலாம் என்றாலும், அருகிலுள்ள எந்தவொரு ஹோட்டலிலும் தங்குமிட ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கவனிக்கவும்:
- வெற்றிகரமாக பதிவு செய்தவுடன், மின்னஞ்சல் அல்லது SMS மூலம் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். அத்தகைய அறிவிப்பை நீங்கள் பெறவில்லை என்றால், தயவுசெய்து YSS ராஞ்சி உதவி மையத்தை தொலைபேசி (0651) 6655 555 அல்லது [email protected] மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
- முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்: பல்வேறு இடங்களில் குறைந்த அளவே தங்குமிட வசதிகள் இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்குமிடம் தேவைப்படும் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும்.
- உங்கள் பதிவு உறுதிப்படுத்தப்பட்டு உங்களால் கலந்து கொள்ள முடியாவிட்டால், பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படாது அல்லது வேறொரு நபருக்கு மாற்றப்படாது.
பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத்தில்
பெங்களூரு, சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறும் ஒரு நாள் நிகழ்ச்சிகளுக்கு, பக்தர்கள் நிகழ்வுக்கு முந்தைய மாலை வந்து நிகழ்ச்சி முடிந்த மறுநாள் காலை வரையும் தங்கலாம். இந்த இடங்களில் தங்குமிட வசதிகளைப் பெற விரும்பினால், பக்தர்கள் தாங்கள் தங்க விரும்பும் நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், கூடுதல் கட்டணங்கள் (மேலே உள்ள பதிவு பிரிவின் கீழ் குறிப்பிட்டுள்ளபடி) இருக்கும்.
நொய்டா மற்றும் காத்மாண்டுவில்
நொய்டா ஆசிரமத்தில் தங்குமிடம் தேவைப்படுபவர்கள், ஆசிரமத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், ஏனெனில் தங்குமிடம் குறைவாக உள்ளது. இதேபோல், நீங்கள் காத்மாண்டுவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால், காத்மாண்டு கேந்திராவை அணுகவும். நொய்டா ஆசிரமம் மற்றும் காத்மாண்டு கேந்திராவுக்கான தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
யோகதா சத்சங்க கிள ஆசிரமம் – நொய்டா
பரமஹம்ஸ யோகானந்தா மார்க்
பி -4, செக்டார் 62
நொய்டா – 201307
டிஸ்ட்ரிக்ட் கௌதம புத்தா நகர், உத்தரபிரதேசம்
தொலைபேசி: 9899811808, 9899811909,
(0120) 2400670, (0120) 2400671
மின்னஞ்சல்: [email protected]
பரமஹம்ஸ யோகானந்த தியான சமாஜ் நேபாளம் (PYDSN) – கோபுண்டோல்
காத்மாண்டு, நேபாளம்
கோபுண்டோல்
தொலைபேசி: (+977) 5452837, (+977) 5423610, (+977) 5420183, (+977) 9851084325, (+977) 9801039667, (+977) 9801009131
மின்னஞ்சல்: [email protected]
கவனிக்கவும்:
- முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில்: பல்வேறு இடங்களில் குறைந்த அளவே தங்குமிட வசதிகள் இருப்பதால், தங்குமிடம் தேவைப்படும் பதிவுகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உறுதிப்படுத்தப்படும்.
- பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியாக பகிரப்பட்ட தங்குமிடம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் தயவுசெய்து அதற்கேற்ப திட்டமிட்டு பேக் செய்து கொள்ளலாம்.
- தங்குமிடம் அல்லது உணவு தொடர்பான சிறப்புத் தேவைகள் உள்ள பக்தர்கள் தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவு மற்றும் தகவல் அறிதலுக்கான தொடர்பு விவரங்கள்
யோகதா சத்சங்க கிளை மடம் – ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834001
ஜார்கண்ட்
தொலைபேசி: (0651) 6655 555
(திங்கள்-சனி, காலை 09:30 – மாலை 04:30)
மின்னஞ்சல்: [email protected]