YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, இந்தியா மற்றும் நேபாளத்திற்கான தனது பயணத்தைத் தொடங்க ஜனவரி 28, 2025 அன்று இந்தியா வந்து பெங்களூருவை அடைந்தார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடன் SRF ஸ்வாமி சரளானந்தாவும் வருகிறார்.
ஸ்வாமிஜி இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களுக்கும் (பெங்களூரு, சென்னை, அகமதாபாத், நொய்டா) மற்றும் நேபாளத்தின் காத்மாண்டுவிற்கும் வருகை தருகிறார். இவ்விடங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி சிறப்பு ஒரு நாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன:
- பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை: பெங்களூரு
- பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை: சென்னை
- பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை: அகமதாபாத்
- பிப்ரவரி 27 வியாழக்கிழமை: நொய்டா
- மார்ச் 1, சனிக்கிழமை: காத்மாண்டு
இந்த நிகழ்வுகளைப் பற்றி மேலும் அறிய மற்றும் பதிவு செய்ய, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.
ஸ்வாமிஜியின் சுற்றுப்பயண புகைப்படங்களை கண்டு மகிழ கீழே உள்ள படங்களில் கிளிக் செய்யங்கள்.
பெங்களூரு நிகழ்வு
பிப்ரவரி 2 அன்று, ஸ்வாமி சிதானந்தாஜி 1,500 க்கும் மேற்பட்ட பக்தர்களையும் நண்பர்களையும் தெய்வீகத் தோழமை உணர்வில் (சத்சங்கம்) சந்தித்து ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் கிரியா யோக போதனைகளின் ஞானத்தைப் பகிர்ந்து கொண்டார். உள்ளார்ந்த மாற்றத்திற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் தியானம் எவ்வாறு ஒரு பாதையாக செயல்பட்டு, ஒரு லட்சியத்துடன், அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ நமக்கு வழிவகுக்கிறது என்பதைப் பற்றி ஊக்கமளிக்கும் விதத்தில் அவர் பேசினார்.
ஸ்வாமி சிதானந்தாஜியின் சத்சங்கம், மூன்று மணி நேர கூட்டு தியானம் மற்றும் கீர்த்தனை அமர்வு உள்ளிட்ட ஒரு நாள் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக இருந்தது.
பெங்களூரு தியான கேந்திராவிற்கு வருகை
ஜனவரி 31 அன்று, நமது அன்புக்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தாஜி, பெங்களூரு, யோகதா சத்சங்க தியான கேந்திராவிற்கு வருகை புரிந்தார், அங்கு அவருக்கு YSS பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதான தியான அரங்கில் உள்ள பீடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, வணங்கிய பின்னர், ஸ்வாமிஜி பக்தர்கள் மத்தியில் உரையாற்றினார். பெங்களூரு கேந்திராவின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த விளக்கக்காட்சியை நீண்டகால தன்னார்வலர்கள், ஸ்வாமிஜி மற்றும் அங்கிருந்த மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், ஸ்வாமிஜி பக்தர்களின் சிறு குழுக்களைச் சந்தித்து, பிரசாதங்கள் விநியோகித்து, ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கினார்.
இந்தியா வருகை
விமான நிலையத்தில் ஸ்வாமிஜியின் வருகை மற்றும் பெங்களூருவில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.