இளம் சாதகர் ஏகாந்த வாச நிகழ்வு: அகத்துள் ஒரு பயணம்

April 22, 2025

ஏகாந்த வாசம் வியக்கத்தக்க வகையில் ஒரு மேம்படுத்தும் அனுபவமாக இருந்தது, இது அமைதியை உணரவும், இறைவன் மற்றும் குருவின் மீதான எனது பக்தியை ஆழப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் எனக்கு உதவியது.

— எம். ஆர்., ஜார்கண்ட்

முதல் முறையாக, இளம் சாதகர்களுக்கென்று குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஏகாந்த வாச நிகழ்ச்சி 2025 மார்ச் 5 முதல் 10 வரை ராஞ்சி யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் நடைபெற்றது. இளம் ஆன்மீக சாதகர்களான YSS பக்தர்கள் மற்றும் 18-35 வயதுடைய கிரியாபன்களுக்கு இது ஒரு ஆழ்ந்த மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் அனுபவமாக காணப்பட்டது. இந்த ஏகாந்த வாச நிகழ்வானது, தியான உத்திகள், உள் பிரதிபலிப்பு, பக்தி, சுய ஒழுக்கம் மற்றும் பிற இளம் பக்தர்களுடனான தோழமை ஆகியவற்றில் கவனம் செலுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதன் மூலம், குருதேவரின் போதனைகளுடனான அவர்களின் தொடர்பை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 

ஸ்வாமிகள் சங்கரானந்தா மற்றும் ஸ்ரேயானந்தா ஆகியோருடன் ஸ்மிருதி மந்திரில் நிகழ்வு பங்கேற்பார்களான இளம் சாதகர்கள்

மார்ச் 7 மற்றும் மார்ச் 9 தேதிகளில் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் மகாசமாதி தினங்களிலேயே இந்த ஏகாந்த வாச நிகழ்வு அமைந்தது, இதை ஒரு புனித சந்தர்ப்பமாக ஆக்கியது. ஆழ்ந்த மற்றும் நீண்ட தியானம், ஆன்மீக சொற்பொழிவுகள், பக்தி செயல்பாடுகள், சேவா மற்றும் ஹண்ட்ரு நீர்வீழ்ச்சிக்கு ஒரு உற்சாகமான வெளிப்புற சுற்றுலா ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் இது சிந்தனையுடன் கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஒரு ரிட்ரீட்டாளர் தனது அனுபவத்தை சுருக்கமாகக் கூறினார்:

YSS ராஞ்சி ஆசிரமத்தில் ஆறு நாள் ஏகாந்த வாச நிகழ்ச்சியானது, தியானம், சுய ஒழுக்கம் மற்றும் குரு சேவை மூலம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஊட்டமளித்தது, இறைவன் மற்றும் குருவுடனான ஆழமான தொடர்பை வலுப்படுத்தாயிருந்தது.

— எஸ். என்., ஜார்க்கண்ட்

அறிமுகப்படுதல் மற்றும் ஆழ்ந்து செல்லுதல்

ஏகாந்த வாச நிகழ்வு அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நிகழ்ச்சியை பற்றிய ஓர் அறிமுகத்துடன் தொடங்கியது, இது அவர்கள் சரியான மனநிலையைப் பெறவும், அவர்களின் இலக்குகளை தெளிவுபடுத்தவும், ஏகாந்த வாசத்திலிருந்து அதிகப் பலன்களைப் பெறவும் உதவியது.

அதைத் தொடர்ந்து ஸ்வாமிகள் சங்கரானந்தா மற்றும் ஸ்ரேயானந்தா ஆகியோர் YSS ராஞ்சி ஆசிரம வளாகத்திற்குள் புனித பயணத்தை மேற்கொண்டனர், அவர்கள் ஆசிரமத்தின் வரலாற்றை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டு, குருதேவரால் புனிதப்படுத்தப்பட்ட பல்வேறு அழகிய இடங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ள உதவினார்கள்.

ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ஆனால் ஆத்மார்த்தமான வழக்கம்

ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டு தியானத்துடன் தொடங்கியது, அதன் பிரதிபலிப்பு மற்றும் அமைதி உணர்வை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆன்மீகப் படிப்பு, மூத்த சன்னியாசிகளுடன் கலந்துரையாடும் சத்சங்க அமர்வுகள் மற்றும் குருஜியின் போதனைகளைப் பற்றிய பங்கேற்பாளர்களின் புரிதலை வலுப்படுத்தும் குழு செயல்பாடுகள் ஆகியவை நடைபெற்றன. பங்கேற்பாளர்கள் ஸ்மிருதி மந்திர், லிச்சி வேதி அல்லது குருஜியின் அறையில் மதிய தியானத்திற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர். பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் மற்றும் ஜபா வாக் போன்ற லேசான பொழுதுபோக்கு நடவடிக்கைகள், மாலைகளை உற்சாகப்படுத்தி, உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வின் முழுமையான அனுபவத்தை உறுதி செய்தன.

பங்கேற்பாளர்கள் ஸ்மிருதி மந்திர் மற்றும் லிச்சி வேதி இல் தியானம் செய்கிறார்கள்

கவனச்சிதறல் நிறைந்த உலகில் கவனம் செலுத்துதல்

“கவனச்சிதறல் நிறைந்த உலகில் கவனம் செலுத்துதல்” என்ற தலைப்பில் மாத்ரி மந்திரில் ஸ்வாமி நிர்மலானந்தா நடத்திய சத்சங்கம் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. சுய ஆய்வுப் பயிற்சிகள் மூலம், பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்கள், அதிகப்படியான திரை நேரம் மற்றும் அமைதியற்ற எண்ணங்கள் ஆகிய பொதுவான கவனச்சிதறல்களை அடையாளம் கண்டனர். ஏகாந்த வாசத்தின்போது தொலைபேசி பயன்பாட்டை உணர்வுபூர்வமாகக் கட்டுப்படுத்த அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், இது தியானம் மற்றும் சுய விழிப்புணர்வில் ஆழந்து செல்ல உதவியது. ஹாங்-ஸா உத்தி தங்கள் அன்றாட வாழ்க்கையில் கவனம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்த எவ்வாறு உதவியது என்பதை பல இளம் சாதகர்கள் பகிர்ந்து கொண்டனர்.

குருசேவை: செயல்வடிவமாக அன்பு

“அன்பு மட்டுமே என் இடத்தைப் பிடிக்க முடியும்” என்ற குருஜியின் வார்த்தைகளிலிருந்து உத்வேகம் பெற்று, “செயல்வடிவமாக அன்பு – குரு சேவையின் அருளாசிகள்” என்ற தலைப்பில் ஒரு எப்படி-வாழ-வேண்டும் பயிலரங்கு நடத்தப்பட்டது, இதில் தன்னலமற்ற சேவை இறைவன் மற்றும் குருவுடனான ஒருவரின் தொடர்பை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது குறித்த குழு விவாதம் இடம்பெற்றது. கலந்துரையாடலைத் தொடர்ந்து ஷ்ரவணாலய அரங்கிலும் ஆசிரம தோட்டங்களிலும் சேவை செய்வதன் மூலம் அன்பை செயல்படுத்துவதற்கான நடைமுறை அமர்வு நடைபெற்றது.

குருமார்களை போற்றுதல்: மகாசமாதி நினைவு தினம்

குருதேவர் மற்றும் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்ஜி ஆகியோரின் மகாசமாதி நாட்கள் (மார்ச் 7 மற்றும் 9) நீண்ட தியானங்கள், பக்திபூர்வமாக இசைத்தல், புஷ்பாஞ்சலி, கதைகள் பகிர்தல் மற்றும் தியானம் மற்றும் சேவையை ஆழப்படுத்துவது குறித்து சன்னியாசிகளுடன் கேள்வி பதில் அமர்வுகள் ஆகியவற்றுடன் அனுசரிக்கப்பட்டன. இந்த அமர்வுகள் இளம் சாதகர்களுக்கு தியான உத்திகள், தனிப்பட்ட சவால்கள் மற்றும் குரு-சிஷ்ய உறவு குறித்த வழிகாட்டுதலைப் பெற ஒரு வாய்ப்பை வழங்கின. ஸ்வாமி ஸ்ரேயானந்தாவின், “குரு-சிஷ்ய உறவு இந்த உலகில் உள்ள மற்ற உறவுகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்ந்த உறவாகும், ஏனெனில் இது தூய்மையான, நிபந்தனையற்ற, தன்னலமற்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது” என்ற செய்தி இளம் சாதகர்களிடம் எதிரொலித்தது.

ஸ்வாமி நிர்வாணானந்தா இளம் சாதகர்களை தனிமுறையான சத்சங்கத்திற்காக சந்திக்கிறார்.

ஹுண்ட்ரு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா: இயற்கைச் சூழலில் ஒரு ஆன்மீக ஏகாந்த வாசம்

குருஜி சில சமயங்களில் தனது சீடர்களை சுற்றுலா அழைத்துச் செல்வார். அதேவிதமாய், இளம் சாதகர்களுக்காக ஹுண்ட்ரு நீர்வீழ்ச்சிக்கு ஒரு நாள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. நீர்வீழ்ச்சியை அடைந்ததும், கலந்து கொண்டவர்கள் அனைவரும் கூட்டு தியானம், விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் சாந்தமான சூழலுக்கு மத்தியில் அமைதியாக சில மணித்துளிகள் சுயஆய்வு ஆகியவற்றில் ஈடுபட்டனர். ஆசிரமத்திற்குத் திரும்பிய பிறகு, குருஜியின் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக சாதகர்கள் கூடினர்.

ஒரு மகிழ்ச்சியான நிறைவு

இறுதி நாளில், “வீட்டிற்கு எடுத்து செல்வதற்கான சிந்தனைகள்” என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெற்றது, இது ஏகாந்த வாச கற்றல்களை முழுமையாக அன்றாட வாழ்க்கை முறையாக்குவது குறித்த நடைமுறை வழிகாட்டுதல்களை வழங்கியது. பங்கேற்பாளர்கள் தெளிவு, பக்தி மற்றும் அக வலிமையின் புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன் விடைபெற்றனர்.

பலர் ஏகாந்த வாச நிகழ்வுக்கு நன்றி தெரிவித்தனர், ஒரு பங்கேற்பாளர் அனுபவத்தை அருமையாக சுருக்கமாக இவ்வாறு கூறினார்:

நட்சத்திரங்கள் நிறைந்த இரவுநேர மற்றும் சூரிய உதயகால தியானங்கள் மூலம், கீதங்கள், பிரார்த்தனைகள், சங்கல்பங்கள் ஆகியவற்றின் நிலையான ஒரு ரீங்காரம் எங்கள் இதயங்களை நிரப்பியது. மௌனத்திலும் கூட, ஒருவருக்கொருவரிடமிருந்து பரவும் அன்பில் நாங்கள் மூழ்கினோம். இந்த ஏகாந்த வாசம் கவனம், பக்தி மற்றும் சுய ஒழுக்கத்துடன் வாழ்க்கையை வழிநடத்துவதற்கான கருவிகளை அளித்துள்ளது.

— கே. ஏ., சண்டிகர்

இளம் சாதகர் ஏகாந்த வாச நிகழ்வு ஒரு உண்மையான இன்பந்தரும் நிகழ்வாக இருந்தது — இது ஒரு புனித இடைவெளி, ஆன்மாவுடன் மீண்டும் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைதிக்கான பாதை அகத்துள் இருப்பதை நினைவூட்டுவதாகவும் இருந்தது.

para-ornament

YSS இளையோர் சேவைகள் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்.

இதைப் பகிர