மகாவதார பாபாஜி குகை – துவாரஹாத்

உத்தரகண்ட்
மகாவதார பாபாஜி குகை

பொறுமையுடன் மாதம் மாதமாக, வருடம் வருடமாக உன்னைக் கண்காணித்துக் கொண்டு இந்த நிறைவான நாளுக்காகக் காத்திருந்தேன். இப்பொழுது நீ என்னுடன் இருக்கிறாய்! நீ பழைய நாட்களில் விரும்பி வசித்த குகை இதோ; நான் உனக்காக அதை எப்பொழுதும் சுத்தமாகவும் தயாராகவும் வைத்திருக்கிறேன்.

— ஒரு யோகியின் சுயசரிதத்தில் லாஹிரி மகாசயரிடம் மகாவதார பாபாஜி

1861 ஆம் ஆண்டில், இமயமலை குமாவோன் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில்மிக்க துனாகிரி மலைத்தொடரின் மடியில் உள்ள ஒரு சிறிய குகையில், நவீன யுகத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் தெய்வீக நிகழ்வு ஒன்று நடைபெற்றது. மகத்தான மரணமற்ற யோகியும் அமரத்துவ குருவுமான மகாவதார பாபாஜி, இந்தப் புனிதக் குகையில் தனது உன்னத சீடரான லாஹிரி மகாசயருக்கு, பண்டைய கிரியா யோக விஞ்ஞானத்தில் தீட்சை வழங்கினார். மனித உணர்வுநிலையை மேம்படுத்தும் நோக்கில், ஆன்ம அனுபூதிக்கான காலத்தால் அழியாத தொன்மையான ஒரு உத்தியை மீண்டும் உயிர்ப்பித்தார்.

மகாவதார பாபாஜி குகை
மகாவதார பாபாஜி குகை

மகாவதார் பாபாஜி மற்றும் லாஹிரி மகாசயரின் அருளாசிகள் இன்றும் இந்தப் புனிதக் குகையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊடுருவியுள்ளன. அனைத்து கிரியா யோகிகளும் தங்கள் பரம்பரையை இந்த நிகழ்விலிருந்தே தொடங்குவதாகக் கருதுகின்றனர்.

உண்மை நாடுபவர்களுக்கான புனித யாத்திரைத் தலம்

மகாவதார பாபாஜி குகை அமைந்துள்ள புனிதத் தலம், உலகம் முழுவதிலுமுள்ள மெய்ப்பொருள் தேடுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.

இக்குகையின் அருகில், மகாவதார பாபாஜியைப் போற்றும் வகையில் YSS ஸ்மிருதி பவன் என்று அழைக்கப்படுகிற ஒரு சிறிய ஆலயத்தை அமைத்துள்ளது. இந்தப் புனித தலத்திற்கு வரும் பக்தர்கள், அவரை நினைவுகூர்வதற்கும் தியானிப்பதற்குமான இடமாகச் செயல்படுகிறது.

பல வருகையாளர்களுக்கு, இத்தகைய புனிதப் பயணங்கள் மகாவதார பாபாஜியைப் பற்றியும், கிரியா யோகம் எனும் பண்டைய விஞ்ஞானத்தைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன. அதன் நவீன மறுமலர்ச்சி மற்றும் உலகளாவிய பரவல் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் YSS/SRF குரு பரம்பரை மூலமாக இந்த மகா குருவால் வழிநடத்தப்பட்டது.

முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்களின் வருகை

நமது அன்பிற்குரிய குருதேவரின் ஒரு யோகியின் சுயசரிதம் வாயிலாகவும், இன்டர்நெட் மற்றும் ஆன்லைன் ஊடகங்களினாலும் அதிகமானோர் மகாவதார பாபாஜியைப் பற்றி அறிந்துகொண்டு வருவதால், இந்த பெரும் அமரத்துவ ஞானியின் அருளாசிகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட ஏராளமான யாத்ரீகர்கள் – சில சமயங்களில் பேருந்துகளில் வந்து இறங்குவோர் – இந்தப் புனிதத் தலத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கின்றனர்.

வருகைக்குத் திட்டமிடுங்கள்

இமயமலைப் பருவ காலங்கள மற்றும் வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, மகாவதார பாபாஜி குகை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்களுக்காகத் திறந்து வைக்கப்படுகிறது.

  • கோடைக்கால நேரங்கள் (மார்ச்–செப்டம்பர்): காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
  • குளிர்கால நேரங்கள் (அக்டோபர்–பிப்ரவரி): காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை


பாபாஜி குகைக்கான உங்கள் வருகையை YSS. துவாரஹாத் ஆசிரமத்தில் தங்குதலுடன் இணைத்துக் கொள்ளுங்கள்Visit Mahavatar Babaji's Cave - Stay at YSS Dwarahat Ashram

YSS/SRF பாட மாணவர்கள், மகாவதார பாபாஜி குகைக்கான தங்கள் புனித பயணத்தை YSS துவாரஹாத் ஆசிரமத்தில் தங்குவது அல்லது அங்கு சென்று வருவதுடன் இணைத்துக் கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

துவாரஹாத்திலிருந்து சுமார் 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஆசிரமம், பக்தர்களுக்கு அமைதியான ஆன்மீகத் தளமாக விளங்குகிறது. பயண நேரங்கள், வழித்தடத் திட்டமிடல் மற்றும் பொதுவான முன்னேற்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம், பாதுகாப்பு, பக்தி மற்றும் விழிப்புணர்வுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்ள உதவுகிறது, பலருக்கு, ஆசிரம அனுபவம் புனித யாத்திரையை மேலும் ஆழமானதாக மாற்றுகிறது — மலை ஏறுவதற்கு முன்பு உள்முகப்படவும் திரும்பி வந்த பிறகு அங்குள்ள ஆன்மீக அதிர்வுகளை அமைதியாக உள்வாங்கிக் கொள்ளவும் ஓர் இடத்தை வழங்குகிறது.

எங்களைத் தொடர்புகொள்ள

மகாவதார பாபாஜி குகை – துவாரஹாத்
Pandukholi Mountain
Near Kukuchina Village
Dwarahat - 263653
Almora
Uttarakhand
India

சென்றடைவது எப்படி

பாபாஜி குகை சுமார் 2,000 மீட்டர் (6,500 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த புனித இடத்திற்குப் பயணிக்கும் பெரும்பாலான யாத்ரீகர்களுக்கும், ஆன்மீகம் நாடி வருவோருக்கும் உத்தராகண்ட், துவாரஹாத், முதன்மை நுழைவாயிலாகச் செயல்படுகிறது. (துவாரஹாத்தை அடைவது எப்படி)

துவாரஹாத்திலிருந்து பாண்டுகோலி மலையில் உள்ள பாபாஜியின் குகைக்குச் செல்லும் பயணம், குக்குச்சினா கிராமம் வரையிலான சுமார் 25 கி.மீ சாலைப் பயணத்துடன் தொடங்குகிறது. அங்கிருந்து, அருகிலுள்ள ரத்கால் கிராமத்தை நோக்கிச் செல்லும் பாதை, பாபாஜியின் குகைக்கான நடைபாதை தொடங்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

இந்த நடைபாதை, மண் மற்றும் பாறைகளால் ஆன, சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள நன்கு அமைக்கப்பட்ட மலைப்பாதையாகும். இதில் சில செங்குத்தான பகுதிகள் இருப்பதால், தேவைக்கேற்ப அடிக்கடி ஓய்வெடுத்துக்கொண்டு கவனமாக ஏற வேண்டும். ஓரளவு நல்ல உடல் தகுதி கொண்ட ஒருவருக்கு இந்த மலையேற்றம் பொதுவாக 45–60 நிமிடங்கள் ஆகும்.

துவாரஹாத்திலிருந்து பாபாஜி குகை அமைந்துள்ள மலைப் பாதையின் அடிவாரம் வரை செல்ல தனியார் டாக்ஸி வசதி உள்ளது. பயணம், மலையேற்றப் பயணம் மற்றும் குகையில் செலவிடும் குறுகிய நேரம் உட்பட துவாரஹாத்திலிருந்து பாபாஜி குகைக்குச் சென்று திரும்புவதற்கு சுமார் ஆறு மணிநேரம் ஆகும். பயணிகள் குடிநீர் மற்றும் மதிய உணவை உடன் எடுத்துச் செல்லுமாறும், உறுதியான நடைப்பயண காலணிகளை அணியுமாறும், குளிருக்கு ஏற்றவாறு தகுந்த ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மற்றொரு வழியாக, ராணிகேத் நகரத்திலிருந்து துவாரஹாத் வழியாக (55 கி.மீ.) பாபாஜியின் குகைக்கு நேரடிப் பயணத்திற்கு ஒரு திசைக்கு சுமார் 2 மணி நேரம் ஆகும், மேலும் முழுப் பயணத்திற்கும் சுமார் 8-9 மணி நேரம் ஆகலாம்.

இதைப் பகிர