யோகதா சத்சங்க சாதனாலயா திறப்பு – ராஜமுந்திரி​

27 செப்டம்பர், 2024

ஆந்திர பிரதேசம், ராஜமுந்திரி இல் யோகதா சத்சங்க புதிய சாதனாலயாவின் துவக்க நிகழ்ச்சி 2024 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்றது. 1.35 ஏக்கர் பரப்பளவில், ஒருபுறம் புனித கோதாவரி நதியாலும், மறுபுறம் அதன் நீர்ப்பாசன கால்வாயாலும் சூழப்பட்ட பசுமையான தீவில் சாதனாலயா அமைந்துள்ளது. (கீழே: ட்ரோன் காட்சிபடத்தில் இருபுறமும் நதி சூழ, நீல நிறத்தில் வளாகம் குறிக்கப்பட்டடுள்ளது)  

திறப்பு நாளான ஆகஸ்ட் 24, 2024 அன்று, ஸ்வாமி ஸ்மரணானந்தா, ஸ்வாமி பிரஜ்ஞானந்தா மற்றும் ஸ்வாமி சங்கரானந்தா ஆகியோர் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மாலையிடப்பட்ட படத்தை ஏந்தி, “ஜெய் குரு” உச்சாடனத்துடன் வரும் பக்தர் ஊர்வலத்துடன் புனித வளாகத்திற்குள் நுழைந்தனர். 

கோதாவரி நதி மற்றும் கோதாவரி நீர்ப்பாசன கால்வாய் சூழ்ந்த ஒரு தீவில், தாவரப் பண்ணைகளால் சூழப்பட்ட 1.35 ஏக்கர் பரப்பளவு நிலம்
(இடது) 32 அறைகள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட குடியிருப்புக் கட்டிடம், (நடுவில்) தனித்தனி குடில்கள், மற்றும் (வலது) தங்குமிடக் கட்டிடம்

இது மூன்று நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. இந்நிகழ்வில் உத்வேகம் அளிக்கும் சொற்பொழிவுகள், தினசரி கூட்டாக இணைந்து செய்யும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம், YSS தியான உத்தி மறுஆய்வு வகுப்புகள், பக்தர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கீர்த்தனையுடன் ஆறு மணி நேர தியானம் ஆகியவை இருந்தன. ஆகஸ்ட் 26, 2024 திங்கட்கிழமை அன்று ஜன்மாஷ்டமி மகிழ்ச்சியான கொண்டாட்டத்துடனான நினைவு தின நிகழ்ச்சியுடன் இந்நிகழ்வு முடிவடைந்தது. சுமார் 450 பக்தர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பதிவு செய்தனர். மொத்தத்தில், சுமார் 550 பேர் இந்த சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். 

திறப்பு நிகழ்ச்சி: “ஜெய் குரு” உச்சாடனத்தின் மத்தியில் குருதேவரின் படத்துடன் வளாகத்திற்குள் நுழைதல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர எழுச்சியூட்டும் சொற்பொழிவாற்றுகிறார்.

சாதகர்கள் சமூகம்

ராஜமுந்திரி சாதனாலயாவில் சாதகர்கள் சமூகம் உருவாக்கப்படுகிறது. சாதகர்கள் ஒன்றாக தியானம் செய்து சேவை செய்வார்கள், மேலும் அவ்வப்போது வருகை தரும் YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலின் கீழ் பொது பராமரிப்பை கவனித்துக்கொள்வார்கள். தினசரி வழக்கமான, அன்றாட இருமுறை சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம், மதிய தியானத்திற்கு முன் YSS பாடங்கள் படித்தல், அமைதியாக உணவு உட்கொள்ளும் மூன்று முறைகள் ஆகிய சமயங்களில் ஏகாந்தவாச வாசிப்பிடவாசிகள் ஒன்று கூடுகின்றனர்.  

உடற்பயிற்சிக்காக அருகிலேயே நடைபாதைகள் உள்ளன. பக்தர்கள் தங்குவதற்கு குளியலறை இணைக்கப்பட்ட 32 அறைகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. இது தனிப்பட்ட சாதகர்கள் மற்றும் தம்பதிகளுக்கான ஒற்றை மற்றும் இரட்டை அறைகளைக் கொண்டுள்ளது. இந்த கட்டிடம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய படுக்கைகள், மெத்தைகள், கதவுகள், ஜன்னல்கள் மற்றும் குளியலறை சாதனங்கள் பொருத்தப்பட்டதாய் உள்ளது. பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் மின்சாரம் வழங்குவதற்கான பேக்அப் ஜெனரேட்டர் உள்ளது. ரிட்ரீட் வளாகத்தில் மா, தென்னை போன்ற பல மரங்கள் உள்ளன — அவற்றில் சில 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்டவை. 

சாதனாலயத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பரமஹம்ஸ யோகானந்தா நேத்ராலயா (கண் மருத்துவமனை) உள்ளது. இது YSS பக்தர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. வழக்கமான கண் சிகிச்சை முகாம்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர சிகிச்சைகள் மூலம் கிராமப்புற ஏழை மக்களுக்கு உன்னதமான சேவைகளை வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கானோர் இந்த சேவையால் பயனடைந்துள்ளனர். 

புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடம்.

முன்பதிவு

ஒத்த எண்ணம் கொண்ட சாதகர்களுடன் ஆசிரம சூழலில் தங்க விரும்புவோர் சாதனாலயத்தில் முன்பதிவு செய்யலாம். நீங்கள் வார இறுதி அல்லது ஒரு வார குறுகிய காலம் தங்க வரலாம்; அல்லது ஒரு மாதம் அல்லது பல மாதங்கள் கொண்ட நீண்ட தங்குதலுக்கும் வரலாம்.  

முன்பதிவு செய்ய, தொடர்பு கொள்ளவும்: 
தொலைபேசி: 93922 85867 
மின்னஞ்சல்: [email protected] 

முகவரி 
யோகதா சத்சங்க சாதனாலயா — ராஜமுந்திரி 
டைரக்டரேட் ஆஃப் ஃப்ளோரிகல்சர் ரிசர்ச் அருகில் 
காட்டன் கெஸ்ட் ஹவுஸ் அருகில், தௌலேஸ்வரம் 
வேமகிரி காட்டு, வேமகிரி  
ராஜமுந்திரி 533125 
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 

ராஜமுந்திரி ரயில் நிலையம் 4 கி.மீ. தொலைவிலும், விமான நிலையம் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் கிடைக்கின்றன. 

நன்கொடைகள்

சாதனாலயா அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது மற்றும் காலப்போக்கில் பல மேம்பாடுகள் தேவைப்படும். தற்போதைய செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் உங்கள் நிதி ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். நன்கொடைகளை ஆன்லைனில் செய்யலாம் (‘கேந்திரா ஃபண்ட்,’ பின்னர் ‘ராஜமுந்திரி ரிட்ரீட்’ என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்), அல்லது “ஃபார் ராஜமுந்திரி ரிட்ரீட்” என குறிப்பிட்டு YSS ராஞ்சிக்கு காசோலை மூலம் அனுப்பலாம். 

இதைப் பகிர