YSS

நினைவேந்தல் — ஸ்வாமி சிவானந்த கிரி (1936-2022)

22 ஜனவரி, 2022

யோகதா சத்சங்க சொஸைடிஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி யான நமது அன்புக்குரிய ஸ்வாமி சிவானந்த கிரி, ஜனவரி 18, 2022 அன்று, காலை சுமார் 6 மணி அளவில் தூக்கத்தில் அமைதியாக உயிர் துறந்தார்.

மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தின் ஹல்லுங், குலாபாஹல் என்ற தொலைதூர கிராமத்தில் ஸ்ரீ துர்கா சரண் மஹதோ என்ற இயற்பெயருடன் செப்டம்பர் 20, 1936 அன்று பிறந்த ஸ்வாமி சிவானந்த கிரி ஒரு எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்.

உள்ளார்ந்த ஆன்மீக மனநிலையைப் பெற்றிருந்த  ஸ்வாமிஜி, லகன்பூரில் உள்ள யோகதா சத்சங்க க்ஷிரோதமோயி வித்யாபீடத்தின் மாணவராக மிக இளம் வயதிலேயே ஆன்மீக வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நமது அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் உன்னதமான, வாழ்க்கையை உருமாற்றும் கிரியா யோக போதனைகளில் அவர் ஆழ்ந்து ஈடுபட்டார்.

1962 இல், அவர் தனது 26 வயதில் ஓர் ஒய் எஸ் எஸ் சன்னியாசியாக ஆன்மீகப் பாதையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள முடிவு செய்தார். அவர் 1968 பிப்ரவரி 3,  அன்று தனது பிரம்மச்சரிய சபதங்களையும், 1972  டிசம்பர் 14, அன்று தனது சன்னியாச சபதங்களையும், ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -இன் மூன்றாவது தலைவரும் சங்கமாதாவுமான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவிடமிருந்து பெற்றார்.

அவர் எப்பொழுதும் முன்மாதிரியான பணிவு மற்றும் எளிமையை வெளிப்படுத்தினார், மேலும் கலக்கமற்ற  சமநிலையுடன் சிரமங்களை எதிர்கொண்டார். அவரது வாழ்வின் பிந்தைய ஆண்டுகளில், அவருக்கு உடல்நல சவால்கள் இருந்தாலும், அவர் குறிப்பிடத்தக்க துணிவையும் ஆற்றலையும் காட்டினார்.

ஸ்வாமி சிவானந்த கிரி குலபாஹலில் ஆசிரியராகவும், பின்னர் லகன்பூர் தொடக்கப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார், இவை யோகதா சத்சங்க கல்வி நிறுவனங்களின் (ஒய் எஸ் எஸ்) ஒரு பகுதியாகும். 37 ஆண்டுகளாக யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ்)-வின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களின் குழுவின் பகுதி. அவரது முந்தைய சகாக்கள் சிலர் நினைவுகூர்ந்தபடி ஸ்வாமி சிவானந்த கிரி தனது மாணவர்கள் ஒழுக்கப் பாதையிலிருந்து விலகிச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக அவர்களிடம் கண்டிப்புடன் இருந்தார். அவர் விளையாட்டுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

குலாபாஹலின் தொலைதூர மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகத்தின் தாழ்த்தப்பட்டட பிரிவினர் படிப்படியாக முன்னேறி தேசிய நீரோட்டத்தில் சேருவதற்காக அவர்களிடையே அடிப்படைக்கல்வியைப் பரப்புவதில் ஸ்வாமி சிவானந்த கிரி முக்கிய பங்கு வகித்தார். மிகுந்த பொறுமையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும், ஸ்வாமிஜி, ஹல்லுங், ஹதிபாரி, குலாபாஹல் ஆகிய இடங்களில் சமூகத்தின் கீழ்மட்ட மற்றும் நடுத்தரப் பிரிவினர் அடிப்படைக் கல்வியை  இழக்காமல் இருப்பதை உறுதி செய்தார்.

ஸ்வாமிஜி தனது வாழ்வின் ஆரம்பத்திலேயே ஹத யோகப் பயிற்சியின் மீது ஈர்க்கப்பட்டார். அவரால் பல கடினமான ஆசனங்களைச் செய்ய முடிந்தது. அவர் இயற்கையை நேசிப்பவர் மற்றும் ஆர்வமுள்ள தோட்டக்காரராகவும் இருந்தார். பிற்பகல் தோட்ட வேலையை முடித்த பிறகு, ஸ்வாமிஜி எப்போதாவது ஆசிரமப் பணியாளர்களையும்  ஊழியர்களையும் லகன்பூரில் உள்ள தியான மந்திருக்கு அழைத்து, நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான அடிப்படை ஹத யோக ஆசனநிலைகளைக் கற்பிப்பார்.

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தர் அளித்த கிரியா யோகப் பயிற்சியில் ஸ்வாமிஜி தனது கடைசி நாள் வரை நேர்மையானவராகவும்,, விசுவாசமானவராகவும், முறைதவறாதவராகவும் இருந்தார். அவர் ஒரு முன்மாதிரியான சன்னியாச வாழ்க்கையை வாழ்ந்தார் மற்றும் மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் லகன்பூரில் உள்ள ஒய் எஸ் எஸ் துணை கேந்திரா, குலாபாஹல் மற்றும் ஒய் எஸ் எஸ் கிளை ஆசிரமம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-விற்கு சேவையாற்றினார்.

ஸ்வாமி சிவானந்த கிரியின்  மகிழ்ச்சியான  மற்றும் எளிமையான இயல்பிற்காக எப்போதும் நினைவுகூரப்படுவார். முழுமையான ஆன்ம அனுபூதி என்ற இறுதி இலக்கை நோக்கி அவர் தனது பயணத்தைத் தொடரும் போது, நாம் அனைவரும் அவருக்கு நமது அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்புவோம்.

இதைப் பகிர