என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய், எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய்.
— பகவத் கீதை: காட் டாக்ஸ் வித் அர்ஜுனா
அன்பர்களே,
இந்தப் புனித ஜன்மாஷ்டமி சமயத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இறைவனின் எல்லையற்ற அன்பு, ஞானம், சக்தி மற்றும் அழகின் தெய்வீகத் தூதுவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினத்தைக் கொண்டாடுவதில் உங்களுடனும், உலகெங்கிலும் உள்ள பல பக்தர்களுடன் நான் இணைந்து கொள்கிறேன். அவன் ஒரு அரசனாகவும் ஒரு யோகியாகவும் வாழ்ந்து, தன் வாழ்க்கையின் எடுத்துக்காட்டின் மூலமும் பகவத் கீதையின் ராஜ யோகத்தின் மூலமும், நாம் நமது பூமிக்குரிய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே இறை-உணர்வுநிலையை வெளிப்படுத்துவது சாத்தியம் என்பதை நிரூபிக்கிறான்.
நமது குரு, பரமஹம்ஸ யோகானந்தர் அவர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணரால் கீதையில் போற்றப்பட்ட அதே சுய-வல்லமை விஞ்ஞான யோகத்தின் சாராம்சத்தை YSS/SRF பாடங்களில் மிகவும் விரிவாக வெளிப்படுத்தியமைக்கு நாம் எத்துணை பேறுபெற்றவர்கள்! கிரியா யோக தியான உத்திகளின் பக்தியுடனான பயிற்சியானது, நம்மை, தனது பலவீனங்களுடனும், தன்னை கட்டுப்படுத்தும் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகளுடனும் கூடிய சரீரமும் அல்ல, மனமும் அல்ல, ஆனால் பரம்பொருளின் பிரதிபலிப்பான அமரத்துவ ஆன்மா என்பதை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள அனுமதிக்கிறது. தினசரி தியானம் மற்றும் தார்மீகச் செயல்பாடு மூலம், இறைவனின் பெருங்கருணையாலும் அருளாசிகளாலும் அனைத்துத் தடைகளையும் கடந்து, நாம் ஆன்ம-உணர்வுநிலையின் அரசத் தன்மையில் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல, வாழலாம்.
இந்த ஆன்மீகத் தேடலில் பரம்பொருள் நம்மைத் தனியே விடவில்லை, ஆனால் ஒரு சாசுவத நண்பனாக அன்புடன் நம் அருகில் இருக்கிறான்: மாயையின் புயல்களின் போது நம்மைப் பாதுகாத்து, வாழ்க்கைப் போர்க்களத்தில் ஒரு விவேகமான தேரோட்டியாக நம்மை வழிநடத்தி, பிரபஞ்சக் கனவு-நாடகத்தில் நமது அன்புக்குரிய துணையாக நம்மோடு ஆனந்தமாக நடனமாடியும் வருகிறான். ஸ்ரீ கிருஷ்ணரின் பல நாமங்கள், மாயையின் பந்தங்களில் இருந்து நம்மை விடுவிக்க, குறிப்பாக நமது தெய்வீகத் தேடலை பக்தியால் நிரப்பும்போது, இறைவன் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க முடியும் என்பதைக் காட்டுகிறது,
உலகில் தியானத்தையும் நற்செயல்களையும் உள்ளடக்கிய தங்க நடுப்பாதையில் பயணிக்கும் அனைத்து ஆன்மீக சாதகர்களுக்கும் பகவான் கிருஷ்ணரின் வெற்றி மற்றும் தனிப்பட்ட உதவிக்கான வாக்குறுதி, நமது பரந்த ஆன்ம திறன்களைக் கண்டறிய புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் நம்மை வலுப்படுத்தட்டுமாக! அப்போது, நாம் இந்த உலகில் பலவீனமான மனிதர்களாக அல்லாமல், பரம்பொருளின் ஞான-பாடலின் பிரகாசிக்கும் கருவிகளாக வாழ்ந்து, அனைவருக்கும் தெய்வீக அன்பையும் ஆனந்தத்தையும் பரப்பலாம்.
உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் மிகவும் அருளப்பெற்ற ஜன்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!
ஸ்வாமி சிதானந்த கிரி