யோகதா சத்சங்க மகாவித்யாலயா – ராஞ்சி மாணவர்கள் போர்ட் தேர்வுகளில் சிறந்து விளங்குகின்றனர்

13 ஆகஸ்ட், 2025

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதநேய கொள்கைகளால் வழிநடத்தப்படும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்கள், நலிவுற்ற பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு கல்விசார் சிறப்பையும் நற்பண்பையும் வளர்த்தெடுக்கும் கல்வியை வழங்குவதன் மூலம் சேவையாற்ற கடுமுயற்சி செய்கின்றன.

சமீபத்திய போர்ட் தேர்வுகளில் ராஞ்சி யோகதா சத்சங்க மகாவித்யாலயாவின் இன்டர்மீடியட் பிரிவு (10+2) மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் மாணவர்கள் பாராட்டத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தி, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

_DSC0527
மகாவித்யாலயா நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சாதனை மாணவர்கள்.
  • குமாரி. முஸ்கான் குமாரி (வணிகவியல்) ராஞ்சியில் முதலிடத்தையும், மாநில தகுதிப் பட்டியலில் 94.2% மதிப்பெண்களுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றார். அவர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்; நிதி நெருக்கடிகளை அமைதியான ஒழுக்கத்துடனும், அசைக்க முடியாத மன உறுதியுடனும் விடாமுயற்சியுடன் எதிர்கொண்டார். அவரது வெற்றி, உள்ளூர் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது, ஒருமுகப்பட்ட முயற்சியின் ஆற்றலுக்கு ஒரு சான்றாகும். ராஞ்சியின் துணை ஆணையர், ஸ்ரீ மஞ்சுநாத் பஜந்த்ரி அவர்களால் அவர் விரைவில் கௌரவிக்கப்படுவார்.
  • குமாரி காவ்யா கெளஷிகி (வணிகவியல்) 93.2% மதிப்பெண்களுடன் ராஞ்சியில் மூன்றாம் இடத்தையும், மாநிலத்தில் ஏழாம் இடத்தையும் பெற்று, தொடர்ச்சியான கடின உழைப்பின் பலன்களுக்குச் சான்றாகத் திகழ்ந்தார்.

முதலிடம் பெற்ற மாணவர்களை ஸ்வாமி நிஸ்சலானந்தா பாராட்டுகிறார்.

இந்தச் சாதனைகள் எங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டுதல், எங்கள் நிறுவனங்களில் உள்ள ஆதரவான கற்றல் சூழல், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, குருதேவரின் அன்பு மற்றும் அருளாசிகளின் விளைவாகும். தகுதிப் பட்டியலில் இடம்பிடித்த எங்கள் அனைத்து மாணவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நற்பண்பு, சேவை மற்றும் ஆன்மீக மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட கல்வியின் நோக்கத்தை முன்னெடுப்பதில் அயராத சேவை செய்த பணியாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தித்தாள் துணுக்குகள்:

இதைப் பகிர