ஒய் எஸ் எஸ் நூற்றாண்டை கொண்டாடுகிறது.

4 ஏப்ரல், 2017

மார்ச் 22, 2017, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

சுமார் 1500 பக்தர்கள், ராஞ்சியில் மார்ச் 19-23 வரை, நூற்றாண்டை கொண்டாடுவதற்காக நடந்த ஒரு ஐந்து நாள் விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவில், பரமஹம்ஸரால் போதிக்கப்பட்ட தியான விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கான எப்படி-வாழ-வேண்டும் கோட்பாடுகள் பற்றிய தொடர் வகுப்புகள், தினசரி காலை மாலை கூட்டுத் தியானங்கள், நீண்ட நேர கீதங்கள் இசை மற்றும் பண்டைய கிரியா யோக விஞ்ஞானத்தில் தீட்சை ஆகியவை இடம் பெற்றிருந்தன.

Sannyasis of YSS and SRF during Sharad sangam in Ranchi.

ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் இன் மூத்த சன்னியாசிகள் ஒய் எஸ் எஸ்
நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான மார்ச் 19- ம் தேதியன்று கூடியிருந்த பக்தர்களுக்கு பிரார்த்தனை வழிபாடுகளை நடத்துகின்றனர்.

1917ல், மேற்கு வங்காளத்திலுள்ள திஹிகா எனும் கிராமத்தில் ஒரு சிறிய ஆசிரமம் மற்றும் சிறுவர்களுக்கான பள்ளியுடன் ஒய் எஸ் எஸ் தொடங்கப் பெற்றது. ஒரு வருடம் கழித்து பரமஹம்ஸர் தனது மாணவர்களுடன் ராஞ்சிக்கு (தற்போது இது ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரம்) குடிபெயர்ந்தார். அங்கு ஒரு ஆசிரமத்தை நிறுவினார், அது இன்று செழித்தோங்கும் ஆன்மீக நிறுவனத்தின் மையமாகத் திகழ்கிறது. பரமஹம்ஸரால் தொடங்கப்பட்ட சன்னியாசிப் பரம்பரையால் வழிநடத்தப்பட்டு, ஒய் எஸ் எஸ் இன்று இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இல்லற பக்தர்களையும் நூற்றுக்கணக்கான தியானக் குழுக்களையும் கொண்டுள்ளது.

1920ல், தன் பரம்பரை குருமார்களின் கட்டளைக்கிணங்க, யோக விஞ்ஞானத்தை அமெரிக்காவிற்கு கொணர்ந்து தன் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக செல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பை நிறுவினார்.

மார்ச் 7, 2017ல் இந்திய அரசாங்கம் ஒய் எஸ் எஸ் இன் நூற்றாண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் ஒரு தபால் தலையை வெளியிட்டது. இந்தியாவின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், பரமஹம்ஸரையும் அவரது ஆன்மீக நிறுவனத்தையும், புது தில்லியில் தபால் தலை வெளியிட்டு விழாவை முன்னின்று நடத்தியதன் வாயிலாக, மேன்மைப் படுத்தினார்.

Mrinalini Mata in her later years.

ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சங்கமாதாவிடமிருந்து வாழ்த்துரை

ராஞ்சி விழா, மார்ச் 19 அன்று, இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக லாஸ் ஏஞ்சலீஸிலுள்ள சர்வதேச தலைமையகத்திலிருந்து பயணம் மேற்கொண்ட எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் இயக்குனர் குழு உறுப்பினரான சுவாமி விஸ்வானந்தாவினால், தொடங்கப்பட்டது. அவர், சங்கமாதாவும் (“சொஸைடியின் ஆன்மீக அன்னை”) நான்காவது தலைவியுமான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து வந்த செய்தியின் சில வார்த்தைகளைப்
பகிர்ந்து கொண்டார். ஸ்ரீ மாதா அவர்கள் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் தொலைபேசியில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் தன் அன்பையும் அருளாசிகளையும் வழங்குவதற்காக தொடர்பு கொண்டிருந்தார். பிறகு, ஒய் எஸ் எஸ் நூற்றாண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு
ஸ்ரீ ஸ்ரீ மாதாவால் எழுதப்பட்ட முழு செய்தியும் வாசிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து, ஒய் எஸ் எஸ் பொதுச் செயலாளர் சுவாமி ஸ்மரணானந்தா ஒரு எழுச்சியுரை ஆற்றினார்.

ஒய் எஸ் எஸ் இன் பிறப்பிடத்திற்கு ஒரு யாத்திரை

Devotees in Dihika.

Devotees around the pond in Dihika ashram.

ராஞ்சியிலிருந்து திஹிகாவிற்கு மார்ச் 21ம் தேதி மேற்கொண்ட யாத்திரை தான் ஒரு சிறப்பு அம்சம். சுமார் 1200 பக்தர்கள், ஒய் எஸ் எஸ், இந்திய அரசுக்கு சொந்தமான இரயில்வே நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ரயிலில், நான்கு மணிநேர பயணத்தை மேற்கொண்டனர்.
திஹிகாவில் மேலும் 500 பக்தர்கள் இணைந்தனர். அங்கு பரமஹம்ஸரின் முதல் பள்ளி தொடங்கப்பட்ட இடத்தில், இப்போது ஒய் எஸ் எஸ் ஒரு தியான மையத்தையும் ஏகாந்த இல்லத்தையும் கொண்டுள்ளது.

விழாக்கோலம் மிகுந்த ஒரு நாள் நிகழ்வில் இரயில் நிலையங்களுக்கு சென்றுவந்த ஊர்வலங்கள், கூட்டுத் தியானங்கள், இரயில் தெய்வீக பஜனைகள்,
திஹிகா மையத்தில் சுவாமி ஸ்மரணானந்தா மற்றும் விஸ்வானந்தாவினால் எழுச்சியூட்டும் உரைகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சுவையான உணவுகள் மற்றும் அவர்களுக்கு இயற்கை காட்சி நிறைந்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஓய்வெடுக்கவும், நுகர்ந்து மகிழ்வதற்கான ஒரு நேரம் என்பவை, இடம்பெற்றன.
ஒரு நினைவுப் பரிசாக, ஒவ்வொருவரும் ஒய் எஸ் எஸ் நூற்றாண்டு தபால் தலையின் முதல்நாள் அட்டையை பெற்றனர்.

ஜார்கண்டின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்

Sri Raghubar Das — Chief minister of Jharkhand, meditating with Yogoda Monks.

Main building of Yogoda Math, Ranchi.

ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தின் நிர்வாகக் கட்டிடம் – பரமஹம்ஸர் வாழ்ந்து, போதித்த அதே கட்டிடம் – ஒய் எஸ் எஸ் நூற்றாண்டைக் கொண்டாடும் வண்ணம், மார்ச் 22, 2017 அன்று விசேஷமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

ஒய் எஸ் எஸ், மார்ச் 22ம் தேதியை “ நிறுவனர் நாளாக” அனுசரிக்கிறது, இந்த வருட விசேஷ நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் ஒரு மாலை நேர நிகழ்ச்சி இடம் பெற்றது, அதில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஸ்ரீ ராகுபர் தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஒய் எஸ் எஸ் பொதுச் செயலாளர் சுவாமி ஸ்மரணானந்தாவின் உரை மற்றும் ஒரு கூட்டுத் தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து முதலமைச்சர், இந்தியாவிற்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் லௌகீக முன்னேற்றத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் மிகவும் தேவைப்படும் ஒரு சமநிலையை எட்டுவதற்கு உதவும் பரமஹம்ஸரது நிறுவனத்தின் பணியின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று, பரமஹம்ஸ யோகானந்தரது போதனைகளின் மிக உயர்ந்த அம்சத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது. அன்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடைபெற்ற சடங்குகளில் ஏராளமான பக்தர்கள் கிரியா யோகத்தில் தீட்சை பெற்றனர். அந்த நாளின் முடிவில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களுக்கு ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள், பிரியாவிடை கொடுத்தனர். அவர்கள் பரமஹம்ஸரது ஆன்மீகப் பணிச் சரித்திரத்தின் ஒரு முக்கியமான நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றதால், ஆன்மீகமாகப் புத்துயிரூட்டப்பட்டு நன்றியுணர்வுடன் இல்லம் திரும்பினர்.

திஹிகா யாத்திரை மற்றும் ராஞ்சியில் நடந்த நூற்றாண்டு YSS இணையதள புகைப்பட ஆல்பங்களைப் பார்வையிடவும் உங்களை அழைக்கிறோம்.

யோகதா சத்சங்க சொஸைடி இன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து வந்த செய்தி:

அன்புக்குரியவர்களே,
நமது பேரன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா நிறுவப்பட்டதை நினைவு கூரும் வண்ணம் இந்த நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் ஒன்றாகக் கொண்டாடி மகிழும்போது என் மனம், களிப்புறுகிறது. நான் உங்கள் அனவருக்கும் அன்பான வாழ்த்துக்களையும் இறை அருளாசிகளையும் அனுப்புகிறேன்; மேலும் நான், நமது கரியாதைக்குரிய குருதேவரையும், அவரது பணி இந்தியாவிற்கும் இந்த உலகிற்கும் ஆற்றியுள்ள சேவையெல்லாம் மேன்மைப் படுத்துவதற்காக நீங்கள் மிகுந்த பாசத்துடனும் கவனத்துடனும் திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ள பல அழகிய நிகழ்வுகளை யெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு ஆத்மார்த்தமாக உங்களுடன் அவற்றில் இணைந்து கொள்வேன். குருதேவரின் யோகதா சத்சங்க சொஸைடி எவ்வாறு திஹிகாவில் ஒரு சிறிய “எப்படி வாழ வேண்டும்” வகைப் பள்ளியிலிருந்து, விசாலமான ஆசிரமங்கள், உயிர்த்துடிப்புள்ள மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் சன்னியாசப் பரம்பரை, இந்தியா முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட தியான மையங்கள் அத்துடன் அநேக கல்வி நிறுவனங்கள் மற்றும் அறப்பணிகள் ஆகியவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக வளர்ந்திருப்பதை நான் எண்ணிப் பார்க்கும் போது, நான் குருதேவரின் மாபெரும் ஆனந்தத்தை உணர்கிறேன். இந்த மிக்க மகிழ்ச்சியான நிறைவு விழா தருணத்தில் அவர் தனது தெய்வீக அன்பு மற்றும் அருளாசிகளை அனைத்து பக்தர்களுக்கும் – உண்மையில் இந்தியா முழுவதற்கும், பொழிந்து கொண்டிருக்கிறார் மற்றும் இந்த வளர்ச்சிக்கு எவரது முயற்சிகளெல்லாம் பங்களித்துள்ளனவோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரது எல்லையற்ற ஆன்ம – பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஒய் எஸ் எஸ் ஸின் எளிய தொடக்கத்திலிருந்து, இந்த நூறு வருடங்களில், இந்தியா மற்றும் மேலைநாடுகளில் நமது குருதேவர், தெய்வீக அன்பின் ஓர் உண்மையான அவதாரம் மற்றும் உலகத்தை மாற்றும் பணிக்காக அவதரித்த ஓர் சகாப்தம் படக்கும் ஜகத்குருவென்றும் அங்கீகருக்கப் பட்டுள்ளார். புனித விஞ்ஞானத்தைப் பரப்புதல் அத்துடன் நமது ஆன்ம முன்னேற்றத்தையும், மனித இனத்தின் மேல் நோக்கிய வளர்ச்சியையும் விரைவுபடுத்துவதற்காக, நவீனயுகத்திற்கு, ஒரு விஷேச சமய அமைப்பை நிறுவுதல் ஆகியவை அவருக்கு இறைவனால் கட்டளையிடப்பட்டபணியாக இருந்தன. அவரது முதல் “எப்படி வாழ வேண்டும்” வகைப்பள்ளி நிறுவப்பட்ட மூன்று வருடங்களுக்குப்பின் ராஞ்சியில், அவர் அமெரிக்காவிற்குச் சென்று இந்த அதிமுக்கியமானப் பணியை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைத் தெரிவிக்கும் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். அதன்பிறகு அவர் மேற்கிலேயே வாழ்வதற்கு விதிக்கப்பட்டாலும், அவரது அனைத்தையும் உள்ளடக்கும் உணர்வுநிலை மற்றும் உள்ளத்தில் இந்தியா எப்பொழுதும் இடம் பெற்றிருந்தது. என் இந்தியா எனும் தன் கவிதையில் அவர் எழுதினார்,” நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஏனென்றால் அங்குதான் முதன்முதலாக இறைவனையும் மற்றும் அனைத்து நல்ல விஷங்களையும் நேசிக்கக் கற்றுக் கொண்டேன்.” இந்தியாவில் அவர்தன் பணியைத் தொடங்னார், மேலும் தன் தாயகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வார்த்தைகளுடன் தன் உடலை நீத்தார் – அவரது ஆன்மா மற்றும் இந்தியாவால் எழுச்சியூட்டப் பணி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

மேற்கில் தன் பணியை நிலைநாட்டுவதில் எண்ணற்ற பொறுப்புகள் இருந்த போதிலும் இந்தியாவிலுள்ள ஒய் எஸ் எஸ் மற்றும் தன் சீடர்களின் நலம் பற்றிய அன்பான அக்கறை அவரிடம் மாறாமல் இருந்தது. 1935-36 ல் இறைவன் அவர் இந்தியாவிற்குத் திரும்ப ஒரு வாய்ப்பு அளித்ததும், அவர் நாடு முழுவதும் உரையாற்றி, ஒய் எஸ் எஸ் – ன் திர்காலத்திற்கு நிதியுதவியும் பாதுகாப்பும் அளிப்பதற்கு தன்னால் மூடிந்த அனைத்தையும் செய்தார். அநேக தடவைகள், இந்தியாவிற்கு மீண்டும் விஜயம் செய்வதற்கான தன் நம்பிக்கையைப்பற்றி அவர் பேசக் கேட்டுள்ளேன். ஆனால், தன் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் தெய்வத் திருவன்னையின் விருப்பம் அதுவல்ல என்று உணர்ந்தபோது, அவர் ஶ்ரீ ஶ்ரீ தாயாமாதா அவர்களிடம், இந்தியாவிலுள்ள தன் பணியை தான் எவ்வாறு நிறைவேற்றியிருப்பாரோ அவ்வாறு நிறைவேற்றும் பொறுப்பினை ஒப்படைத்தார். தன் இதயத்துடனும் ஶ்ரீ தாயா மாதா அந்த புனித நம்பிக்கையை நிறைவேற்றி, பக்தர்களுக்கு உண்மையிலேயே பேரன்புமிக்க தெய்வத் திருவன்னையின் பிரதிபலிப்பாகமாறி, குருதேவரின் உணர்வுநிலையுடனான தனது முழு இணக்கம் வாயிலாக அவர்களுக்கு எழுச்சியூட்டினார். அந்த உயர்தளத்திலிருந்து தான் அவர் ஒய் எஸ் எஸ் பணியை, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, குருதேவரின் இலட்சியங்கள் மற்றும் விருப்பங்களுக்கு முற்றிலும் இணங்க வழிநடத்தி, இன்று நாம் பார்க்கும் சொஸைடியின் வளர்ச்சிக்கு ஊட்டமளித்தார். ஹன்சா சுவாமி சியாமானந்தரால் ஶ்ரீ தயாமாதாவிற்கு அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற உதவி மற்றும் ஆதரவிற்கும், மற்றும் அநேக பிற ஒய் எஸ் எஸ் பக்தர்களுடைய ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்கள். சியாமானந்தரின் அர்ப்பணிப்பு, தயாமாதாவின் முயற்சிகளுக்கு முக்கிய பங்கு ஆற்றியது. ஆதரவளித்த பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாய் இருப்பதால் அவர்கள் எங்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளார்கள்.

தயா மாதாவின் பல இந்தியப் பயணங்களின் போது, அவருடன் சேர்ந்து சென்றது எனது பாக்கியம். நாங்கள் சந்தித்த ஒய் எஸ் எஸ் பக்தர்களிடம் பிரதிபலித்த, இந்தியாவின் சிறப்புப் பாரம்பரியமான, இறைவன் மீதான தூய்மையான மனமார்ந்த பக்தியை தயாமாதா போற்றியது போல் நானும் போற்றினேன். குருதேவரின் தாயகத்திற்குச் சென்ற அந்த விஜயங்களும், பிற்காலப் பயணங்களும் என்மனத்திலும் இதயத்திலும் பொறிக்கப்பட்டுள்ள எனது ந்ங்காத நினைவுகளில் இடம் பொற்றுள்ளன. நான் அடிக்கடி அந்நினைவுகளில் ஆழ்கிறேன், அங்குள்ள குருதேவரின் சீடர்களுக்காகவும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் பணிக்காகவும் மற்றும் அப்பணியை முன்னெடுத்துச் செல்ல மிகுந்த சேவை செய்யும் அனைவருக்காகவும் எனது மிக ஆழ்ந்த பிரார்த்தனைகளை அனுப்பாமல், ஒரு நாளும் கழிந்ததில்லை. ஒய் எஸ் எஸ் செயல்பாடுகள் குறித்தப் புகைப்படங்களை பார்க்கும் போது, குருதேவரது போதனைகளை பயிற்சி செய்வதில் மிகவும் ஆழ்ந்து செல்ல உற்சாகமாக உள்ள, திரளான அந்த அழகிய ஆன்மாக்களை தியானம் புரிந்து ஞானத்தைப் பெறுவதற்கும் எண்ணற்ற வழிகளில் குருதேவரின் பணிக்கு மகிழ்ச்சியாக சேவை புரிவதற்கு தவறாமல் ஒன்று கூடும் அவர்களைக் கண்டு நான் சிலிர்ப்புறுகிறேன்.விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த பக்தர்கள் குழு இன்று இறைவன் மற்றும் அவனது அன்பில் இணைந்துள்ள மாபெரும் ஆன்மீகக் குடும்பமாக மாறியுள்ளது.

குருதேவர் எங்கள் மத்தியில் நடமாடிய நாட்களில் இருந்தது போல் தன் சீடர்களின் நலன்களிலும், முன்னேற்றத்திலும் இன்றும் அக்கறையுடனுள்ளார். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு சிரத்தையுடன் அவரது தியான உத்திகளைப்பயிற்சி செய்தல் மற்றும் தெய்வீக அன்னையை மகிழ்விப்பதற்காக உங்கள் வாழ்க்கைகள் வாழ்தல் ஆகியவற்றின் வாயிலாக முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பார்ப்பதுதான் குருதேவருக்கு மிகுந்த உவகையை அளிக்கிறது. நீங்கள் ஆன்மீக ஞானத்தில் வளர்ந்து, ஓர் என்றும் ஆழ்ந்த, மற்றும் இனிமையான இறைவனுடனான அக உறவை ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கும் பொழுது குருதேவர் களிப்புறுகிறார், ஏனென்றால் அவர் உங்களுக்கு மிக உயர்ந்ததையே விழைகிறார். நீங்கள் அவருக்குச் செலுத்தக்கூடிய ஒப்பற்ற அஞ்சலியானது, நூறு வருடங்களுக்கு முன் எந்த இறை அன்பு மற்றும் சேவை எனும் தெய்வீக இலட்சியங்களின் அடிப்படையில் இந்தப் பணியை நிறுவினாரோ, அவற்றின் அயரிய எடுத்துக்காட்டுகளாகத் திகழும் சாதகராக நீங்கள் மாறுவதுதான்.

பரமஹம்ஸரது செய்தியினால் பலரது வாழ்க்கைகள் தாக்கமுறப்பட்டுள்ளன, ஏனெனில் ஆன்மாவின் ஒன்றினைக்கும் மொழியில், தெய்வீகெ அன்பு மற்றும் சாசுவத உண்மையின் மொழியில், அவர் பேசுகிறார். அவரது போதனைகள் மற்றும் இறைவனுக்கான அவரது உயரிய அன்பு எனும் காந்தம், அனைத்து கலாச்சார, இன, தேசிய மற்றும் சமய ரீதியான பேதங்களின் எல்லைகளுக்கு அப்பால் கடந்து செல்கின்றன. ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் பின் தாக்கமானது, முதலில் மென்மையான இளங்காற்றாகத் தோன்றி படிப்படியாக அது, இறைவனது குழந்தைகளின் வாழையிலிருந்து இருளை அகற்ற உதவிபுரியும் ஒரு வலிமைமிக்க காற்றாக மாறும் என்று குருதேவர் எங்களிடம் கூறினார். இந்த நூற்றாண்டு நிறைவின் போது நாம்நன்மைக்கான இந்த சக்தியின் தொடக்கத்தை மட்டுமின்றி அதன் அதிகரிப்பையும் கொண்டாடுகிறோம்; நம்முன் உள்ள நூற்றாண்டு காலத்தில் அதன் ஆன்மீகமாக்கும் தாக்கங்கள் இன்றும் கூடுதல் விசையைப் பெற விதிக்கப்பட்டுள்ளன. குருதேவர் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் நிறுவனத்தை, தனது இலட்சியமான கிழக்கு மற்றும் மேற்கின் ஒற்றுமைக்கு உருக்கொடுப்பதற்கும் மற்றும், அவரது அன்பு மற்றும் ஞானத்தின் ஒரு சாசுவத தூய சாதனமாகத் திகழ்வதற்கும், நிறுவினார்.

அந்தப் புனித மரபுரிமைச் செல்வத்தைச் சார்ந்து உங்கள் வாழ்க்கைகளை அமைத்து கொண்டிருக்கும் உங்கள் அனைவரின் முயற்சிகளை அவர் ஆசிர்வதிக்க நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் உங்கள் முகங்களில் பார்த்துள்ள, அந்த முயற்சிகள் கொணரும் அக மாற்றம் மற்றும் ஆனந்தமிக்க உற்சாகம் இந்த தெய்வீகப் போதனைகளின் என்றும் வளமும் சக்திக்கு மிகப்பெரிய சான்றாகும்; மற்றும் அத்து குருதேவரது பணிக்கு வரவிருக்கும் வருடங்களில் புத்துணர்ச்சியூட்டுவதைத் தொடரும். ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் இடைவிடாத அருளாசிகளுடன்,

ஶ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர

Facebook
X
WhatsApp