இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், YSS துவாரஹாத் ஆசிரமத்திற்கும் பாபாஜி குகைக்கும் வருகை புரிகிறார்.

1 நவம்பர், 2025

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மாண்புமிகு ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் அவர்கள், 2025 அக்டோபர் 28 அன்று, துவாரஹாத், யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்திற்கு வருகை தந்தார்.

ஸ்வாமி வாசுதேவானந்தா, ஸ்வாமி விஸ்வானந்தாவுடனும், ஐந்து YSS சன்னியாசிகளுடனும் அவரை வரவேற்றார். அவர் வந்தடைந்ததும், அவருக்கு ஒரு மலர்க்கொத்து வழங்கப்பட்டது. அவரும் அவரது குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் தியான மந்திருக்கும், கிருஷ்ணா மந்திருக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். தியான மந்திரில் அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்; கிருஷ்ணா மந்திரில் வணக்கம் செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மாண்புமிகு ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் ஸ்வாமி வாசுதேவானந்தாவால் வரவேற்கப்படுகிறார்
ஸ்வாமி வாசுதேவானந்தா, ஸ்வாமி விஸ்வானந்தா மற்றும் பிற YSS சன்னியாசிகள், அவரை தியான மந்திருக்கு அழைத்துச் செல்கின்றனர்...
...அங்கு அவர் பீடத்தை வணங்கி சிறிது நேரம் தியானம் செய்கிறார்.
தியான மந்திருக்கு வெளியே ஸ்ரீ கோவிந்த் சன்னியாசிகளுடன் இருக்கும் குரூப் ஃபோட்டோ எடுக்கப்படுகிறது.

ஆசிரம விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது, ஸ்வாமி வாசுதேவானந்தா ஸ்ரீ கோவிந்த் அவர்களுக்கு ஒரு சால்வை, த யோகா ஆஃப் த பகவத் கீதா என்ற புத்தகத்தின் புதிதாக வெளியிடப்பட்ட இந்தி நூல் மற்றும் 2026 YSS சுவர் காலண்டர் ஆகியவற்றை வழங்கினார். அவருடன் வந்திருந்த வேறு சில பிரமுகர்களுக்கும், அதே புதிதாக வெளியிடப்பட்ட நூலுடன் சால்வை மற்றும் காலண்டர் ஆகியவையும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ கோவிந்த் வருகையாளர் ஏட்டில் புகழஞ்சலி எழுதுகிறார்.
ஸ்வாமி வாசுதேவானந்தா ஸ்ரீ கோவிந்த் அவர்களுக்கு ஒரு சால்வை, “த யோகா ஆஃப் த பகவத் கீதா” என்ற புத்தகத்தின் புதிதாக வெளியிடப்பட்ட இந்தி நூல் மற்றும் 2026 YSS சுவர் காலண்டர் ஆகியவற்றை வழங்குகிறார்.

குழுவினர் ஒவ்வொருவருக்கும் பிரசாதம் மற்றும் 2026 YSS காலண்டர் வழங்கப்பட்டது.

ஸ்ரீ கோவிந்த் அவர்கள், ஸ்வாமி விஸ்வானந்தா மற்றும் ஸ்வாமி வாசுதேவானந்தா ஆகியோருடன் பல நிமிடங்கள் உரையாடி, ஆசிரமத்தின் பல்வேறு செயல்பாடுகளைப் பற்றி அறிந்ததில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அடுத்த ஆண்டு மீண்டும் யோகதா ஆசிரமத்திற்கு வருகை தர வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்தையும் தெரிவித்தார்.

அவர் சுமார் அரை மணி நேரம் ஆசிரமத்தில் கழித்தார்.

அக்டோபர் 29, 2025 அன்று மகாவதார பாபாஜி குகைக்கு வருகை

ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் மறுநாள் துவாரஹத் அருகிலுள்ள பாண்டுகோலி மலையில் அமைந்துள்ள மகாவதார பாபாஜி குகைக்கு வந்தடைந்தார்.

ஒரு நாள் கழித்து, மகாவதார பாபாஜி குகைக்கு வந்த ஸ்ரீ கோவிந்த், ஸ்மிருதி பவனில் உள்ள மகாவதார பாபாஜியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகிறார்.
அவர் YSS சன்னியாசிகளால் மகா அவதார பாபாஜி குகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

YSS சன்னியாசிகள் அவரை ஒரு பூங்கொத்துடன் வரவேற்றபோது, அவர் அதை ஏற்கவில்லை. பாபாஜி மீது தான் கொண்ட ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தி, “பெறவேண்டியது நான் இல்லை; மாறாக, நான் தான் அவருடைய பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறினார். அதன் பிறகு, அவர் ஸ்ம்ரிதி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகாவதார பாபாஜியின் உருவப்படத்திற்கு முன் சிறிது நேரம் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பாபாஜி குகைக்குச் சென்றார், அங்கு ஸ்வாமி விஸ்வானந்தா நுழைவாயிலில் அவரை வரவேற்று குகைக்குள் அழைத்துச் சென்றார். அவர் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்தார், அதன் பிறகு ஸ்வாமி விஸ்வானந்தா அவருக்கு ஒரு ருத்ராட்ச மாலை பரிசளித்தார்.

அவர் குகைப் பகுதிக்குக் கீழே உள்ள ஸ்மிருதி பவனுக்கு மிதமான சிற்றுண்டிக்காகத் திரும்பினார். ஸ்வாமிகள் விஸ்வானந்தா மற்றும் சைதன்யானந்தா, பாபாஜி குகையின் வரலாற்றைப் பகிர்ந்துகொண்டதுடன், ஆண்டு முழுவதும் குகைக்கு வரும் யாத்ரீகர்களின் எப்போதும் அதிகரித்து வரும் எண்ணிக்கைக்குச் சிறப்பாகச் சேவை செய்யவும் ஆதரவளிக்கவும், குகைப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மேம்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தனர். ஸ்ரீ கோவிந்த் ஆழ்ந்த ஆர்வம் காட்டி, இந்தத் திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார். மலையிலிருந்து தனது காருக்குத் திரும்பிச் சென்றபோது, வருகையாளர் மையம் மற்றும் ஒரு பன்முகப் பயன்பாட்டு கட்டடம் கட்டப்பட்டு வரும் YSS கட்டுமானப் பணித் தளம் அவருக்குக் காண்பிக்கப்பட்டது.

பாபாஜியின் குகையில் தியானம் செய்தல்
ஸ்ரீ கோவிந்த் அவர்கள், ஸ்வாமி விஸ்வானந்தா, உள்ளூர்வாசிகள் மற்றும் அவரது பாதுகாப்புப் படையினருடன் குகைக்கு வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து எதிர்காலத்தில் ஆசிரமத்திற்கு தமது முழு ஆதரவையும் உறுதியளித்தார். பின்னர், YSS துவாரஹாத் ஆசிரமம் மற்றும் பாபாஜி குகை ஆகிய இரண்டிலும் பெற்ற மேன்மையுறச் செய்யும் மற்றும் தகவல்கள் நிறைந்த அனுபவத்திற்காக தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அடுத்த நாள், அக்டோபர் 30, 2025 அன்று, முன்னாள் குடியரசுத் தலைவரின் பி.ஏ. ஸ்ரீ கோவிந்த் அவர்களை ஸ்வாமி தைர்யானந்தாவுடன் தொலைபேசியில் இணைத்தார். அப்போது, YSS ஆசிரமத்தில் தான் பெற்ற உபசரிப்பிற்காக தனது மனமார்ந்த மகிழ்ச்சியையும் ஆழ்ந்த நன்றியையும் அவர் வெளிப்படுத்தினார்.

இதைப் பகிர